سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى (1) (நபியே!) மிக மேலான உமது இறைவனின் திருப்பெயரை நீர் புகழ்ந்து துதி செய்வீராக |
الَّذِي خَلَقَ فَسَوَّىٰ (2) அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன் |
وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ (3) அவனே (அவற்றுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவற்றை அடையக் கூடிய) வழிகளையும் (அவற்றுக்கு) அறிவித்தான் |
وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ (4) அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகிறான் |
فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ (5) பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான் |
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ (6) (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான் |
إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ (7) (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான் |
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ (8) சொர்க்கப் பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம் |
فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ (9) ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கின்ற வரை நீர் உபதேசித்துக் கொண்டே வருவீராக |
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ (10) நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவர், (இதைக் கொண்டு) நல்லறிவை அடைவார் |
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى (11) துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான் |
الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ (12) (எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான் |
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ (13) பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான் |
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ (14) எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார் |
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ (15) அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார் |
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا (16) எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள் |
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ (17) மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும் |
إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ (18) நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும் |
صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ (19) இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கிறது |