×

பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் 5:110 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:110) ayat 110 in Tamil

5:110 Surah Al-Ma’idah ayat 110 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 110 - المَائدة - Page - Juz 7

﴿إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱذۡكُرۡ نِعۡمَتِي عَلَيۡكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذۡ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلۡقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗاۖ وَإِذۡ عَلَّمۡتُكَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَۖ وَإِذۡ تَخۡلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ بِإِذۡنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِيۖ وَتُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ بِإِذۡنِيۖ وَإِذۡ تُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِيۖ وَإِذۡ كَفَفۡتُ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَنكَ إِذۡ جِئۡتَهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ ﴾
[المَائدة: 110]

பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் மீது(ம் நான் புரிந்து)ள்ள என் அருளை நினைத்துப் பார்ப்பீராக. பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உமக்கு உதவி புரிந்து (உமது தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீர் தொட்டில் குழந்தையாக இருந்த சமயத்திலும் (உமது தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உம்மைப் பேசச் செய்ததையும், (நினைத்துப் பார்ப்பீராக.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). மேலும், நீர் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையாக மாறியதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உதவியினால் நீர் சுகமாக்கியதையும் (நினைத்துப் பார்ப்பீராக). நீர் என் அருளைக்கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உமக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பார்ப்பீராக

❮ Previous Next ❯

ترجمة: إذ قال الله ياعيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ, باللغة التاميلية

﴿إذ قال الله ياعيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ﴾ [المَائدة: 110]

Abdulhameed Baqavi
Piraku allah (isavai nokkik) kuruvan: ‘‘Maryamutaiya makan isave! Um mitum, umatu tay mitu(m nan purintu)lla en arulai ninaittup parppiraka. Paricutta atmavaik kontu umakku utavi purintu (umatu tayin paricuttat tanmaiyaip parri) nir tottil kulantaiyaka irunta camayattilum (umatu tirkka taricanattaip parri) valipattilum um'maip pecac ceytataiyum, (ninaittup parppiraka.) Vetattaiyum, nanattaiyum, tavrattaiyum, injilaiyum nan umakkuk karpittataiyum (ninaittup parppiraka). Melum, nir en kattalaippati kalimannal paravaiyin uruvattaip pol ceytu atil nir utiya camayattil, atu en kattalaiyaik kontu paravaiyaka mariyataiyum, piravik kurutanaiyum, ven kustarokiyaiyum en utaviyinal nir cukamakkiyataiyum (ninaittup parppiraka). Nir en arulaikkontu maranittavarkalai (kallaraiyiliruntu uyirkotuttu) purappatac ceytataiyum (ninaittup parppiraka). Israyilin cantatikalitam nir telivana attatcikalaik kontu vantapotu avarkalil nirakarittavarkal niccayamaka itu cantekamarra cuniyattait tavira veralla enru kuriya(tutan umakkut tinkilaikka muyarcitta) camayattil avar(kalutaiya tinku)kaliliruntu nan um'mai tatuttuk kontataiyum ninaittup parppiraka
Abdulhameed Baqavi
Piṟaku allāh (īsāvai nōkkik) kūṟuvāṉ: ‘‘Maryamuṭaiya makaṉ īsāvē! Um mītum, umatu tāy mītu(m nāṉ purintu)ḷḷa eṉ aruḷai niṉaittup pārppīrāka. Paricutta ātmāvaik koṇṭu umakku utavi purintu (umatu tāyiṉ paricuttat taṉmaiyaip paṟṟi) nīr toṭṭil kuḻantaiyāka irunta camayattilum (umatu tīrkka taricaṉattaip paṟṟi) vālipattilum um'maip pēcac ceytataiyum, (niṉaittup pārppīrāka.) Vētattaiyum, ñāṉattaiyum, tavṟāttaiyum, iṉjīlaiyum nāṉ umakkuk kaṟpittataiyum (niṉaittup pārppīrāka). Mēlum, nīr eṉ kaṭṭaḷaippaṭi kaḷimaṇṇāl paṟavaiyiṉ uruvattaip pōl ceytu atil nīr ūtiya camayattil, atu eṉ kaṭṭaḷaiyaik koṇṭu paṟavaiyāka māṟiyataiyum, piṟavik kuruṭaṉaiyum, veṇ kuṣṭarōkiyaiyum eṉ utaviyiṉāl nīr cukamākkiyataiyum (niṉaittup pārppīrāka). Nīr eṉ aruḷaikkoṇṭu maraṇittavarkaḷai (kallaṟaiyiliruntu uyirkoṭuttu) puṟappaṭac ceytataiyum (niṉaittup pārppīrāka). Isrāyīliṉ cantatikaḷiṭam nīr teḷivāṉa attāṭcikaḷaik koṇṭu vantapōtu avarkaḷil nirākarittavarkaḷ niccayamāka itu cantēkamaṟṟa cūṉiyattait tavira vēṟalla eṉṟu kūṟiya(tuṭaṉ umakkut tīṅkiḻaikka muyaṟcitta) camayattil avar(kaḷuṭaiya tīṅku)kaḷiliruntu nāṉ um'mai taṭuttuk koṇṭataiyum niṉaittup pārppīrāka
Jan Turst Foundation
Appolutu allah kuruvan; "maryamutaiya makan isave nan um'mitum, um tayar mitum aruliya en nihmattai (arul kotaiyayai) ninaivu kurum. Paricutta anmavaik kontu umakku utaviyalittu, nir tottililum (kulantaip paruvattilum), valipap paruvattilum manitarkalitam pecac ceytataiyum, innum nan umakku vetattaiyum, nanattaiyum, tavrattaiyum, injilaiyum karruk kotuttataiyum (ninaittup parum). Innum nir kalimanninal en uttaravaik kontu paravai vativattaip poluntakki atil nir utiyapotu atu en uttaravaik kontu paravaiyakiyataiyum, innum en uttaravaik kontu piravik kurutanaiyum, ven kustakkaralaiyum cukappatuttiyataiyum, (ninaittup parum). Irantorai en uttaravaik kontu (uyirppittuk kallaraikaliliruntu) velippatuttiyataiyum (ninaittup parum). Anriyum israyilin cantatiyinaritam nir telivana attatcikalaik kontu vantapotu, avarkalil nirakarittavarkal, "itu telivana cuniyattait tavira veru illai" enru kuriyavelai, avarkal (umakkut tinku ceyyatavaru) nan tatuttu vittataiyum ninaittup parum
Jan Turst Foundation
Appoḻutu allāh kūṟuvāṉ; "maryamuṭaiya makaṉ īsāvē nāṉ um'mītum, um tāyār mītum aruḷiya eṉ niḥmattai (aruḷ koṭaiyayai) niṉaivu kūṟum. Paricutta āṉmāvaik koṇṭu umakku utaviyaḷittu, nīr toṭṭililum (kuḻantaip paruvattilum), vālipap paruvattilum maṉitarkaḷiṭam pēcac ceytataiyum, iṉṉum nāṉ umakku vētattaiyum, ñāṉattaiyum, tavrāttaiyum, iṉjīlaiyum kaṟṟuk koṭuttataiyum (niṉaittup pārum). Iṉṉum nīr kaḷimaṇṇiṉāl eṉ uttaravaik koṇṭu paṟavai vaṭivattaip pōluṇṭākki atil nīr ūtiyapōtu atu eṉ uttaravaik koṇṭu paṟavaiyākiyataiyum, iṉṉum eṉ uttaravaik koṇṭu piṟavik kuruṭaṉaiyum, veṇ kuṣṭakkāraḷaiyum cukappaṭuttiyataiyum, (niṉaittup pārum). Iṟantōrai eṉ uttaravaik koṇṭu (uyirppittuk kallaṟaikaḷiliruntu) veḷippaṭuttiyataiyum (niṉaittup pārum). Aṉṟiyum isrāyīliṉ cantatiyiṉariṭam nīr teḷivāṉa attāṭcikaḷaik koṇṭu vantapōtu, avarkaḷil nirākarittavarkaḷ, "itu teḷivāṉa cūṉiyattait tavira vēṟu illai" eṉṟu kūṟiyavēḷai, avarkaḷ (umakkut tīṅku ceyyātavāṟu) nāṉ taṭuttu viṭṭataiyum niṉaittup pārum
Jan Turst Foundation
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek