×

(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளில் மூஸாவுக்குப் பின் இருந்த தலைவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள்) ‘‘அல்லாஹ்வுடைய பாதையில் 2:246 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:246) ayat 246 in Tamil

2:246 Surah Al-Baqarah ayat 246 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 246 - البَقَرَة - Page - Juz 2

﴿أَلَمۡ تَرَ إِلَى ٱلۡمَلَإِ مِنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنۢ بَعۡدِ مُوسَىٰٓ إِذۡ قَالُواْ لِنَبِيّٖ لَّهُمُ ٱبۡعَثۡ لَنَا مَلِكٗا نُّقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِۖ قَالَ هَلۡ عَسَيۡتُمۡ إِن كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِتَالُ أَلَّا تُقَٰتِلُواْۖ قَالُواْ وَمَا لَنَآ أَلَّا نُقَٰتِلَ فِي سَبِيلِ ٱللَّهِ وَقَدۡ أُخۡرِجۡنَا مِن دِيَٰرِنَا وَأَبۡنَآئِنَاۖ فَلَمَّا كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقِتَالُ تَوَلَّوۡاْ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ ﴾
[البَقَرَة: 246]

(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளில் மூஸாவுக்குப் பின் இருந்த தலைவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள்) ‘‘அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிய எங்களுக்கு(த் தலைமை வகிக்கின்ற) ஓர் அரசனை அனுப்பிவைப்பீராக!'' என்று தங்கள் நபியிடம் கூறியபோது, (அவர்) ‘‘போர் செய்வது உங்கள் மீது விதிக்கப்பட்டால் நீங்கள் போர் செய்யாமல் (விலகி) இருந்து விடுவீர்களா?'' என்று கேட்டார். (அதற்கு) அவர்கள் ‘‘எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்க, (எங்களை வெளியேற்றிய) அவர்களிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் செய்யாதிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது?'' என்று கூறினார்கள். ஆனால், போர் செய்யும்படி கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள் போர் செய்யாது) பின் சென்றுவிட்டார்கள். (இத்தகைய) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: ألم تر إلى الملإ من بني إسرائيل من بعد موسى إذ قالوا, باللغة التاميلية

﴿ألم تر إلى الملإ من بني إسرائيل من بعد موسى إذ قالوا﴾ [البَقَرَة: 246]

Abdulhameed Baqavi
(Napiye!) Israyilin cantatikalil musavukkup pin irunta talaivarkalai nir kavanikkavillaiya? (Avarkal) ‘‘allahvutaiya pataiyil nankal por puriya enkalukku(t talaimai vakikkinra) or aracanai anuppivaippiraka!'' Enru tankal napiyitam kuriyapotu, (avar) ‘‘por ceyvatu unkal mitu vitikkappattal ninkal por ceyyamal (vilaki) iruntu vituvirkala?'' Enru kettar. (Atarku) avarkal ‘‘enkal makkalaiyum, enkal vitukalaiyum vittu nankal veliyerrappattirukka, (enkalai veliyerriya) avarkalitam allahvutaiya pataiyil nankal por ceyyatirukka enkalukkenna nerntatu?'' Enru kurinarkal. Anal, por ceyyumpati kattalaiyitappatta poluto avarkalil cilarait tavira (marravarkal por ceyyatu) pin cenruvittarkal. (Ittakaiya) aniyayakkararkalai allah nankarivan
Abdulhameed Baqavi
(Napiyē!) Isrāyīliṉ cantatikaḷil mūsāvukkup piṉ irunta talaivarkaḷai nīr kavaṉikkavillaiyā? (Avarkaḷ) ‘‘allāhvuṭaiya pātaiyil nāṅkaḷ pōr puriya eṅkaḷukku(t talaimai vakikkiṉṟa) ōr aracaṉai aṉuppivaippīrāka!'' Eṉṟu taṅkaḷ napiyiṭam kūṟiyapōtu, (avar) ‘‘pōr ceyvatu uṅkaḷ mītu vitikkappaṭṭāl nīṅkaḷ pōr ceyyāmal (vilaki) iruntu viṭuvīrkaḷā?'' Eṉṟu kēṭṭār. (Ataṟku) avarkaḷ ‘‘eṅkaḷ makkaḷaiyum, eṅkaḷ vīṭukaḷaiyum viṭṭu nāṅkaḷ veḷiyēṟṟappaṭṭirukka, (eṅkaḷai veḷiyēṟṟiya) avarkaḷiṭam allāhvuṭaiya pātaiyil nāṅkaḷ pōr ceyyātirukka eṅkaḷukkeṉṉa nērntatu?'' Eṉṟu kūṟiṉārkaḷ. Āṉāl, pōr ceyyumpaṭi kaṭṭaḷaiyiṭappaṭṭa poḻutō avarkaḷil cilarait tavira (maṟṟavarkaḷ pōr ceyyātu) piṉ ceṉṟuviṭṭārkaḷ. (Ittakaiya) aniyāyakkārarkaḷai allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(Napiye!) Musavukkuppin isravel makkalin talaivarkalai nir kavanittira? Avarkal tam napiyitam; "nankal allahvin pataiyil porituvatarkaka or aracanai erpatuttunkal" enru kuriya polutu avar, "por ceytal unkal mitu katamaiyakkap pattal, ninkal poritamal iruntuvituvirkala?" Enru kettar; atarkavarkal; "enkal makkalaiyum, enkal vitukalaiyumvittu nankal veliyerrappattapin, allahvin pataiyil nankal poritamal irukka enkalukku enna vantatu?" Enak kurinarkal;. Eninum poritumaru avarkalukkuk kattalaiyitappatta poluto avarkalil oru cilararait tavira marrarellorum puramutukuk kattit tirumpivittanar - (ivvaru) akkiramam ceyvorai allah nankarivan
Jan Turst Foundation
(Napiyē!) Mūsāvukkuppiṉ isravēl makkaḷiṉ talaivarkaḷai nīr kavaṉittīrā? Avarkaḷ tam napiyiṭam; "nāṅkaḷ allāhviṉ pātaiyil pōriṭuvataṟkāka ōr aracaṉai ēṟpaṭuttuṅkaḷ" eṉṟu kūṟiya poḻutu avar, "pōr ceytal uṅkaḷ mītu kaṭamaiyākkap paṭṭāl, nīṅkaḷ pōriṭāmal iruntuviṭuvīrkaḷā?" Eṉṟu kēṭṭār; ataṟkavarkaḷ; "eṅkaḷ makkaḷaiyum, eṅkaḷ vīṭukaḷaiyumviṭṭu nāṅkaḷ veḷiyēṟṟappaṭṭapiṉ, allāhviṉ pātaiyil nāṅkaḷ pōriṭāmal irukka eṅkaḷukku eṉṉa vantatu?" Eṉak kūṟiṉārkaḷ;. Eṉiṉum pōriṭumāṟu avarkaḷukkuk kaṭṭaḷaiyiṭappaṭṭa poḻutō avarkaḷil oru cilararait tavira maṟṟaṟellōrum puṟamutukuk kāṭṭit tirumpiviṭṭaṉar - (ivvāṟu) akkiramam ceyvōrai allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்; "நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்" என்று கூறிய பொழுது அவர், "போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?" என்று கேட்டார்; அதற்கவர்கள்; "எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?" எனக் கூறினார்கள்;. எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek