×

மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால், (உங்களை முதலில் 22:5 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:5) ayat 5 in Tamil

22:5 Surah Al-hajj ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 5 - الحج - Page - Juz 17

﴿يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمۡ فِي رَيۡبٖ مِّنَ ٱلۡبَعۡثِ فَإِنَّا خَلَقۡنَٰكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ مِنۡ عَلَقَةٖ ثُمَّ مِن مُّضۡغَةٖ مُّخَلَّقَةٖ وَغَيۡرِ مُخَلَّقَةٖ لِّنُبَيِّنَ لَكُمۡۚ وَنُقِرُّ فِي ٱلۡأَرۡحَامِ مَا نَشَآءُ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى ثُمَّ نُخۡرِجُكُمۡ طِفۡلٗا ثُمَّ لِتَبۡلُغُوٓاْ أَشُدَّكُمۡۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرۡذَلِ ٱلۡعُمُرِ لِكَيۡلَا يَعۡلَمَ مِنۢ بَعۡدِ عِلۡمٖ شَيۡـٔٗاۚ وَتَرَى ٱلۡأَرۡضَ هَامِدَةٗ فَإِذَآ أَنزَلۡنَا عَلَيۡهَا ٱلۡمَآءَ ٱهۡتَزَّتۡ وَرَبَتۡ وَأَنۢبَتَتۡ مِن كُلِّ زَوۡجِۭ بَهِيجٖ ﴾
[الحج: 5]

மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால், (உங்களை முதலில் எவ்வாறு படைத்தோம் என்பதைக் கவனியுங்கள்.) நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் மூலப் பிதாவாகிய ஆதமை) மண்ணில் இருந்து (படைத்துப்) பின்னர் இந்திரியத் துளியிலிருந்து, பின்னர் அதை ஓர் இரத்தக் கட்டியாகவும், பின்னர் (அதை) குறை வடிவ அல்லது முழு வடிவ மாமிசப் பிண்டமாகவும் (நாம் உற்பத்தி செய்கிறோம். நம் வல்லமையை) உங்களுக்குத் தெளிவாக்கும் பொருட்டே (இவ்வாறு படிப்படியாகப் பல மாறுதல்களை அடைய) ஒரு குறிப்பிட்ட காலம் வரை தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். (இதற்கிடையில்) இறந்துவிடுபவர்களும் உங்களில் பலர் இருக்கின்றனர். (அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக்கூடிய தள்ளாத வயது வரை விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (மனிதனே!) பூமி (புற்பூண்டு ஏதுமின்றி) வறண்டு இருப்பதை நீ காணவில்லையா? அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது பசுமையாகி வளர்ந்து அழகான பற்பல வகை (ஜோடி ஜோடி)யான உயர்ந்த புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب, باللغة التاميلية

﴿ياأيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب﴾ [الحج: 5]

Abdulhameed Baqavi
Manitarkale! (Marumaiyil unkalukku uyir kotuttu) eluppuvataip parri ninkal cantekam kontal, (unkalai mutalil evvaru pataittom enpataik kavaniyunkal.) Niccayamaka nam unkalai (unkal mulap pitavakiya atamai) mannil iruntu (pataittup) pinnar intiriyat tuliyiliruntu, pinnar atai or irattak kattiyakavum, pinnar (atai) kurai vativa allatu mulu vativa mamicap pintamakavum (nam urpatti ceykirom. Nam vallamaiyai) unkalukkut telivakkum porutte (ivvaru patippatiyakap pala marutalkalai ataiya) oru kurippitta kalam varai tanki irukkumpati ceykirom. Pinnar, unkalaic cicukkalaka velippatutti ninkal unkal valipattai ataiyumpatic ceykirom. (Itarkitaiyil) irantuvitupavarkalum unkalil palar irukkinranar. (Allatu valntu) anaittaiyum arinta pinnar onrume ariyatavarkalaippol akivitakkutiya tallata vayatu varai vittu vaikkappatupavarkalum unkalil irukkinranar. (Manitane!) Pumi (purpuntu etuminri) varantu iruppatai ni kanavillaiya? Atan mitu nam malaiyai poliyac ceytal, atu pacumaiyaki valarntu alakana parpala vakai (joti joti)yana uyarnta purpuntukalai mulaippikkiratu
Abdulhameed Baqavi
Maṉitarkaḷē! (Maṟumaiyil uṅkaḷukku uyir koṭuttu) eḻuppuvataip paṟṟi nīṅkaḷ cantēkam koṇṭāl, (uṅkaḷai mutalil evvāṟu paṭaittōm eṉpataik kavaṉiyuṅkaḷ.) Niccayamāka nām uṅkaḷai (uṅkaḷ mūlap pitāvākiya ātamai) maṇṇil iruntu (paṭaittup) piṉṉar intiriyat tuḷiyiliruntu, piṉṉar atai ōr irattak kaṭṭiyākavum, piṉṉar (atai) kuṟai vaṭiva allatu muḻu vaṭiva māmicap piṇṭamākavum (nām uṟpatti ceykiṟōm. Nam vallamaiyai) uṅkaḷukkut teḷivākkum poruṭṭē (ivvāṟu paṭippaṭiyākap pala māṟutalkaḷai aṭaiya) oru kuṟippiṭṭa kālam varai taṅki irukkumpaṭi ceykiṟōm. Piṉṉar, uṅkaḷaic cicukkaḷāka veḷippaṭutti nīṅkaḷ uṅkaḷ vālipattai aṭaiyumpaṭic ceykiṟōm. (Itaṟkiṭaiyil) iṟantuviṭupavarkaḷum uṅkaḷil palar irukkiṉṟaṉar. (Allatu vāḻntu) aṉaittaiyum aṟinta piṉṉar oṉṟumē aṟiyātavarkaḷaippōl ākiviṭakkūṭiya taḷḷāta vayatu varai viṭṭu vaikkappaṭupavarkaḷum uṅkaḷil irukkiṉṟaṉar. (Maṉitaṉē!) Pūmi (puṟpūṇṭu ētumiṉṟi) vaṟaṇṭu iruppatai nī kāṇavillaiyā? Ataṉ mītu nām maḻaiyai poḻiyac ceytāl, atu pacumaiyāki vaḷarntu aḻakāṉa paṟpala vakai (jōṭi jōṭi)yāṉa uyarnta puṟpūṇṭukaḷai muḷaippikkiṟatu
Jan Turst Foundation
Manitarkale! (Irutit tirppukkaka ninkal) mintum eluppappatuvatu parri cantekattil iruntirkalanal, (arintu kollunkal;) nam niccayamaka unkalai (mutalil) manniliruntum pinnar intiriyattiliruntum, pinpu alakkiliruntum; pinpu uruvakkappattatum, uruvakkappatatatumana tacaik kattiyiliruntum pataittom; unkalukku vilakkuvatarkakave (itanai vivarikkirom); melum, nam natiyavarrai oru kurippitta kalam varai karuppappaiyil tankac ceykirom; pinpu unkalai kulantaiyaka velippatuttukirom. Pinpu ninkal unkal valipattai ataiyumpatic ceykirom. Anriyum, (itanitaiyil) unkalil cilar marippavarkalum irukkirarkal; (jivittu) arivu perra pinnar onrume ariyatavarkalaip pol akivitak kutiya talarnta vayatu varai vittuvaikkappatupavarkalum irukkirarkal; innum, ninkala (taricayk kitakkum) varanta pumiyaip parkkinrirkal; atan mitu nam (malai) niraip peyyac ceyvomanal atu pacamaiyaki, valarntu, alakana (joti jotiyakap) palvakaip purpuntukalai mulaippikkiratu
Jan Turst Foundation
Maṉitarkaḷē! (Iṟutit tīrppukkāka nīṅkaḷ) mīṇṭum eḻuppappaṭuvatu paṟṟi cantēkattil iruntīrkaḷāṉāl, (aṟintu koḷḷuṅkaḷ;) nām niccayamāka uṅkaḷai (mutalil) maṇṇiliruntum piṉṉar intiriyattiliruntum, piṉpu alakkiliruntum; piṉpu uruvākkappaṭṭatum, uruvākkappaṭātatumāṉa tacaik kaṭṭiyiliruntum paṭaittōm; uṅkaḷukku viḷakkuvataṟkākavē (itaṉai vivarikkiṟōm); mēlum, nām nāṭiyavaṟṟai oru kuṟippiṭṭa kālam varai karuppappaiyil taṅkac ceykiṟōm; piṉpu uṅkaḷai kuḻantaiyāka veḷippaṭuttukiṟōm. Piṉpu nīṅkaḷ uṅkaḷ vālipattai aṭaiyumpaṭic ceykiṟōm. Aṉṟiyum, (itaṉiṭaiyil) uṅkaḷil cilar marippavarkaḷum irukkiṟārkaḷ; (jīvittu) aṟivu peṟṟa piṉṉar oṉṟumē aṟiyātavarkaḷaip pōl ākiviṭak kūṭiya taḷarnta vayatu varai viṭṭuvaikkappaṭupavarkaḷum irukkiṟārkaḷ; iṉṉum, nīṅkaḷa (taricāyk kiṭakkum) varaṇṭa pūmiyaip pārkkiṉṟīrkaḷ; ataṉ mītu nām (maḻai) nīraip peyyac ceyvōmāṉāl atu pacamaiyāki, vaḷarntu, aḻakāṉa (jōṭi jōṭiyākap) palvakaip puṟpūṇṭukaḷai muḷaippikkiṟatu
Jan Turst Foundation
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek