×

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் தூதர்கள் பலரை அனுப்பி இருக்கிறோம். (உம்மைப் போலவே) அவர்களுக்கும் 13:38 Tamil translation

Quran infoTamilSurah Ar-Ra‘d ⮕ (13:38) ayat 38 in Tamil

13:38 Surah Ar-Ra‘d ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Ra‘d ayat 38 - الرَّعد - Page - Juz 13

﴿وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ وَجَعَلۡنَا لَهُمۡ أَزۡوَٰجٗا وَذُرِّيَّةٗۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأۡتِيَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۗ لِكُلِّ أَجَلٖ كِتَابٞ ﴾
[الرَّعد: 38]

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் தூதர்கள் பலரை அனுப்பி இருக்கிறோம். (உம்மைப் போலவே) அவர்களுக்கும் மனைவிகளையும், சந்ததிகளையும் கொடுத்திருந்தோம். (ஆகவே, உமக்கு மனைவி, மக்கள் இருப்பதைப் பற்றி இவர்கள் குறை கூறமுடியாது.) அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒரு தூதர் எத்தகைய அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கில்லை. (அவன் முடிவு செய்திருக்கும்) ஒவ்வொன்றுக்கும் தவணையும் (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது. (அது அத்தவணைக்கு முந்தியும் வராது; பிந்தியும் வராது)

❮ Previous Next ❯

ترجمة: ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول, باللغة التاميلية

﴿ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول﴾ [الرَّعد: 38]

Abdulhameed Baqavi
(napiye!) Niccayamaka nam umakku munnarum tutarkal palarai anuppi irukkirom. (Um'maip polave) avarkalukkum manaivikalaiyum, cantatikalaiyum kotuttiruntom. (Akave, umakku manaivi, makkal iruppataip parri ivarkal kurai kuramutiyatu.) Allahvin anumatiyinri oru tutar ettakaiya attatciyaiyum kontu varuvatarkillai. (Avan mutivu ceytirukkum) ovvonrukkum tavanaiyum (kurippittu) elutappattullatu. (Atu attavanaikku muntiyum varatu; pintiyum varatu)
Abdulhameed Baqavi
(napiyē!) Niccayamāka nām umakku muṉṉarum tūtarkaḷ palarai aṉuppi irukkiṟōm. (Um'maip pōlavē) avarkaḷukkum maṉaivikaḷaiyum, cantatikaḷaiyum koṭuttiruntōm. (Ākavē, umakku maṉaivi, makkaḷ iruppataip paṟṟi ivarkaḷ kuṟai kūṟamuṭiyātu.) Allāhviṉ aṉumatiyiṉṟi oru tūtar ettakaiya attāṭciyaiyum koṇṭu varuvataṟkillai. (Avaṉ muṭivu ceytirukkum) ovvoṉṟukkum tavaṇaiyum (kuṟippiṭṭu) eḻutappaṭṭuḷḷatu. (Atu attavaṇaikku muntiyum varātu; pintiyum varātu)
Jan Turst Foundation
(napiye!) Niccayamaka umakku munnarum, nam tutarkalai anuppi vaittom; avarkalukkum manaiviyaraiyum, cantatikalaiyum nam erpatuttiyiruntom; melum, entat tutarum allahvin anumitiyillamal enta attatciyaiyum kontuvantatillai ovvoru tavanaikkum oru (pativu) etu ullatu
Jan Turst Foundation
(napiyē!) Niccayamāka umakku muṉṉarum, nām tūtarkaḷai aṉuppi vaittōm; avarkaḷukkum maṉaiviyaraiyum, cantatikaḷaiyum nām ēṟpaṭuttiyiruntōm; mēlum, entat tūtarum allāhviṉ aṉumitiyillāmal enta attāṭciyaiyum koṇṭuvantatillai ovvoru tavaṇaikkum oru (pativu) ēṭu uḷḷatu
Jan Turst Foundation
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek