×

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து 9:36 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:36) ayat 36 in Tamil

9:36 Surah At-Taubah ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 36 - التوبَة - Page - Juz 10

﴿إِنَّ عِدَّةَ ٱلشُّهُورِ عِندَ ٱللَّهِ ٱثۡنَا عَشَرَ شَهۡرٗا فِي كِتَٰبِ ٱللَّهِ يَوۡمَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ مِنۡهَآ أَرۡبَعَةٌ حُرُمٞۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُۚ فَلَا تَظۡلِمُواْ فِيهِنَّ أَنفُسَكُمۡۚ وَقَٰتِلُواْ ٱلۡمُشۡرِكِينَ كَآفَّةٗ كَمَا يُقَٰتِلُونَكُمۡ كَآفَّةٗۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ ﴾
[التوبَة: 36]

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم, باللغة التاميلية

﴿إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم﴾ [التوبَة: 36]

Abdulhameed Baqavi
niccayamaka allahvitattil matankalin ennikkai (or antukku) pannirantutan. (Ivvare) vanankalaiyum, pumiyaiyum pataitta naliliruntu allahvin puttakattil pativu ceyyappattullatu. Avarril nanku (matankal) cirappurravai. Itutan nerana markkamakum. Akave, ivarril ninkal (por purintu) unkalukku ninkale tinkilaittuk kolla ventam. Eninum, inaivaittu vanankupavarkalil evarenum (am'matankalil) unkalutan por purintal avvare ninkalum avarkal anaivarutanum (am'matankalilum) por puriyunkal. Niccayamaka, allah iraiyaccamutaiyavarkalutan irukkiran enpatai urutiyaka arintu kollunkal
Abdulhameed Baqavi
niccayamāka allāhviṭattil mātaṅkaḷiṉ eṇṇikkai (ōr āṇṭukku) paṉṉiraṇṭutāṉ. (Ivvāṟē) vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum paṭaitta nāḷiliruntu allāhviṉ puttakattil pativu ceyyappaṭṭuḷḷatu. Avaṟṟil nāṉku (mātaṅkaḷ) ciṟappuṟṟavai. Itutāṉ nērāṉa mārkkamākum. Ākavē, ivaṟṟil nīṅkaḷ (pōr purintu) uṅkaḷukku nīṅkaḷē tīṅkiḻaittuk koḷḷa vēṇṭām. Eṉiṉum, iṇaivaittu vaṇaṅkupavarkaḷil evarēṉum (am'mātaṅkaḷil) uṅkaḷuṭaṉ pōr purintāl avvāṟē nīṅkaḷum avarkaḷ aṉaivaruṭaṉum (am'mātaṅkaḷilum) pōr puriyuṅkaḷ. Niccayamāka, allāh iṟaiyaccamuṭaiyavarkaḷuṭaṉ irukkiṟāṉ eṉpatai uṟutiyāka aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
Niccayamaka allahvitattil allahvutaiya (pativup) puttakattil vanankalaiyum pumiyaiyum pataitta nalilirunte matankalin ennikkai pannirantu akum - avarril nanku (matankal) punitamanavai itu tan nerana markkamakum - akave am'matankalil (por ceytu) unkalukku ninkale tinkilaittuk kollatirkal; inai vaippavarkal unkal anaivarutanum por purivatu pol puriyunkal. Niccayamaka allah payapaktiyutaiyorutaneye irukkinran enpatai arintu kollunkal
Jan Turst Foundation
Niccayamāka allāhviṭattil allāhvuṭaiya (pativup) puttakattil vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaitta nāḷiliruntē mātaṅkaḷiṉ eṇṇikkai paṉṉiraṇṭu ākum - avaṟṟil nāṉku (mātaṅkaḷ) puṉitamāṉavai itu tāṉ nērāṉa mārkkamākum - ākavē am'mātaṅkaḷil (pōr ceytu) uṅkaḷukku nīṅkaḷē tīṅkiḻaittuk koḷḷātīrkaḷ; iṇai vaippavarkaḷ uṅkaḷ aṉaivaruṭaṉum pōr purivatu pōl puriyuṅkaḷ. Niccayamāka allāh payapaktiyuṭaiyōruṭaṉēyē irukkiṉṟāṉ eṉpatai aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek