×

நாம் நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். 57:25 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:25) ayat 25 in Tamil

57:25 Surah Al-hadid ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 25 - الحدِيد - Page - Juz 27

﴿لَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلَنَا بِٱلۡبَيِّنَٰتِ وَأَنزَلۡنَا مَعَهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلۡقِسۡطِۖ وَأَنزَلۡنَا ٱلۡحَدِيدَ فِيهِ بَأۡسٞ شَدِيدٞ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُۥ وَرُسُلَهُۥ بِٱلۡغَيۡبِۚ إِنَّ ٱللَّهَ قَوِيٌّ عَزِيزٞ ﴾
[الحدِيد: 25]

நாம் நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்து கொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். இரும்பையும் நாமே படைத்தோம். அதில் பெரும் சக்தி இருக்கிறது; இன்னும் மனிதர்களுக்கு பல பயன்களும் உள்ளன. அல்லாஹ்வைக் (கண்ணால்) காணாமலேயே (அவனை நம்பிக்கை கொண்டு) இதன் மூலம் அவனுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் பலசாலியும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: لقد أرسلنا رسلنا بالبينات وأنـزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنـزلنا, باللغة التاميلية

﴿لقد أرسلنا رسلنا بالبينات وأنـزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنـزلنا﴾ [الحدِيد: 25]

Abdulhameed Baqavi
Nam nam tutarkalait telivana attatcikalaik konte anuppi vaittom. Attutan avarkalukku vetattaiyum kotuttom. Manitarkal nitamaka natantu kollum poruttu taracaiyum kotuttom. Irumpaiyum name pataittom. Atil perum cakti irukkiratu; innum manitarkalukku pala payankalum ullana. Allahvaik (kannal) kanamaleye (avanai nampikkai kontu) itan mulam avanukkum, avanutaiya tutarukkum utavi ceypavarkal yar enpatai allah (cotittu) arintu kolkiran. Niccayamaka allah palacaliyum (anaivaraiyum) mikaittavanum avan
Abdulhameed Baqavi
Nām nam tūtarkaḷait teḷivāṉa attāṭcikaḷaik koṇṭē aṉuppi vaittōm. Attuṭaṉ avarkaḷukku vētattaiyum koṭuttōm. Maṉitarkaḷ nītamāka naṭantu koḷḷum poruṭṭu tarācaiyum koṭuttōm. Irumpaiyum nāmē paṭaittōm. Atil perum cakti irukkiṟatu; iṉṉum maṉitarkaḷukku pala payaṉkaḷum uḷḷaṉa. Allāhvaik (kaṇṇāl) kāṇāmalēyē (avaṉai nampikkai koṇṭu) itaṉ mūlam avaṉukkum, avaṉuṭaiya tūtarukkum utavi ceypavarkaḷ yār eṉpatai allāh (cōtittu) aṟintu koḷkiṟāṉ. Niccayamāka allāh palacāliyum (aṉaivaraiyum) mikaittavaṉum āvāṉ
Jan Turst Foundation
niccayamaka nam tutarkalait telivana attatcikalutan anuppinom, anriyum, manitarkal nitiyutan nilaippatarkaka, avarkalutan vetattaiyum (nitattin) tulakkolaiyum irakkinom, innum, irumpaiyum pataittom, atil katum apayamumirukkiratu, eninum (atil) manitarkalukkup pala payankalum irukkinrana - (ivarrin mulamakat) tanakkum, tannutaiya tutarukkum maraimukamakavum utavi ceypavar evar enpataiyum (cotit) arintu kolvatarkaka allah (ivvaru arulkiran); niccayamaka allah palam mikkavan, (yavaraiyum) mikaittavan
Jan Turst Foundation
niccayamāka nam tūtarkaḷait teḷivāṉa attāṭcikaḷuṭaṉ aṉuppiṉōm, aṉṟiyum, maṉitarkaḷ nītiyuṭaṉ nilaippataṟkāka, avarkaḷuṭaṉ vētattaiyum (nītattiṉ) tulākkōlaiyum iṟakkiṉōm, iṉṉum, irumpaiyum paṭaittōm, atil kaṭum apāyamumirukkiṟatu, eṉiṉum (atil) maṉitarkaḷukkup pala payaṉkaḷum irukkiṉṟaṉa - (ivaṟṟiṉ mūlamākat) taṉakkum, taṉṉuṭaiya tūtarukkum maṟaimukamākavum utavi ceypavar evar eṉpataiyum (cōtit) aṟintu koḷvataṟkāka allāh (ivvāṟu aruḷkiṟāṉ); niccayamāka allāh palam mikkavaṉ, (yāvaraiyum) mikaittavaṉ
Jan Turst Foundation
நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம், இன்னும், இரும்பையும் படைத்தோம், அதில் கடும் அபாயமுமிருக்கிறது, எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek