×

மூஸா, நாம் குறித்த நேரத்தி(ல் ‘‘தூர்' என்னும் மலைக்குத் தம்முடன் வருவத)ற்காக தம் மக்களில் எழுபது 7:155 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:155) ayat 155 in Tamil

7:155 Surah Al-A‘raf ayat 155 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 155 - الأعرَاف - Page - Juz 9

﴿وَٱخۡتَارَ مُوسَىٰ قَوۡمَهُۥ سَبۡعِينَ رَجُلٗا لِّمِيقَٰتِنَاۖ فَلَمَّآ أَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ قَالَ رَبِّ لَوۡ شِئۡتَ أَهۡلَكۡتَهُم مِّن قَبۡلُ وَإِيَّٰيَۖ أَتُهۡلِكُنَا بِمَا فَعَلَ ٱلسُّفَهَآءُ مِنَّآۖ إِنۡ هِيَ إِلَّا فِتۡنَتُكَ تُضِلُّ بِهَا مَن تَشَآءُ وَتَهۡدِي مَن تَشَآءُۖ أَنتَ وَلِيُّنَا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَاۖ وَأَنتَ خَيۡرُ ٱلۡغَٰفِرِينَ ﴾
[الأعرَاف: 155]

மூஸா, நாம் குறித்த நேரத்தி(ல் ‘‘தூர்' என்னும் மலைக்குத் தம்முடன் வருவத)ற்காக தம் மக்களில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை பூகம்பம் பிடித்(து மூர்ச்சையாகி விழுந்)ததும் அவர் (தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (எங்களை அழித்துவிட வேண்டுமென்று) நீ கருதியிருந்தால் இதற்கு முன்னதாகவே என்னையும் இவர்களையும் நீ அழித்திருக்கலாம். எங்களிலுள்ள சில அறிவீனர்கள் செய்த (குற்றத்)திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்து விடுகிறாயா? இது உன் சோதனையே தவிர வேறில்லை. இதைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவற விடுகிறாய்; நீ நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறாய். நீதான் எங்கள் இறைவன். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு நீ அருள் புரிவாயாக! மன்னிப்பவர்கள் அனைவரிலும் நீ மிக்க மேலானவன்'' என்று(ம் பிரார்த்தித்துக்) கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: واختار موسى قومه سبعين رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو, باللغة التاميلية

﴿واختار موسى قومه سبعين رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو﴾ [الأعرَاف: 155]

Abdulhameed Baqavi
Musa, nam kuritta neratti(l ‘‘tur' ennum malaikkut tam'mutan varuvata)rkaka tam makkalil elupatu ankalait terntetuttar. Avarkalai pukampam pitit(tu murccaiyaki vilun)tatum avar (tan iraivanai nokki) ‘‘en iraivane! (Enkalai alittuvita ventumenru) ni karutiyiruntal itarku munnatakave ennaiyum ivarkalaiyum ni alittirukkalam. Enkalilulla cila arivinarkal ceyta (kurrat)tirkaka enkal anaivaraiyum ni alittu vitukiraya? Itu un cotanaiye tavira verillai. Itaik kontu ni natiyavarkalai vali tavara vitukiray; ni natiyavarkalai nerana valiyil celuttukiray. Nitan enkal iraivan. Ni enkalai mannittu enkalukku ni arul purivayaka! Mannippavarkal anaivarilum ni mikka melanavan'' enru(m pirarttittuk) kurinar
Abdulhameed Baqavi
Mūsā, nām kuṟitta nēratti(l ‘‘tūr' eṉṉum malaikkut tam'muṭaṉ varuvata)ṟkāka tam makkaḷil eḻupatu āṇkaḷait tērnteṭuttār. Avarkaḷai pūkampam piṭit(tu mūrccaiyāki viḻun)tatum avar (taṉ iṟaivaṉai nōkki) ‘‘eṉ iṟaivaṉē! (Eṅkaḷai aḻittuviṭa vēṇṭumeṉṟu) nī karutiyiruntāl itaṟku muṉṉatākavē eṉṉaiyum ivarkaḷaiyum nī aḻittirukkalām. Eṅkaḷiluḷḷa cila aṟivīṉarkaḷ ceyta (kuṟṟat)tiṟkāka eṅkaḷ aṉaivaraiyum nī aḻittu viṭukiṟāyā? Itu uṉ cōtaṉaiyē tavira vēṟillai. Itaik koṇṭu nī nāṭiyavarkaḷai vaḻi tavaṟa viṭukiṟāy; nī nāṭiyavarkaḷai nērāṉa vaḻiyil celuttukiṟāy. Nītāṉ eṅkaḷ iṟaivaṉ. Nī eṅkaḷai maṉṉittu eṅkaḷukku nī aruḷ purivāyāka! Maṉṉippavarkaḷ aṉaivarilum nī mikka mēlāṉavaṉ'' eṉṟu(m pirārttittuk) kūṟiṉār
Jan Turst Foundation
Innum musa nam kurippitta nerattil (tur malaiyil) nam'maic cantippatarkaka, tam camukattariliruntu elupatu ankalait terntetuttar; avarkalaip pukampam parrikkontapotu, avar, "en iraivane! Ni karutiyiruntal, itarku munnare avarkalaiyum ennaiyum ni alittirukkalame! Enkalilulla arivilikal ceyta (kurrat)tirkaka, enkal yavaraiyum ni alittuvitukiraya? Itu unnutaiya cotanaiyeyanri verillai itaikkontu ni natiyavarkalai valitavara vitukiray; innum ni natiyavarkalai ner valiyil natattukiray. Ni tan enkalutaiya patukavalan. Akave enkalukku mannippu alippayaka! Enkalukku kirupai ceyvayaka. Mannippavarkalilellam ni tan mikka menmaiyanavan" enru pirarttittar
Jan Turst Foundation
Iṉṉum mūsā nām kuṟippiṭṭa nērattil (tūr malaiyil) nam'maic cantippataṟkāka, tam camūkattāriliruntu eḻupatu āṇkaḷait tērnteṭuttār; avarkaḷaip pūkampam paṟṟikkoṇṭapōtu, avar, "eṉ iṟaivaṉē! Nī karutiyiruntāl, itaṟku muṉṉarē avarkaḷaiyum eṉṉaiyum nī aḻittirukkalāmē! Eṅkaḷiluḷḷa aṟivilikaḷ ceyta (kuṟṟat)tiṟkāka, eṅkaḷ yāvaraiyum nī aḻittuviṭukiṟāyā? Itu uṉṉuṭaiya cōtaṉaiyēyaṉṟi vēṟillai itaikkoṇṭu nī nāṭiyavarkaḷai vaḻitavaṟa viṭukiṟāy; iṉṉum nī nāṭiyavarkaḷai nēr vaḻiyil naṭattukiṟāy. Nī tāṉ eṅkaḷuṭaiya pātukāvalaṉ. Ākavē eṅkaḷukku maṉṉippu aḷippāyāka! Eṅkaḷukku kirupai ceyvāyāka. Maṉṉippavarkaḷilellām nī tāṉ mikka mēṉmaiyāṉavaṉ" eṉṟu pirārttittār
Jan Turst Foundation
இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், "என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்" என்று பிரார்த்தித்தார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek