×

இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே 5:32 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:32) ayat 32 in Tamil

5:32 Surah Al-Ma’idah ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 32 - المَائدة - Page - Juz 6

﴿مِنۡ أَجۡلِ ذَٰلِكَ كَتَبۡنَا عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفۡسَۢا بِغَيۡرِ نَفۡسٍ أَوۡ فَسَادٖ فِي ٱلۡأَرۡضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعٗا وَمَنۡ أَحۡيَاهَا فَكَأَنَّمَآ أَحۡيَا ٱلنَّاسَ جَمِيعٗاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُنَا بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ إِنَّ كَثِيرٗا مِّنۡهُم بَعۡدَ ذَٰلِكَ فِي ٱلۡأَرۡضِ لَمُسۡرِفُونَ ﴾
[المَائدة: 32]

இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். மேலும், அவர்களிடம் நமது பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே வந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير, باللغة التاميلية

﴿من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير﴾ [المَائدة: 32]

Abdulhameed Baqavi
itan karanamakave ‘‘evanoruvan marror atmavaik kolaikkup patilaka allatu pumiyil kulappattait tatai ceyvatarkakave tavira (aniyayamakak) kolai ceykirano avan manitarkal anaivaraiyume kolai ceytavan polavan. Melum, evan or atmavai vala vaikkirano avan manitarkal anaivaraiyum valavaittavan polavan'' enru israyilin cantatikalukku (alitta karpalakaiyil) nam varaintu vittom. Melum, avarkalitam namatu pala tutarkal niccayamakat telivana attatcikalaiyum kontu vantiruntarkal. Itarkup pinnarum, avarkalil perumpalanavarkal pumiyil varampu katante vantanar
Abdulhameed Baqavi
itaṉ kāraṇamākavē ‘‘evaṉoruvaṉ maṟṟōr ātmāvaik kolaikkup patilāka allatu pūmiyil kuḻappattait taṭai ceyvataṟkākavē tavira (aniyāyamākak) kolai ceykiṟāṉō avaṉ maṉitarkaḷ aṉaivaraiyumē kolai ceytavaṉ pōlāvāṉ. Mēlum, evaṉ ōr ātmāvai vāḻa vaikkiṟāṉō avaṉ maṉitarkaḷ aṉaivaraiyum vāḻavaittavaṉ pōlāvāṉ'' eṉṟu isrāyīliṉ cantatikaḷukku (aḷitta kaṟpalakaiyil) nām varaintu viṭṭōm. Mēlum, avarkaḷiṭam namatu pala tūtarkaḷ niccayamākat teḷivāṉa attāṭcikaḷaiyum koṇṭu vantiruntārkaḷ. Itaṟkup piṉṉarum, avarkaḷil perumpālāṉavarkaḷ pūmiyil varampu kaṭantē vantaṉar
Jan Turst Foundation
itan karanamakave, "niccayamaka evan oruvan kolaikkup patilakavo allatu pumiyil erpatum kulappattai(t tatuppatarkakavo) anri, marroruvaraik kolai ceykirano avan manitarkal yavaraiyume kolai ceytavan polavan;. Melum, evaroruvar or atmavai vala vaikkiraro avar makkal yavaraiyum vala vaippavaraip polavar" enru israyilin cantatiyinarukku vitittom. Melum, niccayamaka nam tutarkal avarkalitam telivana attatcikalaik kontu vantarkal; itan pinnarum avarkalil perumpalor pumiyil varampu katantavarkalakave irukkinranar
Jan Turst Foundation
itaṉ kāraṇamākavē, "niccayamāka evaṉ oruvaṉ kolaikkup patilākavō allatu pūmiyil ēṟpaṭum kuḻappattai(t taṭuppataṟkākavō) aṉṟi, maṟṟoruvaraik kolai ceykiṟāṉō avaṉ maṉitarkaḷ yāvaraiyumē kolai ceytavaṉ pōlāvāṉ;. Mēlum, evaroruvar ōr ātmāvai vāḻa vaikkiṟārō avar makkaḷ yāvaraiyum vāḻa vaippavaraip pōlāvār" eṉṟu isrāyīliṉ cantatiyiṉarukku vitittōm. Mēlum, niccayamāka nam tūtarkaḷ avarkaḷiṭam teḷivāṉa attāṭcikaḷaik koṇṭu vantārkaḷ; itaṉ piṉṉarum avarkaḷil perumpālōr pūmiyil varampu kaṭantavarkaḷākavē irukkiṉṟaṉar
Jan Turst Foundation
இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek