×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், 5:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:6) ayat 6 in Tamil

5:6 Surah Al-Ma’idah ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 6 - المَائدة - Page - Juz 6

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قُمۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغۡسِلُواْ وُجُوهَكُمۡ وَأَيۡدِيَكُمۡ إِلَى ٱلۡمَرَافِقِ وَٱمۡسَحُواْ بِرُءُوسِكُمۡ وَأَرۡجُلَكُمۡ إِلَى ٱلۡكَعۡبَيۡنِۚ وَإِن كُنتُمۡ جُنُبٗا فَٱطَّهَّرُواْۚ وَإِن كُنتُم مَّرۡضَىٰٓ أَوۡ عَلَىٰ سَفَرٍ أَوۡ جَآءَ أَحَدٞ مِّنكُم مِّنَ ٱلۡغَآئِطِ أَوۡ لَٰمَسۡتُمُ ٱلنِّسَآءَ فَلَمۡ تَجِدُواْ مَآءٗ فَتَيَمَّمُواْ صَعِيدٗا طَيِّبٗا فَٱمۡسَحُواْ بِوُجُوهِكُمۡ وَأَيۡدِيكُم مِّنۡهُۚ مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجۡعَلَ عَلَيۡكُم مِّنۡ حَرَجٖ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمۡ وَلِيُتِمَّ نِعۡمَتَهُۥ عَلَيۡكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴾
[المَائدة: 6]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரை உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை(த் தடவி) ‘மஸஹு' செய்துகொள்ளுங்கள். நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் (கை கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அன்றி, நீங்கள் நோயாளிகளாக இருந்தால் அல்லது பயணத்தில் இருந்தால் அல்லது உங்களில் எவரும் மலஜல பாதைக்குச் சென்று வந்திருந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால், (தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதை)க்கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகிறான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق﴾ [المَائدة: 6]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Ninkal tolukaikkuc cenral (atarku munnar) unkal mukankalaiyum, mulankaikal varai unkal kaikalaiyum, kanukkalkal varai unkal iru patankalaiyum kaluvikkollunkal. (Unkal kaiyil nirait tottu) unkal talaiyai(t tatavi) ‘masahu' ceytukollunkal. Ninkal mulukkutaiyavarkalaka iruntal (kai kalkalai mattum kaluvinal potatu. Utal muluvataiyum kaluvi) tuymaiyakkik kollunkal. Anri, ninkal noyalikalaka iruntal allatu payanattil iruntal allatu unkalil evarum malajala pataikkuc cenru vantiruntal allatu ninkal penkalait tintiyiruntal, (tolukaiyin neram vantu unkalaic cuttam ceytu kolvatarku ventiya) tannirai ninkal peravillaiyenil (tayam'mum ceytu kollunkal. Atavatu) cuttamana mannai (unkal kaikalal tottu atai)kkontu unkal mukankalaiyum, kaikalaiyum tutaittuk kollunkal. Unkalukkuk kastattait tara allah virumpavillai. Eninum, avan unkalaip paricuttamakki vaikkavum, tan arutkotaiyai unkal mitu mulumaiyakki vaikkavume virumpukiran. (Itarkaka) ninkal avanukku nanri celuttuvirkalaka
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ toḻukaikkuc ceṉṟāl (ataṟku muṉṉar) uṅkaḷ mukaṅkaḷaiyum, muḻaṅkaikaḷ varai uṅkaḷ kaikaḷaiyum, kaṇukkālkaḷ varai uṅkaḷ iru pātaṅkaḷaiyum kaḻuvikkoḷḷuṅkaḷ. (Uṅkaḷ kaiyil nīrait toṭṭu) uṅkaḷ talaiyai(t taṭavi) ‘masahu' ceytukoḷḷuṅkaḷ. Nīṅkaḷ muḻukkuṭaiyavarkaḷāka iruntāl (kai kālkaḷai maṭṭum kaḻuviṉāl pōtātu. Uṭal muḻuvataiyum kaḻuvi) tūymaiyākkik koḷḷuṅkaḷ. Aṉṟi, nīṅkaḷ nōyāḷikaḷāka iruntāl allatu payaṇattil iruntāl allatu uṅkaḷil evarum malajala pātaikkuc ceṉṟu vantiruntāl allatu nīṅkaḷ peṇkaḷait tīṇṭiyiruntāl, (toḻukaiyiṉ nēram vantu uṅkaḷaic cuttam ceytu koḷvataṟku vēṇṭiya) taṇṇīrai nīṅkaḷ peṟavillaiyeṉil (tayam'mum ceytu koḷḷuṅkaḷ. Atāvatu) cuttamāṉa maṇṇai (uṅkaḷ kaikaḷāl toṭṭu atai)kkoṇṭu uṅkaḷ mukaṅkaḷaiyum, kaikaḷaiyum tuṭaittuk koḷḷuṅkaḷ. Uṅkaḷukkuk kaṣṭattait tara allāh virumpavillai. Eṉiṉum, avaṉ uṅkaḷaip paricuttamākki vaikkavum, taṉ aruṭkoṭaiyai uṅkaḷ mītu muḻumaiyākki vaikkavumē virumpukiṟāṉ. (Itaṟkāka) nīṅkaḷ avaṉukku naṉṟi celuttuvīrkaḷāka
Jan Turst Foundation
Muhminkale! Ninkal tolukaikkut tayarakumpotu, (munnataka) unkal mukankalaiyum, mulankaikal varai unkal iru kaikalaiyum, kaluvik kollunkal;. Unkalutaiya talaikalai (irakkaiyal) tatavi (masahu ceytu) kollunkal;. Unkal kalkalai iru kanukkal varai(k kaluvik kollunkal) - ninkal peruntotakkutaiyoraka (kulikkak katamaip pattoraka) iruntal kulittu(t tekam muluvataiyum cuttam ceytu)k kollunkal;. Tavira ninkala noyalikalakavo, allatu pirayanattilo iruntal, allatu unkalil evarum mala jalam kalittu vantalum, allatu ninkal penkalait tinti (utal uravu konti)runtalum (unkalaic cuttappatuttik kolla) unkalukkut tannir kitaikkavittal (tayam'mum ceytu kollunkal;. Atavatu) cuttamana mannaik (kaiyinal tatavik) kontu avaikalal unkal mukankalaiyum, unkalutaiya kaikalaiyum tatavik kollunkal;. Allah unkalai varuttak kutiya enta ciramattaiyum kotukka virumpavillai - anal avan unkalait tuymaip patuttavum; innum ninkal avanukku nanri celuttum poruttu, tanatu arutkotaiyai unkal mitu mulumaiyakkavum virumpukiran
Jan Turst Foundation
Muḥmiṉkaḷē! Nīṅkaḷ toḻukaikkut tayārākumpōtu, (muṉṉatāka) uṅkaḷ mukaṅkaḷaiyum, muḻaṅkaikaḷ varai uṅkaḷ iru kaikaḷaiyum, kaḻuvik koḷḷuṅkaḷ;. Uṅkaḷuṭaiya talaikaḷai (īrakkaiyāl) taṭavi (masahu ceytu) koḷḷuṅkaḷ;. Uṅkaḷ kālkaḷai iru kaṇukkāl varai(k kaḻuvik koḷḷuṅkaḷ) - nīṅkaḷ peruntoṭakkuṭaiyōrāka (kuḷikkak kaṭamaip paṭṭōrāka) iruntāl kuḷittu(t tēkam muḻuvataiyum cuttam ceytu)k koḷḷuṅkaḷ;. Tavira nīṅkaḷa nōyāḷikaḷākavō, allatu pirayāṇattilō iruntāl, allatu uṅkaḷil evarum mala jalam kaḻittu vantālum, allatu nīṅkaḷ peṇkaḷait tīṇṭi (uṭal uṟavu koṇṭi)runtālum (uṅkaḷaic cuttappaṭuttik koḷḷa) uṅkaḷukkut taṇṇīr kiṭaikkāviṭṭāl (tayam'mum ceytu koḷḷuṅkaḷ;. Atāvatu) cuttamāṉa maṇṇaik (kaiyiṉāl taṭavik) koṇṭu avaikaḷāl uṅkaḷ mukaṅkaḷaiyum, uṅkaḷuṭaiya kaikaḷaiyum taṭavik koḷḷuṅkaḷ;. Allāh uṅkaḷai varuttak kūṭiya enta ciramattaiyum koṭukka virumpavillai - āṉāl avaṉ uṅkaḷait tūymaip paṭuttavum; iṉṉum nīṅkaḷ avaṉukku naṉṟi celuttum poruṭṭu, taṉatu aruṭkoṭaiyai uṅkaḷ mītu muḻumaiyākkavum virumpukiṟāṉ
Jan Turst Foundation
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்;. உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;. தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek