×

அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தான்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் 7:169 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:169) ayat 169 in Tamil

7:169 Surah Al-A‘raf ayat 169 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 169 - الأعرَاف - Page - Juz 9

﴿فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٞ وَرِثُواْ ٱلۡكِتَٰبَ يَأۡخُذُونَ عَرَضَ هَٰذَا ٱلۡأَدۡنَىٰ وَيَقُولُونَ سَيُغۡفَرُ لَنَا وَإِن يَأۡتِهِمۡ عَرَضٞ مِّثۡلُهُۥ يَأۡخُذُوهُۚ أَلَمۡ يُؤۡخَذۡ عَلَيۡهِم مِّيثَٰقُ ٱلۡكِتَٰبِ أَن لَّا يَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّ وَدَرَسُواْ مَا فِيهِۗ وَٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّلَّذِينَ يَتَّقُونَۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴾
[الأعرَاف: 169]

அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தான்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். மேலும், இக்குற்றத்தைப் பற்றி) ‘‘நாங்கள் மன்னிக்கப்படுவோம்'' என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதையும் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறையச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே! இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر, باللغة التاميلية

﴿فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر﴾ [الأعرَاف: 169]

Abdulhameed Baqavi
avarkalukkup pinnar avarkalutaiya itattai (ciritum takutiyarra) palar ataintanar. Avarkal, (tankaltan) vetattirkuc contakkararkal ena(k kuri), ivvarpa (ulakin) porulaip perrukkontu (atarkerravaru veta vacanankalaip purattukinranar. Melum, ikkurrattaip parri) ‘‘nankal mannikkappatuvom'' enrum kurukinranar. (Vetattil ivarkal purattiyatai totarntu munpu pol purattuvatarkaka) iteponra arpap porulkal pinnarum avarkalitam varum camayattil ataiyum perrukkolvarkal. Avarkal allahvin mitu unmaiyait tavira (veru etaiyum) kurakkutatu enru (avarkalutaiya) vetattin mulam avarkalitam urutimoli vankappatavillaiya? Atai avarkalum patittu (arintu vaittu)llanar. (Eninum atilullavarraip porutpatuttuvatu illai.) Iraiyaccamutaiyavarkalukku marumaiyin vite mika melanatu. (Yutarkale! Ivvalavu kuta) ninkal unarntukolla ventama
Abdulhameed Baqavi
avarkaḷukkup piṉṉar avarkaḷuṭaiya iṭattai (ciṟitum takutiyaṟṟa) palar aṭaintaṉar. Avarkaḷ, (tāṅkaḷtāṉ) vētattiṟkuc contakkārarkaḷ eṉa(k kūṟi), ivvaṟpa (ulakiṉ) poruḷaip peṟṟukkoṇṭu (ataṟkēṟṟavāṟu vēta vacaṉaṅkaḷaip puraṭṭukiṉṟaṉar. Mēlum, ikkuṟṟattaip paṟṟi) ‘‘nāṅkaḷ maṉṉikkappaṭuvōm'' eṉṟum kūṟukiṉṟaṉar. (Vētattil ivarkaḷ puraṭṭiyatai toṭarntu muṉpu pōl puraṭṭuvataṟkāka) itēpōṉṟa aṟpap poruḷkaḷ piṉṉarum avarkaḷiṭam varum camayattil ataiyum peṟṟukkoḷvārkaḷ. Avarkaḷ allāhviṉ mītu uṇmaiyait tavira (vēṟu etaiyum) kūṟakkūṭātu eṉṟu (avarkaḷuṭaiya) vētattiṉ mūlam avarkaḷiṭam uṟutimoḻi vāṅkappaṭavillaiyā? Atai avarkaḷum paṭittu (aṟintu vaittu)ḷḷaṉar. (Eṉiṉum atiluḷḷavaṟṟaip poruṭpaṭuttuvatu illai.) Iṟaiyaccamuṭaiyavarkaḷukku maṟumaiyiṉ vīṭē mika mēlāṉatu. (Yūtarkaḷē! Ivvaḷavu kūṭa) nīṅkaḷ uṇarntukoḷḷa vēṇṭāmā
Jan Turst Foundation
Avarkalukkup pin avarkalutaiya itattai (takutiyarra) oru pirivinar ataintanar; avarkal vetattirkum varicukal anarkal;. Ivvulakin arpap porutkalaip perruk kontu (atarku takuntapati vetattai marri kontarkal). 'Enkalukku mannippu alikkappatum' enrum kurikkolkirarkal. Ituponru veror arpapporul avarkalukku vantu vittal, ataiyum etuttuk kolvarkal, "allahvin mitu unmaiyeyanri veru onrum kuralakatu enru vetattin mulam avarkalitam urutimoli vankap patavillaiya?" (Innum) atilullavai (potanaikalai) avarkal otiyum varukinrarkal; (ataiyellam avarkal porutpatuttuvatillai) payapaktiyutaiyavarkalukku marumaiyin vite melanatakum. Ninkal (nallavitamaka) arintu kolla ventama
Jan Turst Foundation
Avarkaḷukkup piṉ avarkaḷuṭaiya iṭattai (takutiyaṟṟa) oru piriviṉar aṭaintaṉar; avarkaḷ vētattiṟkum vāricukaḷ āṉārkaḷ;. Ivvulakiṉ aṟpap poruṭkaḷaip peṟṟuk koṇṭu (ataṟku takuntapaṭi vētattai māṟṟi koṇṭārkaḷ). 'Eṅkaḷukku maṉṉippu aḷikkappaṭum' eṉṟum kūṟikkoḷkiṟārkaḷ. Itupōṉṟu vēṟōr aṟpapporuḷ avarkaḷukku vantu viṭṭāl, ataiyum eṭuttuk koḷvārkaḷ, "allāhviṉ mītu uṇmaiyēyaṉṟi vēṟu oṉṟum kūṟalākātu eṉṟu vētattiṉ mūlam avarkaḷiṭam uṟutimoḻi vāṅkap paṭavillaiyā?" (Iṉṉum) atiluḷḷavai (pōtaṉaikaḷai) avarkaḷ ōtiyum varukiṉṟārkaḷ; (ataiyellām avarkaḷ poruṭpaṭuttuvatillai) payapaktiyuṭaiyavarkaḷukku maṟumaiyiṉ vīṭē mēlāṉatākum. Nīṅkaḷ (nallavitamāka) aṟintu koḷḷa vēṇṭāmā
Jan Turst Foundation
அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்;. இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). 'எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்' என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள், "அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறு ஒன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப் படவில்லையா?" (இன்னும்) அதிலுள்ளவை (போதனைகளை) அவர்கள் ஓதியும் வருகின்றார்கள்; (அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை) பயபக்தியுடையவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் (நல்லவிதமாக) அறிந்து கொள்ள வேண்டாமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek