×

அல்லாஹ்வுக்காக (ஆரம்பம் செய்த) ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். ஆனால், (மக்கா செல்ல முடியாதவாறு) நீங்கள் 2:196 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:196) ayat 196 in Tamil

2:196 Surah Al-Baqarah ayat 196 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 196 - البَقَرَة - Page - Juz 2

﴿وَأَتِمُّواْ ٱلۡحَجَّ وَٱلۡعُمۡرَةَ لِلَّهِۚ فَإِنۡ أُحۡصِرۡتُمۡ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۖ وَلَا تَحۡلِقُواْ رُءُوسَكُمۡ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡهَدۡيُ مَحِلَّهُۥۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ بِهِۦٓ أَذٗى مِّن رَّأۡسِهِۦ فَفِدۡيَةٞ مِّن صِيَامٍ أَوۡ صَدَقَةٍ أَوۡ نُسُكٖۚ فَإِذَآ أَمِنتُمۡ فَمَن تَمَتَّعَ بِٱلۡعُمۡرَةِ إِلَى ٱلۡحَجِّ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۚ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖ فِي ٱلۡحَجِّ وَسَبۡعَةٍ إِذَا رَجَعۡتُمۡۗ تِلۡكَ عَشَرَةٞ كَامِلَةٞۗ ذَٰلِكَ لِمَن لَّمۡ يَكُنۡ أَهۡلُهُۥ حَاضِرِي ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴾
[البَقَرَة: 196]

அல்லாஹ்வுக்காக (ஆரம்பம் செய்த) ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். ஆனால், (மக்கா செல்ல முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டு (ஹஜ்ஜை முழுமையாக்க முடியா)விட்டால் ‘ஹத்யு' (என்னும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை)களில் (உங்களுக்குச்) சாத்தியமானவை பரிகாரமாகும். தவிர, அந்த ஹத்யுக்கள் தாம் செல்ல வேண்டிய (மக்காவிலுள்ள ஹரம் என்னும்) இடத்தை அடையும்வரை நீங்கள் உங்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொள்ளாதீர்கள். ஆயினும், (இஹ்ராம் கட்டிய) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது தலையில் (பேன், புண், வலி ஆகியவற்றால்) இடையூறு உள்ளவராகவோ இருந்து (முடியிறக்கிக் கொண்டு) விட்டால், அதற்குப் பரிகாரமாக (அவர் மூன்று) நோன்புகள் நோற்கவும். அல்லது, (ஆறு ஏழைகளுக்கு உணவு) தானம் செய்யவும். அல்லது, (ஓர் ஆடு) குர்பானி கொடுக்கவும். மேலும், (இஹ்ராம் அணிந்த) நீங்கள் எவ்விதத் தடையுமில்லாது (ஹஜ்ஜூ செய்ய) வசதி பெற்றவர்களாக இருந்து (மக்கா சென்ற பின் உங்களில்) எவரேனும் உம்ராவை (மட்டும்) செய்துவிட்டு ஹஜ்ஜூக்கு முன்னதாகவே (ஹஜ்ஜூடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் (அதற்குப்) பரிகாரமாக ஹத்யுக்களில்* இயன்றதைக் கொடுக்கவும். ஆனால், (ஹத்யுக்களில் எதையுமே) பெற்றுக் கொள்ளாதவர், ஹஜ்ஜூடைய காலத்தில் மூன்றும் (தன் இருப்பிடம்) திரும்பியபின் ஏழும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்கவும். (தடுக்கப்பட்ட சுகத்தை அனுபவிக்கும்) இ(வ்வுரிமையான)து எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) குடியிருக்கவில்லையோ அவருக்குத்தான். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (குற்றவாளிகளை) வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا, باللغة التاميلية

﴿وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا﴾ [البَقَرَة: 196]

Abdulhameed Baqavi
Allahvukkaka (arampam ceyta) hajjaiyum umravaiyum ninkal mulumaiyakkunkal. Anal, (makka cella mutiyatavaru) ninkal tatukkappattu (hajjai mulumaiyakka mutiya)vittal ‘hatyu' (ennum atu, matu, ottakam akiyavai)kalil (unkalukkuc) cattiyamanavai parikaramakum. Tavira, anta hatyukkal tam cella ventiya (makkavilulla haram ennum) itattai ataiyumvarai ninkal unkal talaimutiyaic ciraittuk kollatirkal. Ayinum, (ihram kattiya) unkalil evarenum noyaliyakavo allatu talaiyil (pen, pun, vali akiyavarral) itaiyuru ullavarakavo iruntu (mutiyirakkik kontu) vittal, atarkup parikaramaka (avar munru) nonpukal norkavum. Allatu, (aru elaikalukku unavu) tanam ceyyavum. Allatu, (or atu) kurpani kotukkavum. Melum, (ihram aninta) ninkal evvitat tataiyumillatu (hajju ceyya) vacati perravarkalaka iruntu (makka cenra pin unkalil) evarenum umravai (mattum) ceytuvittu hajjukku munnatakave (hajjutaiya kalattil tatukkappattirunta) cukattai anupavittu vittal (atarkup) parikaramaka hatyukkalil* iyanrataik kotukkavum. Anal, (hatyukkalil etaiyume) perruk kollatavar, hajjutaiya kalattil munrum (tan iruppitam) tirumpiyapin elum, aka mulumaiyakap pattu natkal nonpu norkavum. (Tatukkappatta cukattai anupavikkum) i(vvurimaiyana)tu evarutaiya kutumpam masjitul haramil (makkavil) kutiyirukkavillaiyo avarukkuttan. Akave, ninkal allahvukkup payantu kollunkal. Niccayamaka allah (kurravalikalai) vetanai ceyvatil mikak katumaiyanavan enpataiyum urutiyaka arintu kollunkal
Abdulhameed Baqavi
Allāhvukkāka (ārampam ceyta) hajjaiyum umrāvaiyum nīṅkaḷ muḻumaiyākkuṅkaḷ. Āṉāl, (makkā cella muṭiyātavāṟu) nīṅkaḷ taṭukkappaṭṭu (hajjai muḻumaiyākka muṭiyā)viṭṭāl ‘hatyu' (eṉṉum āṭu, māṭu, oṭṭakam ākiyavai)kaḷil (uṅkaḷukkuc) cāttiyamāṉavai parikāramākum. Tavira, anta hatyukkaḷ tām cella vēṇṭiya (makkāviluḷḷa haram eṉṉum) iṭattai aṭaiyumvarai nīṅkaḷ uṅkaḷ talaimuṭiyaic ciraittuk koḷḷātīrkaḷ. Āyiṉum, (ihrām kaṭṭiya) uṅkaḷil evarēṉum nōyāḷiyākavō allatu talaiyil (pēṉ, puṇ, vali ākiyavaṟṟāl) iṭaiyūṟu uḷḷavarākavō iruntu (muṭiyiṟakkik koṇṭu) viṭṭāl, ataṟkup parikāramāka (avar mūṉṟu) nōṉpukaḷ nōṟkavum. Allatu, (āṟu ēḻaikaḷukku uṇavu) tāṉam ceyyavum. Allatu, (ōr āṭu) kurpāṉi koṭukkavum. Mēlum, (ihrām aṇinta) nīṅkaḷ evvitat taṭaiyumillātu (hajjū ceyya) vacati peṟṟavarkaḷāka iruntu (makkā ceṉṟa piṉ uṅkaḷil) evarēṉum umrāvai (maṭṭum) ceytuviṭṭu hajjūkku muṉṉatākavē (hajjūṭaiya kālattil taṭukkappaṭṭirunta) cukattai aṉupavittu viṭṭāl (ataṟkup) parikāramāka hatyukkaḷil* iyaṉṟataik koṭukkavum. Āṉāl, (hatyukkaḷil etaiyumē) peṟṟuk koḷḷātavar, hajjūṭaiya kālattil mūṉṟum (taṉ iruppiṭam) tirumpiyapiṉ ēḻum, āka muḻumaiyākap pattu nāṭkaḷ nōṉpu nōṟkavum. (Taṭukkappaṭṭa cukattai aṉupavikkum) i(vvurimaiyāṉa)tu evaruṭaiya kuṭumpam masjitul harāmil (makkāvil) kuṭiyirukkavillaiyō avarukkuttāṉ. Ākavē, nīṅkaḷ allāhvukkup payantu koḷḷuṅkaḷ. Niccayamāka allāh (kuṟṟavāḷikaḷai) vētaṉai ceyvatil mikak kaṭumaiyāṉavaṉ eṉpataiyum uṟutiyāka aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
Hajjaiyum, umravaiyum allahvukkakap purtti ceyyunkal; (appatip purtti ceyya mutiyatavaru) ninkal tatukkappatuvirkalayin unkalukku cattiyamana hatyu(atu, matu, ottakam ponra tiyakap porulai) anuppi vitunkal;. Anta hatyu(kurpan ceyyappatum) itattai ataivatarku mun unkal talaimutikalaik kalaiyatirkal. Ayinum, unkalil evarenum noyaliyaka iruppatinalo allatu talaiyil etenum tontaravu tarakkutiya piniyin karanamakavo(talaimutiyai irakkik kolla ventiya kattayam erpattal) atarkup parikaramaka nonpu iruttal ventum, allatu tarmam kotuttal ventum, allatu kurpani kotuttal ventum. Pinnar nerukkati ninki, ninkal camatana nilaiyaip perral haj varai umra ceyvatin cavukariyankalai ataintor tanakku etu iyalumo anta alavu kurpani kotuttal ventum; (avvaru kurpani kotukka) cattiyamillaiyayin, haj ceyyum kalattil munru natkalum, pinnar (tam ur)tirumpiyatum elu natkalum akap puranamakap pattu natkal nonpu norral ventum. I(ntac calukaiyana)tu, evarutaiya kutumpam masjitul haramin pakkattil illaiyo avarukkut tan - akave allahvai payantu kollunkal; niccayamaka allah vetanai kotuppatil katumaiyanavan enpatai arintu kollunkal
Jan Turst Foundation
Hajjaiyum, umrāvaiyum allāhvukkākap pūrtti ceyyuṅkaḷ; (appaṭip pūrtti ceyya muṭiyātavāṟu) nīṅkaḷ taṭukkappaṭuvīrkaḷāyiṉ uṅkaḷukku cāttiyamāṉa hatyu(āṭu, māṭu, oṭṭakam pōṉṟa tiyākap poruḷai) aṉuppi viṭuṅkaḷ;. Anta hatyu(kurpāṉ ceyyappaṭum) iṭattai aṭaivataṟku muṉ uṅkaḷ talaimuṭikaḷaik kaḷaiyātīrkaḷ. Āyiṉum, uṅkaḷil evarēṉum nōyāḷiyāka iruppatiṉālō allatu talaiyil ētēṉum tontaravu tarakkūṭiya piṇiyiṉ kāraṇamākavō(talaimuṭiyai iṟakkik koḷḷa vēṇṭiya kaṭṭāyam ēṟpaṭṭāl) ataṟkup parikāramāka nōṉpu iruttal vēṇṭum, allatu tarmam koṭuttal vēṇṭum, allatu kurpāṉī koṭuttal vēṇṭum. Piṉṉar nerukkaṭi nīṅki, nīṅkaḷ camātāṉa nilaiyaip peṟṟāl haj varai umrā ceyvatiṉ cavukariyaṅkaḷai aṭaintōr taṉakku etu iyalumō anta aḷavu kurpāṉī koṭuttal vēṇṭum; (avvāṟu kurpāṉī koṭukka) cāttiyamillaiyāyiṉ, haj ceyyum kālattil mūṉṟu nāṭkaḷum, piṉṉar (tam ūr)tirumpiyatum ēḻu nāṭkaḷum ākap pūraṇamākap pattu nāṭkaḷ nōṉpu nōṟṟal vēṇṭum. I(ntac calukaiyāṉa)tu, evaruṭaiya kuṭumpam masjitul harāmiṉ pakkattil illaiyō avarukkut tāṉ - ākavē allāhvai payantu koḷḷuṅkaḷ; niccayamāka allāh vētaṉai koṭuppatil kaṭumaiyāṉavaṉ eṉpatai aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;. அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek