×

(நபியே!) கூறுவீராக: ‘‘மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் 7:158 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:158) ayat 158 in Tamil

7:158 Surah Al-A‘raf ayat 158 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 158 - الأعرَاف - Page - Juz 9

﴿قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُمۡ جَمِيعًا ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِيِّ ٱلۡأُمِّيِّ ٱلَّذِي يُؤۡمِنُ بِٱللَّهِ وَكَلِمَٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ ﴾
[الأعرَاف: 158]

(நபியே!) கூறுவீராக: ‘‘மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் ஆவேன். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل ياأيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السموات, باللغة التاميلية

﴿قل ياأيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السموات﴾ [الأعرَاف: 158]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: ‘‘Manitarkale! (Ninkal enta nattavar ayinum evvakupparayinum) niccayamaka nan unkal anaivarukkum allahvinal anuppappatta tutar aven. Vanankal pumiyin atci avanukkuriyate! (Vanakkattirkuriya) iraivan avanaittavira veru oruvarumillai. Avane uyirppikkiran; maranikkumpati ceykiran. Akave, anta allahvaiyum, elutap patikka ariyata avanutaiya ittutaraiyum ninkal nampikkai kolvirkalaka! Avarum allahvaiyum, avanutaiya vacanankalaiyum nampikkai kolkirar. Akave, ninkal nerana valiyai ataiya avaraiye ninkal pinparrunkal
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: ‘‘Maṉitarkaḷē! (Nīṅkaḷ enta nāṭṭavar āyiṉum evvakuppārāyiṉum) niccayamāka nāṉ uṅkaḷ aṉaivarukkum allāhviṉāl aṉuppappaṭṭa tūtar āvēṉ. Vāṉaṅkaḷ pūmiyiṉ āṭci avaṉukkuriyatē! (Vaṇakkattiṟkuriya) iṟaivaṉ avaṉaittavira vēṟu oruvarumillai. Avaṉē uyirppikkiṟāṉ; maraṇikkumpaṭi ceykiṟāṉ. Ākavē, anta allāhvaiyum, eḻutap paṭikka aṟiyāta avaṉuṭaiya ittūtaraiyum nīṅkaḷ nampikkai koḷvīrkaḷāka! Avarum allāhvaiyum, avaṉuṭaiya vacaṉaṅkaḷaiyum nampikkai koḷkiṟār. Ākavē, nīṅkaḷ nērāṉa vaḻiyai aṭaiya avaraiyē nīṅkaḷ piṉpaṟṟuṅkaḷ
Jan Turst Foundation
(napiye!) Nir kuruviraka"manitarkale! Meyyaka nan unkal anaivarukkum allahvin tutaraka irukkiren; vanankal, pumi akiyavarrin atci avanukke uriyatu, avanaittavira (vanakkattirkuriya) nayan veruyarumillai - avane uyirppikkinran; avane maranam ataiyumpatiyum ceykinran - akave, allahvin mitum, elutappatikkatteriya napiyakiya avan tutarin mitum iman kollunkal, avarum allahvin mitum avan vacanankalin mitum iman kolkirar - avaraiye pinparrunkal; ninkal nervali peruvirkal
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟuvīrāka"maṉitarkaḷē! Meyyāka nāṉ uṅkaḷ aṉaivarukkum allāhviṉ tūtarāka irukkiṟēṉ; vāṉaṅkaḷ, pūmi ākiyavaṟṟiṉ āṭci avaṉukkē uriyatu, avaṉaittavira (vaṇakkattiṟkuriya) nāyaṉ vēṟuyārumillai - avaṉē uyirppikkiṉṟāṉ; avaṉē maraṇam aṭaiyumpaṭiyum ceykiṉṟāṉ - ākavē, allāhviṉ mītum, eḻutappaṭikkatteriyā napiyākiya avaṉ tūtariṉ mītum īmāṉ koḷḷuṅkaḷ, avarum allāhviṉ mītum avaṉ vacaṉaṅkaḷiṉ mītum īmāṉ koḷkiṟār - avaraiyē piṉpaṟṟuṅkaḷ; nīṅkaḷ nērvaḻi peṟuvīrkaḷ
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek