The Quran in Tamil - Surah Fatiha translated into Tamil, Surah Al-Fatihah in Tamil. We provide accurate translation of Surah Fatiha in Tamil - التاميلية, Verses 7 - Surah Number 1 - Page 1.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ (1) அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்) |
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (2) எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன் |
الرَّحْمَٰنِ الرَّحِيمِ (3) (அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் |
مَالِكِ يَوْمِ الدِّينِ (4) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே) |
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (5) (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம் |
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ (6) நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக |
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (7) (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல |