×

உங்கள் கைகளைத் (தற்சமயம் போர்புரியாது) தடுத்துக் கொள்ளவும், தொழுகையை உறுதியாகக் கடைப்பிடிக்கவும், ஜகாத்தைக் கொடுத்துவரவும் என்று 4:77 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:77) ayat 77 in Tamil

4:77 Surah An-Nisa’ ayat 77 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 77 - النِّسَاء - Page - Juz 5

﴿أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ قِيلَ لَهُمۡ كُفُّوٓاْ أَيۡدِيَكُمۡ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ فَلَمَّا كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقِتَالُ إِذَا فَرِيقٞ مِّنۡهُمۡ يَخۡشَوۡنَ ٱلنَّاسَ كَخَشۡيَةِ ٱللَّهِ أَوۡ أَشَدَّ خَشۡيَةٗۚ وَقَالُواْ رَبَّنَا لِمَ كَتَبۡتَ عَلَيۡنَا ٱلۡقِتَالَ لَوۡلَآ أَخَّرۡتَنَآ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖۗ قُلۡ مَتَٰعُ ٱلدُّنۡيَا قَلِيلٞ وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّمَنِ ٱتَّقَىٰ وَلَا تُظۡلَمُونَ فَتِيلًا ﴾
[النِّسَاء: 77]

உங்கள் கைகளைத் (தற்சமயம் போர்புரியாது) தடுத்துக் கொள்ளவும், தொழுகையை உறுதியாகக் கடைப்பிடிக்கவும், ஜகாத்தைக் கொடுத்துவரவும் என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? போர்புரிய அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபொழுது அவர்களில் ஒரு பிரிவினரோ அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப்போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயந்து ‘‘எங்கள் இறைவனே! ஏன் எங்கள் மீது போரைக் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலத்திற்கு இதைப் பிற்படுத்த வேண்டாமா?'' என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். (இதற்கு நபியே!) நீர் கூறுவீராக: ‘‘இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே! எவன் (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கிறானோ அவனுக்கு மறுமை(யின் வாழ்க்கை)தான் மிக மேலானது. (உங்கள் நன்மையைக் குறைத்தோ, பாவத்தைக் கூட்டியோ) நீங்கள் ஒரு நூலளவும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة, باللغة التاميلية

﴿ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة﴾ [النِّسَاء: 77]

Abdulhameed Baqavi
Unkal kaikalait (tarcamayam porpuriyatu) tatuttuk kollavum, tolukaiyai urutiyakak kataippitikkavum, jakattaik kotuttuvaravum enru evarkalukkuk kurappattato avarkalai nir parkkavillaiya? Porpuriya avarkalukkuk kattalaiyitappattapolutu avarkalil oru pirivinaro allahvukkup payappatuvataippol allatu ataivita atikamakave manitarkalukkup payantu ‘‘enkal iraivane! En enkal mitu poraik katamaiyakkinay? Innum ciritu kalattirku itaip pirpatutta ventama?'' Enru kura arampittu vittarkal. (Itarku napiye!) Nir kuruviraka: ‘‘Ivvulaka valkkai veku arpamanate! Evan (allahvukkup) payantu natakkirano avanukku marumai(yin valkkai)tan mika melanatu. (Unkal nanmaiyaik kuraitto, pavattaik kuttiyo) ninkal oru nulalavum aniyayam ceyyappata mattirkal
Abdulhameed Baqavi
Uṅkaḷ kaikaḷait (taṟcamayam pōrpuriyātu) taṭuttuk koḷḷavum, toḻukaiyai uṟutiyākak kaṭaippiṭikkavum, jakāttaik koṭuttuvaravum eṉṟu evarkaḷukkuk kūṟappaṭṭatō avarkaḷai nīr pārkkavillaiyā? Pōrpuriya avarkaḷukkuk kaṭṭaḷaiyiṭappaṭṭapoḻutu avarkaḷil oru piriviṉarō allāhvukkup payappaṭuvataippōl allatu ataiviṭa atikamākavē maṉitarkaḷukkup payantu ‘‘eṅkaḷ iṟaivaṉē! Ēṉ eṅkaḷ mītu pōraik kaṭamaiyākkiṉāy? Iṉṉum ciṟitu kālattiṟku itaip piṟpaṭutta vēṇṭāmā?'' Eṉṟu kūṟa ārampittu viṭṭārkaḷ. (Itaṟku napiyē!) Nīr kūṟuvīrāka: ‘‘Ivvulaka vāḻkkai veku aṟpamāṉatē! Evaṉ (allāhvukkup) payantu naṭakkiṟāṉō avaṉukku maṟumai(yiṉ vāḻkkai)tāṉ mika mēlāṉatu. (Uṅkaḷ naṉmaiyaik kuṟaittō, pāvattaik kūṭṭiyō) nīṅkaḷ oru nūlaḷavum aniyāyam ceyyappaṭa māṭṭīrkaḷ
Jan Turst Foundation
unkalutaiya kaikalai(p por ceyvatininrum) tatuttuk kontum, tolukaiyai nilainiruttiyum, jakkattai kotuttum varuvirkalaka!" Enru evarkalukkuk kurappattato avarkalai (napiye!) Ninkal parkkavillaiya? Pinnar, por ceyya ventum enru avarkalukkuk kattalaiyitappattapotu, avarkalil oru pirivinar allahvukkup payappatupavataip pol allatu ataivita atikamakave manitarkalukkup payappattu"enkal iraivane! Enkal mitu en (ip) porai vitiyakkinay? Ciritu kalam enkalukkaka itaip pirpatuttiyirukkak kutata? Enru kuralanarkal. (Napiye!) Nir kuruviraka, "ivvulaka inpam arpamanatu, maruvulaka(inpa)m, payapaktiyutaiyorukku mikavum melanatu. Ninkal ellalavenum aniyayam ceyyappatamattirkal
Jan Turst Foundation
uṅkaḷuṭaiya kaikaḷai(p pōr ceyvatiṉiṉṟum) taṭuttuk koṇṭum, toḻukaiyai nilainiṟuttiyum, jakkāttai koṭuttum varuvīrkaḷāka!" Eṉṟu evarkaḷukkuk kūṟappaṭṭatō avarkaḷai (napiyē!) Nīṅkaḷ pārkkavillaiyā? Piṉṉar, pōr ceyya vēṇṭum eṉṟu avarkaḷukkuk kaṭṭaḷaiyiṭappaṭṭapōtu, avarkaḷil oru piriviṉar allāhvukkup payappaṭupavataip pōl allatu ataiviṭa atikamākavē maṉitarkaḷukkup payappaṭṭu"eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷ mītu ēṉ (ip) pōrai vitiyākkiṉāy? Ciṟitu kālam eṅkaḷukkāka itaip piṟpaṭuttiyirukkak kūṭātā? Eṉṟu kūṟalāṉārkaḷ. (Napiyē!) Nīr kūṟuvīrāka, "ivvulaka iṉpam aṟpamāṉatu, maṟuvulaka(iṉpa)m, payapaktiyuṭaiyōrukku mikavum mēlāṉatu. Nīṅkaḷ eḷḷaḷavēṉum aniyāyam ceyyappaṭamāṭṭīrkaḷ
Jan Turst Foundation
உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக!" என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு "எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக, "இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது. நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek