×

எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் 7:37 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:37) ayat 37 in Tamil

7:37 Surah Al-A‘raf ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 37 - الأعرَاف - Page - Juz 8

﴿فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓۚ أُوْلَٰٓئِكَ يَنَالُهُمۡ نَصِيبُهُم مِّنَ ٱلۡكِتَٰبِۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتۡهُمۡ رُسُلُنَا يَتَوَفَّوۡنَهُمۡ قَالُوٓاْ أَيۡنَ مَا كُنتُمۡ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِۖ قَالُواْ ضَلُّواْ عَنَّا وَشَهِدُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَنَّهُمۡ كَانُواْ كَٰفِرِينَ ﴾
[الأعرَاف: 37]

எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரை) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம் வானவர்கள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் ‘‘கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘(அவை அனைத்தும்) எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டன'' என்று கூறி, மெய்யாகவே அவர்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என்று தங்களுக்கு எதிராகவே சாட்சியம் கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم, باللغة التاميلية

﴿فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم﴾ [الأعرَاف: 37]

Abdulhameed Baqavi
evan allahvutaiya vacanankalaip poyyakki, allahvin mitu poyyaik karpanai ceytum kurukirano avanaivita aniyayakkaran yar? (Ivvulakil avarkal uyir valum varai) avarkalukku vitikkappatta (unavu, porul akiya)vai avarkalukkuk kitaittuk konteyirukkum. (Avarkalutaiya kalam mutintu) avarkalutaiya uyiraik kaipparra nam vanavarkal avarkalitam varum camayattil (avarkalai nokki) ninkal ‘‘katavulena alaittuk kontirunta allah allatavai enke?'' Enru avarkal ketparkal. Atarku avarkal, ‘‘(avai anaittum) enkalai vittu (oti) maraintuvittana'' enru kuri, meyyakave avarkal (cattiyattai) nirakarippavarkalaka iruntarkal enru tankalukku etirakave catciyam kuruvarkal
Abdulhameed Baqavi
evaṉ allāhvuṭaiya vacaṉaṅkaḷaip poyyākki, allāhviṉ mītu poyyaik kaṟpaṉai ceytum kūṟukiṟāṉō avaṉaiviṭa aniyāyakkāraṉ yār? (Ivvulakil avarkaḷ uyir vāḻum varai) avarkaḷukku vitikkappaṭṭa (uṇavu, poruḷ ākiya)vai avarkaḷukkuk kiṭaittuk koṇṭēyirukkum. (Avarkaḷuṭaiya kālam muṭintu) avarkaḷuṭaiya uyiraik kaippaṟṟa nam vāṉavarkaḷ avarkaḷiṭam varum camayattil (avarkaḷai nōkki) nīṅkaḷ ‘‘kaṭavuḷeṉa aḻaittuk koṇṭirunta allāh allātavai eṅkē?'' Eṉṟu avarkaḷ kēṭpārkaḷ. Ataṟku avarkaḷ, ‘‘(avai aṉaittum) eṅkaḷai viṭṭu (ōṭi) maṟaintuviṭṭaṉa'' eṉṟu kūṟi, meyyākavē avarkaḷ (cattiyattai) nirākarippavarkaḷāka iruntārkaḷ eṉṟu taṅkaḷukku etirākavē cāṭciyam kūṟuvārkaḷ
Jan Turst Foundation
evan allahvin mitu poykkarpanai ceytu avanutaiya vacanankalaiyum nirakarikkirano, avanaivita mika aniyayakkaran yar? Eninum attakaiyavarkalukku avarkalukku vitikkappatta (unavum, porulkalilulla) panku (ivvulakil) kitaittukkonte irukkum; nam'mutaiya (vana) tutarkal avarkalitam vantu, avar(kalutaiya uyir)kalaik kaipparrum potu (avvana tutarkal)"allahvai vittu evarkalai alaittuk kontu iruntirkalo, avarkal enke?" Enak ketparkal; (atarku)"avarkal enkalai vittuk kanamal (maraintu poy) vittarkal" enru kuri meyyakave tam nirakarippavarkalaka - iruntatakat tankalukku etirakave avarkal catci kuruvarkal
Jan Turst Foundation
evaṉ allāhviṉ mītu poykkaṟpaṉai ceytu avaṉuṭaiya vacaṉaṅkaḷaiyum nirākarikkiṟāṉō, avaṉaiviṭa mika aniyāyakkāraṉ yār? Eṉiṉum attakaiyavarkaḷukku avarkaḷukku vitikkappaṭṭa (uṇavum, poruḷkaḷiluḷḷa) paṅku (ivvulakil) kiṭaittukkoṇṭē irukkum; nam'muṭaiya (vāṉa) tūtarkaḷ avarkaḷiṭam vantu, avar(kaḷuṭaiya uyir)kaḷaik kaippaṟṟum pōtu (avvāṉa tūtarkaḷ)"allāhvai viṭṭu evarkaḷai aḻaittuk koṇṭu iruntīrkaḷō, avarkaḷ eṅkē?" Eṉak kēṭpārkaḷ; (ataṟku)"avarkaḷ eṅkaḷai viṭṭuk kāṇāmal (maṟaintu pōy) viṭṭārkaḷ" eṉṟu kūṟi meyyākavē tām nirākarippavarkaḷāka - iruntatākat taṅkaḷukku etirākavē avarkaḷ cāṭci kūṟuvārkaḷ
Jan Turst Foundation
எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) "அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" எனக் கேட்பார்கள்; (அதற்கு) "அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்" என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek