×

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் 8:72 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:72) ayat 72 in Tamil

8:72 Surah Al-Anfal ayat 72 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 72 - الأنفَال - Page - Juz 10

﴿إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَواْ وَّنَصَرُوٓاْ أُوْلَٰٓئِكَ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَلَمۡ يُهَاجِرُواْ مَا لَكُم مِّن وَلَٰيَتِهِم مِّن شَيۡءٍ حَتَّىٰ يُهَاجِرُواْۚ وَإِنِ ٱسۡتَنصَرُوكُمۡ فِي ٱلدِّينِ فَعَلَيۡكُمُ ٱلنَّصۡرُ إِلَّا عَلَىٰ قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٞۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ﴾
[الأنفَال: 72]

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தியாகம் செய்து போர் புரிந்தார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மற்றும் பல) உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இவ்விரு வகுப்பாரும் ஒருவருக்கொருவர் பொறுப்பு வகிக்கும் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆயினும், நம்பிக்கை கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படாமல் இருக்கின்றனரோ அவர்கள் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படும் வரை நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்லர். எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும், உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு எதிராக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا, باللغة التاميلية

﴿إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا﴾ [الأنفَال: 72]

Abdulhameed Baqavi
Niccayamaka evarkal nampikkai kontu (tankal) urai vittup purappattu, allahvutaiya pataiyil tankal uyirkalaiyum porulkalaiyum tiyakam ceytu por purintarkalo avarkalum, evarkal avarkalai (tankal illankalil) aravanaittu (marrum pala) utavi purintarkalo avarkalum akiya ivviru vakupparum oruvarukkoruvar poruppu vakikkum urra nanparkalaka irukkinranar. Ayinum, nampikkai kontavarkalil evarkal innum (tankal) urai vittup purappatamal irukkinranaro avarkal (tankal) urai vittup purappatum varai ninkal avarkalutaiya evvisayattirkum poruppalikalallar. Eninum, avarkal markka visayattil unkalitam utavi tetinalo (avarkalukku) utavi ceyvatu unkal mitu katamaiyakum. Ayinum, unkalitam utanpatikkai ceytu kontirukkum oru vakuppinarukku etiraka (avarkalukku utavi ceyvatu) kutatu. Allah ninkal ceypavarrai urru nokkupavan avan
Abdulhameed Baqavi
Niccayamāka evarkaḷ nampikkai koṇṭu (taṅkaḷ) ūrai viṭṭup puṟappaṭṭu, allāhvuṭaiya pātaiyil taṅkaḷ uyirkaḷaiyum poruḷkaḷaiyum tiyākam ceytu pōr purintārkaḷō avarkaḷum, evarkaḷ avarkaḷai (taṅkaḷ illaṅkaḷil) aravaṇaittu (maṟṟum pala) utavi purintārkaḷō avarkaḷum ākiya ivviru vakuppārum oruvarukkoruvar poṟuppu vakikkum uṟṟa naṇparkaḷāka irukkiṉṟaṉar. Āyiṉum, nampikkai koṇṭavarkaḷil evarkaḷ iṉṉum (taṅkaḷ) ūrai viṭṭup puṟappaṭāmal irukkiṉṟaṉarō avarkaḷ (taṅkaḷ) ūrai viṭṭup puṟappaṭum varai nīṅkaḷ avarkaḷuṭaiya evviṣayattiṟkum poṟuppāḷikaḷallar. Eṉiṉum, avarkaḷ mārkka viṣayattil uṅkaḷiṭam utavi tēṭiṉālō (avarkaḷukku) utavi ceyvatu uṅkaḷ mītu kaṭamaiyākum. Āyiṉum, uṅkaḷiṭam uṭaṉpaṭikkai ceytu koṇṭirukkum oru vakuppiṉarukku etirāka (avarkaḷukku utavi ceyvatu) kūṭātu. Allāh nīṅkaḷ ceypavaṟṟai uṟṟu nōkkupavaṉ āvāṉ
Jan Turst Foundation
niccayamaka evar iman kontu, tam uraivittu veliyeri, tam celvankalaiyum, uyirkalaiyum allahvin pataiyil tiyakam ceytarkalo, avarkalum evar ittakaiyorukkup pukalitam kotuttu utaviyum ceytarkalo, avarkalum; oruvarukkoruvar urra nanparkal avarkal - evar iman kontu (innum tam) uraivittu veliyeravillaiyo, avarkal natuturakkum varaiyil, ninkal avarkalutaiya evvisayattilum poruppaliyalla eninum avarkal markka visayattil unkalitam utavi tetinal, utavi purivatu unkal mitu katamaiyakum - anal unkalitam utanpatikkai ceytu kontirukkum oru camukattirku virotamaka (avarkalukku utavi ceyvatu) kutatu - allah ninkal ceypavarrai nanku kavanittuk konte irukkinran
Jan Turst Foundation
niccayamāka evar īmāṉ koṇṭu, tam ūraiviṭṭu veḷiyēṟi, tam celvaṅkaḷaiyum, uyirkaḷaiyum allāhviṉ pātaiyil tiyākam ceytārkaḷō, avarkaḷum evar ittakaiyōrukkup pukaliṭam koṭuttu utaviyum ceytārkaḷō, avarkaḷum; oruvarukkoruvar uṟṟa naṇparkaḷ āvārkaḷ - evar īmāṉ koṇṭu (iṉṉum tam) ūraiviṭṭu veḷiyēṟavillaiyō, avarkaḷ nāṭutuṟakkum varaiyil, nīṅkaḷ avarkaḷuṭaiya evviṣayattilum poṟuppāḷiyalla eṉiṉum avarkaḷ mārkka viṣayattil uṅkaḷiṭam utavi tēṭiṉāl, utavi purivatu uṅkaḷ mītu kaṭamaiyākum - āṉāl uṅkaḷiṭam uṭaṉpaṭikkai ceytu koṇṭirukkum oru camūkattiṟku virōtamāka (avarkaḷukku utavi ceyvatu) kūṭātu - allāh nīṅkaḷ ceypavaṟṟai naṉku kavaṉittuk koṇṭē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும் எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் - எவர் ஈமான் கொண்டு (இன்னும் தம்) ஊரைவிட்டு வெளியேறவில்லையோ, அவர்கள் நாடுதுறக்கும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளியல்ல எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் - ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek