×

(அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (உங்களைப் போன்ற பாவிகளான) 7:38 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:38) ayat 38 in Tamil

7:38 Surah Al-A‘raf ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 38 - الأعرَاف - Page - Juz 8

﴿قَالَ ٱدۡخُلُواْ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِكُم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ فِي ٱلنَّارِۖ كُلَّمَا دَخَلَتۡ أُمَّةٞ لَّعَنَتۡ أُخۡتَهَاۖ حَتَّىٰٓ إِذَا ٱدَّارَكُواْ فِيهَا جَمِيعٗا قَالَتۡ أُخۡرَىٰهُمۡ لِأُولَىٰهُمۡ رَبَّنَا هَٰٓؤُلَآءِ أَضَلُّونَا فَـَٔاتِهِمۡ عَذَابٗا ضِعۡفٗا مِّنَ ٱلنَّارِۖ قَالَ لِكُلّٖ ضِعۡفٞ وَلَٰكِن لَّا تَعۡلَمُونَ ﴾
[الأعرَاف: 38]

(அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (உங்களைப் போன்ற பாவிகளான) கூட்டத்தினருடன் நீங்களும் சேர்ந்து நரகத்திற்குச் சென்று விடுங்கள்'' என்று கூறுவான். அவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் (நரகத்திற்குச்) சென்றபொழுது (முன்னர் அங்கு வந்துள்ள) தங்கள் இனத்தாரை கோபித்து சபிப்பார்கள். (இவ்வாறு) இவர்கள் அனைவரும் நரகத்தையடைந்த பின்னர், (அவர்களில்) பின் சென்றவர்கள் (தங்களுக்கு) முன் சென்றவர்களைச் சுட்டிக்காட்டி, ‘‘எங்கள் இறைவனே! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தார்கள். ஆகவே, அவர்களுக்கு (எங்களைவிட) இரு மடங்கு நரக வேதனையைக் கொடுப்பாயாக!'' என்று கூறுவார்கள். அதற்கு அவன், ‘‘உங்களில் அனைவருக்குமே இரு மடங்கு வேதனை உண்டு. எனினும் (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று கூறுவான்

❮ Previous Next ❯

ترجمة: قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في, باللغة التاميلية

﴿قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في﴾ [الأعرَاف: 38]

Abdulhameed Baqavi
(Atarku iraivan avarkalai nokki) jinkalilum, manitarkalilum unkalukku munnar cenruvitta (unkalaip ponra pavikalana) kuttattinarutan ninkalum cerntu narakattirkuc cenru vitunkal'' enru kuruvan. Avarkalil ovvoru vakuppinarum (narakattirkuc) cenrapolutu (munnar anku vantulla) tankal inattarai kopittu capipparkal. (Ivvaru) ivarkal anaivarum narakattaiyatainta pinnar, (avarkalil) pin cenravarkal (tankalukku) mun cenravarkalaic cuttikkatti, ‘‘enkal iraivane! Ivarkaltan enkalai vali ketuttarkal. Akave, avarkalukku (enkalaivita) iru matanku naraka vetanaiyaik kotuppayaka!'' Enru kuruvarkal. Atarku avan, ‘‘unkalil anaivarukkume iru matanku vetanai untu. Eninum (itan karanattai) ninkal ariyamattirkal'' enru kuruvan
Abdulhameed Baqavi
(Ataṟku iṟaivaṉ avarkaḷai nōkki) jiṉkaḷilum, maṉitarkaḷilum uṅkaḷukku muṉṉar ceṉṟuviṭṭa (uṅkaḷaip pōṉṟa pāvikaḷāṉa) kūṭṭattiṉaruṭaṉ nīṅkaḷum cērntu narakattiṟkuc ceṉṟu viṭuṅkaḷ'' eṉṟu kūṟuvāṉ. Avarkaḷil ovvoru vakuppiṉarum (narakattiṟkuc) ceṉṟapoḻutu (muṉṉar aṅku vantuḷḷa) taṅkaḷ iṉattārai kōpittu capippārkaḷ. (Ivvāṟu) ivarkaḷ aṉaivarum narakattaiyaṭainta piṉṉar, (avarkaḷil) piṉ ceṉṟavarkaḷ (taṅkaḷukku) muṉ ceṉṟavarkaḷaic cuṭṭikkāṭṭi, ‘‘eṅkaḷ iṟaivaṉē! Ivarkaḷtāṉ eṅkaḷai vaḻi keṭuttārkaḷ. Ākavē, avarkaḷukku (eṅkaḷaiviṭa) iru maṭaṅku naraka vētaṉaiyaik koṭuppāyāka!'' Eṉṟu kūṟuvārkaḷ. Ataṟku avaṉ, ‘‘uṅkaḷil aṉaivarukkumē iru maṭaṅku vētaṉai uṇṭu. Eṉiṉum (itaṉ kāraṇattai) nīṅkaḷ aṟiyamāṭṭīrkaḷ'' eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
(Allah) kuruvan; "jinkal, manitarkal kuttattarkaliliruntu unkalukku mun cenravarkalutan ninkalum (naraka) neruppil nulaiyunkal." Ovvoru kuttattarum, narakattil nulaiyumpotellam, (tankalukku mun, anku vantulla) tam inattaraic capipparkal; avarkal yavarum narakattaiyataintu vitta pinnar, pin vantavarkal mun vantavarkalaipparri, "enkal iraivane! Ivarkal tan enkalai vali ketuttarkal; atalal ivarkalukku narakattil iru matanku vetanaiyaik kotu" enru colvarkal. Avan kuruvan; "unkalil ovvoruvarukkum irattippu (vetanai) untu - anal ninkal atai ariyamattirkal
Jan Turst Foundation
(Allāh) kūṟuvāṉ; "jiṉkaḷ, maṉitarkaḷ kūṭṭattārkaḷiliruntu uṅkaḷukku muṉ ceṉṟavarkaḷuṭaṉ nīṅkaḷum (naraka) neruppil nuḻaiyuṅkaḷ." Ovvoru kūṭṭattārum, narakattil nuḻaiyumpōtellām, (taṅkaḷukku muṉ, aṅku vantuḷḷa) tam iṉattāraic capippārkaḷ; avarkaḷ yāvarum narakattaiyaṭaintu viṭṭa piṉṉar, piṉ vantavarkaḷ muṉ vantavarkaḷaippaṟṟi, "eṅkaḷ iṟaivaṉē! Ivarkaḷ tāṉ eṅkaḷai vaḻi keṭuttārkaḷ; ātalāl ivarkaḷukku narakattil iru maṭaṅku vētaṉaiyaik koṭu" eṉṟu colvārkaḷ. Avaṉ kūṟuvāṉ; "uṅkaḷil ovvoruvarukkum iraṭṭippu (vētaṉai) uṇṭu - āṉāl nīṅkaḷ atai aṟiyamāṭṭīrkaḷ
Jan Turst Foundation
(அல்லாஹ்) கூறுவான்; "ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்." ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, "எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு" என்று சொல்வார்கள். அவன் கூறுவான்; "உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு - ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek