×

(நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய 58:22 Tamil translation

Quran infoTamilSurah Al-Mujadilah ⮕ (58:22) ayat 22 in Tamil

58:22 Surah Al-Mujadilah ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mujadilah ayat 22 - المُجَادلة - Page - Juz 28

﴿لَّا تَجِدُ قَوۡمٗا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ يُوَآدُّونَ مَنۡ حَآدَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَوۡ كَانُوٓاْ ءَابَآءَهُمۡ أَوۡ أَبۡنَآءَهُمۡ أَوۡ إِخۡوَٰنَهُمۡ أَوۡ عَشِيرَتَهُمۡۚ أُوْلَٰٓئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ ٱلۡإِيمَٰنَ وَأَيَّدَهُم بِرُوحٖ مِّنۡهُۖ وَيُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ رَضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱللَّهِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴾
[المُجَادلة: 22]

(நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களிடம் நேசம் கொண்டு உறவாடுவதை நீர் காண மாட்டீர். அவர்கள், தங்கள் பெற்றோர்களாக அல்லது தங்கள் சந்ததிகளாக அல்லது தங்கள் சகோதரர்களாக அல்லது தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! (அவர்களை நம்பிக்கையாளர்கள் நேசிக்க மாட்டார்கள்.) இவர்களுடைய உள்ளங்களில்தான் அல்லாஹ் நம்பிக்கையை பதியவைத்துத் தன் அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கிறான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கி விடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள். இவர்கள்தான் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தான் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله, باللغة التاميلية

﴿لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله﴾ [المُجَادلة: 22]

Abdulhameed Baqavi
(napiye!) Enta makkal allahvaiyum, marumai nalaiyum (meyyakave) nampikkai kontirukkinrarkalo avarkal, allahvukkum avanutaiya tutarukkum maru ceypavarkalitam necam kontu uravatuvatai nir kana mattir. Avarkal, tankal perrorkalaka allatu tankal cantatikalaka allatu tankal cakotararkalaka allatu tankal nerunkiya uravinarkalaka iruntalum cariye! (Avarkalai nampikkaiyalarkal necikka mattarkal.) Ivarkalutaiya ullankaliltan allah nampikkaiyai patiyavaittut tan arulaik kontum ivarkalaip palappatutti vaittirukkiran. Totarntu niraruvikal otikkontirukkum corkkankalilum ivarkalaip pukutti vituvan. Atil enrenrum ivarkal tanki vituvarkal. Ivarkalaip parri allah tiruptiyataivan. Avarkalum allahvaip parrit tiruptiyataivarkal. Ivarkaltan allahvin kuttattinar. Niccayamaka allahvin kuttattinartan verri ataintavarkal enpatai ninkal arintu kollunkal
Abdulhameed Baqavi
(napiyē!) Enta makkaḷ allāhvaiyum, maṟumai nāḷaiyum (meyyākavē) nampikkai koṇṭirukkiṉṟārkaḷō avarkaḷ, allāhvukkum avaṉuṭaiya tūtarukkum māṟu ceypavarkaḷiṭam nēcam koṇṭu uṟavāṭuvatai nīr kāṇa māṭṭīr. Avarkaḷ, taṅkaḷ peṟṟōrkaḷāka allatu taṅkaḷ cantatikaḷāka allatu taṅkaḷ cakōtararkaḷāka allatu taṅkaḷ neruṅkiya uṟaviṉarkaḷāka iruntālum cariyē! (Avarkaḷai nampikkaiyāḷarkaḷ nēcikka māṭṭārkaḷ.) Ivarkaḷuṭaiya uḷḷaṅkaḷiltāṉ allāh nampikkaiyai patiyavaittut taṉ aruḷaik koṇṭum ivarkaḷaip palappaṭutti vaittirukkiṟāṉ. Toṭarntu nīraruvikaḷ ōṭikkoṇṭirukkum corkkaṅkaḷilum ivarkaḷaip pukutti viṭuvāṉ. Atil eṉṟeṉṟum ivarkaḷ taṅki viṭuvārkaḷ. Ivarkaḷaip paṟṟi allāh tiruptiyaṭaivāṉ. Avarkaḷum allāhvaip paṟṟit tiruptiyaṭaivārkaḷ. Ivarkaḷtāṉ allāhviṉ kūṭṭattiṉar. Niccayamāka allāhviṉ kūṭṭattiṉartāṉ veṟṟi aṭaintavarkaḷ eṉpatai nīṅkaḷ aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
Allahvaiyum iruti nalaiyum nampum camukattinar, allahvaiyum avanatu tutaraiyum pakaittuk kontavarkalai necippavarkalaka (napiye!) Nir kanamattir. Avarkal tankal perrorayinum tankal putalvarkalayinum tankal cakotararkalayinum tankal kutumpattinarayinum cariye, (enenil) attakaiyavarkalin itayankalil, (allah) imanai eluti(p patittu) vittan, melum avan tannitamiruntu (arul ennum) anmavaik kontu palaptuttiyirukkiran. Cuvarkkac colaikalil enrenrum irukkumpati avarkalaip piravecikkac ceyvan, avarrin kile arukal otikkontu irukkum. Allah avarkalaip poruntik kontan, avarkalum avanaip poruntik kontarkal. Avarkaltam allahvin kuttattinar, arintukolka: Niccayamaka allahvin kuttattinartam verri peruvarkal
Jan Turst Foundation
Allāhvaiyum iṟuti nāḷaiyum nampum camūkattiṉar, allāhvaiyum avaṉatu tūtaraiyum pakaittuk koṇṭavarkaḷai nēcippavarkaḷāka (napiyē!) Nīr kāṇamāṭṭīr. Avarkaḷ taṅkaḷ peṟṟōrāyiṉum taṅkaḷ putalvarkaḷāyiṉum taṅkaḷ cakōtararkaḷāyiṉum taṅkaḷ kuṭumpattiṉarāyiṉum cariyē, (ēṉeṉil) attakaiyavarkaḷiṉ itayaṅkaḷil, (allāh) īmāṉai eḻuti(p patittu) viṭṭāṉ, mēlum avaṉ taṉṉiṭamiruntu (aruḷ eṉṉum) āṉmāvaik koṇṭu palapṭuttiyirukkiṟāṉ. Cuvarkkac cōlaikaḷil eṉṟeṉṟum irukkumpaṭi avarkaḷaip piravēcikkac ceyvāṉ, avaṟṟiṉ kīḻē āṟukaḷ ōṭikkoṇṭu irukkum. Allāh avarkaḷaip poruntik koṇṭāṉ, avarkaḷum avaṉaip poruntik koṇṭārkaḷ. Avarkaḷtām allāhviṉ kūṭṭattiṉar, aṟintukoḷka: Niccayamāka allāhviṉ kūṭṭattiṉartām veṟṟi peṟuvārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek