×

நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது 4:78 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:78) ayat 78 in Tamil

4:78 Surah An-Nisa’ ayat 78 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 78 - النِّسَاء - Page - Juz 5

﴿أَيۡنَمَا تَكُونُواْ يُدۡرِككُّمُ ٱلۡمَوۡتُ وَلَوۡ كُنتُمۡ فِي بُرُوجٖ مُّشَيَّدَةٖۗ وَإِن تُصِبۡهُمۡ حَسَنَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِكَۚ قُلۡ كُلّٞ مِّنۡ عِندِ ٱللَّهِۖ فَمَالِ هَٰٓؤُلَآءِ ٱلۡقَوۡمِ لَا يَكَادُونَ يَفۡقَهُونَ حَدِيثٗا ﴾
[النِّسَاء: 78]

நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (நபியே! உமது கட்டளைப்படி போருக்குச் சென்ற) அவர்களை ஒரு நன்மை அடையும் பட்சத்தில் ‘‘இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டு விட்டாலோ ‘‘(நபியே!) இது உம்மால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது)'' எனக் கூறுகின்றனர். (ஆகவே,) நீர் கூறுவீராக: ‘‘(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்வதில்லையே

❮ Previous Next ❯

ترجمة: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة, باللغة التاميلية

﴿أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة﴾ [النِّسَاء: 78]

Abdulhameed Baqavi
ninkal enkiruntapotilum maranam unkalai atainte tirum; mikap palamana uyarnta (kottai) kottalattin mitu ninkal iruntapotilum cariye! (Napiye! Umatu kattalaippati porukkuc cenra) avarkalai oru nanmai ataiyum patcattil ‘‘itu allahvitamiruntu (enkalukkuk) kitaittatu'' enak kurukinranar. Avarkalukku oru tinku erpattu vittalo ‘‘(napiye!) Itu um'maltan (enkalukku erpattatu)'' enak kurukinranar. (Akave,) nir kuruviraka: ‘‘(Nanaka en istappati unkalukkuk kattalaiyitavillai. Allah arivittapatiye nan unkalukku kattalaiyitten. Akave,) anaittum allahvitamirunte kitaikkinrana. Ivarkalukku enna nerntuvittatu? Evvisayattaiyume ivarkal arintu kolvatillaiye
Abdulhameed Baqavi
nīṅkaḷ eṅkiruntapōtilum maraṇam uṅkaḷai aṭaintē tīrum; mikap palamāṉa uyarnta (kōṭṭai) kottaḷattiṉ mītu nīṅkaḷ iruntapōtilum cariyē! (Napiyē! Umatu kaṭṭaḷaippaṭi pōrukkuc ceṉṟa) avarkaḷai oru naṉmai aṭaiyum paṭcattil ‘‘itu allāhviṭamiruntu (eṅkaḷukkuk) kiṭaittatu'' eṉak kūṟukiṉṟaṉar. Avarkaḷukku oru tīṅku ēṟpaṭṭu viṭṭālō ‘‘(napiyē!) Itu um'māltāṉ (eṅkaḷukku ēṟpaṭṭatu)'' eṉak kūṟukiṉṟaṉar. (Ākavē,) nīr kūṟuvīrāka: ‘‘(Nāṉāka eṉ iṣṭappaṭi uṅkaḷukkuk kaṭṭaḷaiyiṭavillai. Allāh aṟivittapaṭiyē nāṉ uṅkaḷukku kaṭṭaḷaiyiṭṭēṉ. Ākavē,) aṉaittum allāhviṭamiruntē kiṭaikkiṉṟaṉa. Ivarkaḷukku eṉṉa nērntuviṭṭatu? Evviṣayattaiyumē ivarkaḷ aṟintu koḷvatillaiyē
Jan Turst Foundation
ninkal enkiruntapotilum unkalai maranam atainte tirum;. Ninkal mikavum urutiyakak kattappatta kottaikalil irunta potilum cariye! (Porukkuc cenra munahpikkalukku) etenum oru nanmai erpattal"itu allahvitamiruntu kitaittatu" enru kurukirarkal;. Anal, avarkalukku etavatu tinku erpattalo, "itu um'mitam iruntutan erpattatu" enru kurukirarkal, (napiye! Avarkalitam) kurum; "ellam allahvitamirunte vantirukkinrana. Inta makkalukku enna nerntuvittatu? Enta oru visayattaiyum avarkalukku vilankik kolla mutiyavillaiye
Jan Turst Foundation
nīṅkaḷ eṅkiruntapōtilum uṅkaḷai maraṇam aṭaintē tīrum;. Nīṅkaḷ mikavum uṟutiyākak kaṭṭappaṭṭa kōṭṭaikaḷil irunta pōtilum cariyē! (Pōrukkuc ceṉṟa muṉāḥpikkaḷukku) ētēṉum oru naṉmai ēṟpaṭṭāl"itu allāhviṭamiruntu kiṭaittatu" eṉṟu kūṟukiṟārkaḷ;. Āṉāl, avarkaḷukku ētāvatu tīṅku ēṟpaṭṭālō, "itu um'miṭam iruntutāṉ ēṟpaṭṭatu" eṉṟu kūṟukiṟārkaḷ, (napiyē! Avarkaḷiṭam) kūṟum; "ellām allāhviṭamiruntē vantirukkiṉṟaṉa. Inta makkaḷukku eṉṉa nērntuviṭṭatu? Enta oru viṣayattaiyum avarkaḷukku viḷaṅkik koḷḷa muṭiyavillaiyē
Jan Turst Foundation
நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது" என்று கூறுகிறார்கள்;. ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, "இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது" என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்; "எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek