×

உங்களுக்கென்ன நேர்ந்தது! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் தர்மம் செய்ய வேண்டாமா? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்குரியதுதானே! 57:10 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:10) ayat 10 in Tamil

57:10 Surah Al-hadid ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 10 - الحدِيد - Page - Juz 27

﴿وَمَا لَكُمۡ أَلَّا تُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا يَسۡتَوِي مِنكُم مَّنۡ أَنفَقَ مِن قَبۡلِ ٱلۡفَتۡحِ وَقَٰتَلَۚ أُوْلَٰٓئِكَ أَعۡظَمُ دَرَجَةٗ مِّنَ ٱلَّذِينَ أَنفَقُواْ مِنۢ بَعۡدُ وَقَٰتَلُواْۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴾
[الحدِيد: 10]

உங்களுக்கென்ன நேர்ந்தது! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் தர்மம் செய்ய வேண்டாமா? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்குரியதுதானே! உங்களில் எவர்கள் (மக்காவை) வெல்வதற்கு முன்னர் தம் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தார்களோ, அவர்களும் அதற்குப் பின்னர், தம் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள். அவர்கள் (-மக்கா வெற்றிக்கு முன் செலவு செய்து போரிட்டவர்கள்) அதற்கு பின்னர் செலவு செய்து போரிட்டவர்களைவிட மகத்தான பதவி உடையவர்கள். எனினும், இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையை (சொர்க்கத்தை)த்தான் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السموات والأرض لا, باللغة التاميلية

﴿وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السموات والأرض لا﴾ [الحدِيد: 10]

Abdulhameed Baqavi
unkalukkenna nerntatu! Allahvutaiya pataiyil ninkal tarmam ceyya ventama? Vanankal, pumiyilullavarrin urimai allahvukkuriyatutane! Unkalil evarkal (makkavai) velvatarku munnar tam porulaic celavu ceytu por purintarkalo, avarkalum atarkup pinnar, tam porulaic celavu ceytu por purintavarkalum camamaka mattarkal. Avarkal (-makka verrikku mun celavu ceytu porittavarkal) atarku pinnar celavu ceytu porittavarkalaivita makattana patavi utaiyavarkal. Eninum, ivviruvarukkum allah nanmaiyai (corkkattai)ttan vakkalittirukkiran. Allah ninkal ceypavarrai nankarintavan avan
Abdulhameed Baqavi
uṅkaḷukkeṉṉa nērntatu! Allāhvuṭaiya pātaiyil nīṅkaḷ tarmam ceyya vēṇṭāmā? Vāṉaṅkaḷ, pūmiyiluḷḷavaṟṟiṉ urimai allāhvukkuriyatutāṉē! Uṅkaḷil evarkaḷ (makkāvai) velvataṟku muṉṉar tam poruḷaic celavu ceytu pōr purintārkaḷō, avarkaḷum ataṟkup piṉṉar, tam poruḷaic celavu ceytu pōr purintavarkaḷum camamāka māṭṭārkaḷ. Avarkaḷ (-makkā veṟṟikku muṉ celavu ceytu pōriṭṭavarkaḷ) ataṟku piṉṉar celavu ceytu pōriṭṭavarkaḷaiviṭa makattāṉa patavi uṭaiyavarkaḷ. Eṉiṉum, ivviruvarukkum allāh naṉmaiyai (corkkattai)ttāṉ vākkaḷittirukkiṟāṉ. Allāh nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
anriyum allahvin pataiyil ninkal celavu ceyyatirukka unkalukku enna nerntatu? Vanankal, pumiyilullavarrin anantara pattiyatai allahvutaiyate! (Makka) verrikku munnar celavu ceytu, porittavarkalukku unkalil ninrum (evarum) camamaka mattar, (makkavin verrikkup) pin, celavu ceytu porittavarkalaivita, avarkal pataviyal mikavum makattanavarkal, eninum allah ellorukkume alakanataiye vakkalittirukkinran. Anriyum allah ninkal ceypavarrai nanku terintavan
Jan Turst Foundation
aṉṟiyum allāhviṉ pātaiyil nīṅkaḷ celavu ceyyātirukka uṅkaḷukku eṉṉa nērntatu? Vāṉaṅkaḷ, pūmiyiluḷḷavaṟṟiṉ aṉantara pāttiyatai allāhvuṭaiyatē! (Makkā) veṟṟikku muṉṉar celavu ceytu, pōriṭṭavarkaḷukku uṅkaḷil niṉṟum (evarum) camamāka māṭṭār, (makkāviṉ veṟṟikkup) piṉ, celavu ceytu pōriṭṭavarkaḷaiviṭa, avarkaḷ pataviyāl mikavum makattāṉavarkaḷ, eṉiṉum allāh ellōrukkumē aḻakāṉataiyē vākkaḷittirukkiṉṟāṉ. Aṉṟiyum allāh nīṅkaḷ ceypavaṟṟai naṉku terintavaṉ
Jan Turst Foundation
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார், (மக்காவின் வெற்றிக்குப்) பின், செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek