×

‘‘அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது'' என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும், 5:64 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:64) ayat 64 in Tamil

5:64 Surah Al-Ma’idah ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 64 - المَائدة - Page - Juz 6

﴿وَقَالَتِ ٱلۡيَهُودُ يَدُ ٱللَّهِ مَغۡلُولَةٌۚ غُلَّتۡ أَيۡدِيهِمۡ وَلُعِنُواْ بِمَا قَالُواْۘ بَلۡ يَدَاهُ مَبۡسُوطَتَانِ يُنفِقُ كَيۡفَ يَشَآءُۚ وَلَيَزِيدَنَّ كَثِيرٗا مِّنۡهُم مَّآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ طُغۡيَٰنٗا وَكُفۡرٗاۚ وَأَلۡقَيۡنَا بَيۡنَهُمُ ٱلۡعَدَٰوَةَ وَٱلۡبَغۡضَآءَ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۚ كُلَّمَآ أَوۡقَدُواْ نَارٗا لِّلۡحَرۡبِ أَطۡفَأَهَا ٱللَّهُۚ وَيَسۡعَوۡنَ فِي ٱلۡأَرۡضِ فَسَادٗاۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡمُفۡسِدِينَ ﴾
[المَائدة: 64]

‘‘அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது'' என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். மாறாக, அல்லாஹ்வுடைய இரு கைகளோ (எப்பொழுதும்) விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் (அள்ளி) அள்ளிக் கொடுக்கிறான். உமது இறைவனால் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகிறது. ஆகவே, நாம் அவர்களுக்கிடையில் பகைமையை, வெறுப்பை இறுதிநாள் வரை (இருக்கும்படி) விதைத்து விட்டோம். அவர்கள் (நம்பிக்கையாளர்களுக்கிடையில்) போர் நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விடுகிறான். ஆனால், (இன்னும்) அவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டே அலைகிறார்கள். அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை

❮ Previous Next ❯

ترجمة: وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه, باللغة التاميلية

﴿وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه﴾ [المَائدة: 64]

Abdulhameed Baqavi
‘‘allahvutaiya kai kattappattirukkiratu'' enru inta yutarkal kurukinranar. (Avvaranru) avarkalutaiya kaikaltan kattappattirukkinrana. Melum, ivvaru avarkal kuriyatan karanamaka avarkal capikkappattum vittanar. Maraka, allahvutaiya iru kaikalo (eppolutum) virinte irukkinrana. Avan virumpiyavarellam (alli) allik kotukkiran. Umatu iraivanal umakku irakkappatta ivvetam avarkalil perumpanmaiyinarukku poramaiyaiyum, nirakarippaiyume atikappatutti vitukiratu. Akave, nam avarkalukkitaiyil pakaimaiyai, veruppai irutinal varai (irukkumpati) vitaittu vittom. Avarkal (nampikkaiyalarkalukkitaiyil) por neruppai muttum potellam allah atai anaittu vitukiran. Anal, (innum) avarkal pumiyil visamam ceytukonte alaikirarkal. Allah, visamam ceypavarkalai necippate illai
Abdulhameed Baqavi
‘‘allāhvuṭaiya kai kaṭṭappaṭṭirukkiṟatu'' eṉṟu inta yūtarkaḷ kūṟukiṉṟaṉar. (Avvāṟaṉṟu) avarkaḷuṭaiya kaikaḷtāṉ kaṭṭappaṭṭirukkiṉṟaṉa. Mēlum, ivvāṟu avarkaḷ kūṟiyataṉ kāraṇamāka avarkaḷ capikkappaṭṭum viṭṭaṉar. Māṟāka, allāhvuṭaiya iru kaikaḷō (eppoḻutum) virintē irukkiṉṟaṉa. Avaṉ virumpiyavāṟellām (aḷḷi) aḷḷik koṭukkiṟāṉ. Umatu iṟaivaṉāl umakku iṟakkappaṭṭa ivvētam avarkaḷil perumpāṉmaiyiṉarukku poṟāmaiyaiyum, nirākarippaiyumē atikappaṭutti viṭukiṟatu. Ākavē, nām avarkaḷukkiṭaiyil pakaimaiyai, veṟuppai iṟutināḷ varai (irukkumpaṭi) vitaittu viṭṭōm. Avarkaḷ (nampikkaiyāḷarkaḷukkiṭaiyil) pōr neruppai mūṭṭum pōtellām allāh atai aṇaittu viṭukiṟāṉ. Āṉāl, (iṉṉum) avarkaḷ pūmiyil viṣamam ceytukoṇṭē alaikiṟārkaḷ. Allāh, viṣamam ceypavarkaḷai nēcippatē illai
Jan Turst Foundation
Allahvin kai kattappattirukkiratu" enru yutarkal kurukirarkal;. Avarkalutaiya kaikaltam kattappattullana. Ivvaru kuriyatin karanamaka avarkal capikkappattarkal;. Allahvin iru kaikalo virikkappatte irukkinrana. Tan natiyavaru (tan arutkotaikalai) kotukkiran; um mitu um iraivanal irakkappatta (ivvetam) avarkal anekaril varampu mirutalaiyum kuhprai (nirakarippai)yum niccayamaka atikap patuttukiratu, akave avarkalitaiye pakaimaiyum, veruppunarcciyaiyum iruti nalvarai nam pottuvittom;. Avarkal yutta neruppai muttumpotellam atanai allah anaittu vitukiran;. (Ayinum) innum avarkal pumiyil kulappam ceytu konte tirikinranar. Allah kulappam ceypavarkalai necikka mattan
Jan Turst Foundation
Allāhviṉ kai kaṭṭappaṭṭirukkiṟatu" eṉṟu yūtarkaḷ kūṟukiṟārkaḷ;. Avarkaḷuṭaiya kaikaḷtām kaṭṭappaṭṭuḷḷaṉa. Ivvāṟu kūṟiyatiṉ kāraṇamāka avarkaḷ capikkappaṭṭārkaḷ;. Allāhviṉ iru kaikaḷō virikkappaṭṭē irukkiṉṟaṉa. Tāṉ nāṭiyavāṟu (taṉ aruṭkoṭaikaḷai) koṭukkiṟāṉ; um mītu um iṟaivaṉāl iṟakkappaṭṭa (ivvētam) avarkaḷ anēkaril varampu mīṟutalaiyum kuḥprai (nirākarippai)yum niccayamāka atikap paṭuttukiṟatu, ākavē avarkaḷiṭaiyē pakaimaiyum, veṟuppuṇarcciyaiyum iṟuti nāḷvarai nām pōṭṭuviṭṭōm;. Avarkaḷ yutta neruppai mūṭṭumpōtellām ataṉai allāh aṇaittu viṭukiṟāṉ;. (Āyiṉum) iṉṉum avarkaḷ pūmiyil kuḻappam ceytu koṇṭē tirikiṉṟaṉar. Allāh kuḻappam ceypavarkaḷai nēcikka māṭṭāṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்;. (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek