×

அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை 18:19 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:19) ayat 19 in Tamil

18:19 Surah Al-Kahf ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 19 - الكَهف - Page - Juz 15

﴿وَكَذَٰلِكَ بَعَثۡنَٰهُمۡ لِيَتَسَآءَلُواْ بَيۡنَهُمۡۚ قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ كَمۡ لَبِثۡتُمۡۖ قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۚ قَالُواْ رَبُّكُمۡ أَعۡلَمُ بِمَا لَبِثۡتُمۡ فَٱبۡعَثُوٓاْ أَحَدَكُم بِوَرِقِكُمۡ هَٰذِهِۦٓ إِلَى ٱلۡمَدِينَةِ فَلۡيَنظُرۡ أَيُّهَآ أَزۡكَىٰ طَعَامٗا فَلۡيَأۡتِكُم بِرِزۡقٖ مِّنۡهُ وَلۡيَتَلَطَّفۡ وَلَا يُشۡعِرَنَّ بِكُمۡ أَحَدًا ﴾
[الكَهف: 19]

அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம். அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)'' என்று கூறினர். (மற்றவர்கள்) ‘‘நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறி ‘‘உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டிணத்திற்கு அனுப்பிவையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கிறது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டிணத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும்

❮ Previous Next ❯

ترجمة: وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما, باللغة التاميلية

﴿وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما﴾ [الكَهف: 19]

Abdulhameed Baqavi
Avarkal (atil evvalavu kalam iruntanar enpatait) tankalukkul kettarintu kollum poruttu ivvaru (nittirai ceyyum) avarkalai nam eluppinom. Avarkalil oruvar (marravarkalai nokki) ‘‘ninkal evvalavu neram nittiraiyil iruntirkal?'' Enru kettar. Atarku avarkalil cilar ‘‘oru nal allatu oru nalil ciritu pakam (iruntiruppom)'' enru kurinar. (Marravarkal) ‘‘ninkal nittiraiyilirunta kalattai unkal iraivantan nankarivan'' enru kuri ‘‘unkalil oruvaritam inta (velli) nanayattaik kotuttu avaraip pattinattirku anuppivaiyunkal. Avar (anku cenru) nalla unavup porul etu (enkirukkiratu) enpatait tetipparttu atil ciritu vanki varavum. Eninum, unkalai(p pattinattiliruppavarkalil) oruvarum arintu kollatavaru mikka eccarikkaiyakave avar natantu kollavum
Abdulhameed Baqavi
Avarkaḷ (atil evvaḷavu kālam iruntaṉar eṉpatait) taṅkaḷukkuḷ kēṭṭaṟintu koḷḷum poruṭṭu ivvāṟu (nittirai ceyyum) avarkaḷai nām eḻuppiṉōm. Avarkaḷil oruvar (maṟṟavarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ evvaḷavu nēram nittiraiyil iruntīrkaḷ?'' Eṉṟu kēṭṭār. Ataṟku avarkaḷil cilar ‘‘oru nāḷ allatu oru nāḷil ciṟitu pākam (iruntiruppōm)'' eṉṟu kūṟiṉar. (Maṟṟavarkaḷ) ‘‘nīṅkaḷ nittiraiyilirunta kālattai uṅkaḷ iṟaivaṉtāṉ naṉkaṟivāṉ'' eṉṟu kūṟi ‘‘uṅkaḷil oruvariṭam inta (veḷḷi) nāṇayattaik koṭuttu avaraip paṭṭiṇattiṟku aṉuppivaiyuṅkaḷ. Avar (aṅku ceṉṟu) nalla uṇavup poruḷ etu (eṅkirukkiṟatu) eṉpatait tēṭippārttu atil ciṟitu vāṅki varavum. Eṉiṉum, uṅkaḷai(p paṭṭiṇattiliruppavarkaḷil) oruvarum aṟintu koḷḷātavāṟu mikka eccarikkaiyākavē avar naṭantu koḷḷavum
Jan Turst Foundation
Innum avarkalitaiye oruvaraiyoruvar kettuk kolvatarkaka nam avarkalai ivvaru eluppinom; avarkaliliruntu colpavar (oruvar)"ninkal evvalavu neram (nittiraiyil) iruntirkal?" Enak kettar; "oru nal allatu oru nalin ciritu pakam tankiyiruntom" enak kurinarkal; (marravarkal)"ninkal (nittiraiyil) irunta kalattai unkal iraivantan nanku arintavan; akave, unkalil oruvarai inta vellik kacutan pattanattirku anuppunkal; avarkal cuttamana akaram etu enpatai nanku kavanittu, atiliruntu akarattai unkalukkakak kontu varattum; melum avar eccarikkaiyaka irukkattum; unkalaip parri evarukkum avar arivittu vita ventam (enranar)
Jan Turst Foundation
Iṉṉum avarkaḷiṭaiyē oruvaraiyoruvar kēṭṭuk koḷvataṟkāka nām avarkaḷai ivvāṟu eḻuppiṉōm; avarkaḷiliruntu colpavar (oruvar)"nīṅkaḷ evvaḷavu nēram (nittiraiyil) iruntīrkaḷ?" Eṉak kēṭṭār; "oru nāḷ allatu oru nāḷiṉ ciṟitu pākam taṅkiyiruntōm" eṉak kūṟiṉārkaḷ; (maṟṟavarkaḷ)"nīṅkaḷ (nittiraiyil) irunta kālattai uṅkaḷ iṟaivaṉtāṉ naṉku aṟintavaṉ; ākavē, uṅkaḷil oruvarai inta veḷḷik kācuṭaṉ paṭṭaṇattiṟku aṉuppuṅkaḷ; avarkaḷ cuttamāṉa ākāram etu eṉpatai naṉku kavaṉittu, atiliruntu ākārattai uṅkaḷukkākak koṇṭu varaṭṭum; mēlum avar eccarikkaiyāka irukkaṭṭum; uṅkaḷaip paṟṟi evarukkum avar aṟivittu viṭa vēṇṭām (eṉṟaṉar)
Jan Turst Foundation
இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) "நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?" எனக் கேட்டார்; "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்" எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) "நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek