×

(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே இனத்தவராகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) 2:213 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:213) ayat 213 in Tamil

2:213 Surah Al-Baqarah ayat 213 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 213 - البَقَرَة - Page - Juz 2

﴿كَانَ ٱلنَّاسُ أُمَّةٗ وَٰحِدَةٗ فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّـۧنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِيَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ فِيمَا ٱخۡتَلَفُواْ فِيهِۚ وَمَا ٱخۡتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ لِمَا ٱخۡتَلَفُواْ فِيهِ مِنَ ٱلۡحَقِّ بِإِذۡنِهِۦۗ وَٱللَّهُ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٍ ﴾
[البَقَرَة: 213]

(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே இனத்தவராகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) நற்செய்தி கூறும்படியும், (தீமை செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பிவைத்தான். மேலும், அம்மனிதர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து வைப்பதற்காக (சத்திய) வேதத்தையும் அருளினான். இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்) வந்ததன் பின்னர் அதைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே (அந்த சத்திய வேதத்திற்கு) மாறு (செய்ய முற்)பட்டனர். ஆயினும், அவர்கள் மாறுபட்டு(ப் புறக்கணித்து)விட்ட அந்த சத்தியத்தின் பக்கம் செல்லும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தன் அருளைக்கொண்டு நேர்வழி காட்டினான். இன்னும் (இவ்வான்ற) தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்

❮ Previous Next ❯

ترجمة: كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنـزل معهم الكتاب, باللغة التاميلية

﴿كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنـزل معهم الكتاب﴾ [البَقَرَة: 213]

Abdulhameed Baqavi
(arampattil) manitarkal (anaivarum) ore inattavarakave iruntanar. (Avarkal nerana valiyil celvatarkaka nanmai ceypavarkalukku) narceyti kurumpatiyum, (timai ceypavarkalukku) accamutti eccarikkai ceyyumpatiyum allah napimarkalai anuppivaittan. Melum, am'manitarkalukkul erpatum karuttu verrumaikalait tirttu vaippatarkaka (cattiya) vetattaiyum arulinan. Ivvaru telivana attatcikal (ulla vetam) vantatan pinnar ataip perrukkonta avarkal tankalukkul erpatta poramaiyin karanamakave (anta cattiya vetattirku) maru (ceyya mur)pattanar. Ayinum, avarkal marupattu(p purakkanittu)vitta anta cattiyattin pakkam cellumpati nampikkaiyalarkalukku allah tan arulaikkontu nervali kattinan. Innum (ivvanra) tan virumpiyavarkalai allah nerana valiyil celuttukiran
Abdulhameed Baqavi
(ārampattil) maṉitarkaḷ (aṉaivarum) orē iṉattavarākavē iruntaṉar. (Avarkaḷ nērāṉa vaḻiyil celvataṟkāka naṉmai ceypavarkaḷukku) naṟceyti kūṟumpaṭiyum, (tīmai ceypavarkaḷukku) accamūṭṭi eccarikkai ceyyumpaṭiyum allāh napimārkaḷai aṉuppivaittāṉ. Mēlum, am'maṉitarkaḷukkuḷ ēṟpaṭum karuttu vēṟṟumaikaḷait tīrttu vaippataṟkāka (cattiya) vētattaiyum aruḷiṉāṉ. Ivvāṟu teḷivāṉa attāṭcikaḷ (uḷḷa vētam) vantataṉ piṉṉar ataip peṟṟukkoṇṭa avarkaḷ taṅkaḷukkuḷ ēṟpaṭṭa poṟāmaiyiṉ kāraṇamākavē (anta cattiya vētattiṟku) māṟu (ceyya muṟ)paṭṭaṉar. Āyiṉum, avarkaḷ māṟupaṭṭu(p puṟakkaṇittu)viṭṭa anta cattiyattiṉ pakkam cellumpaṭi nampikkaiyāḷarkaḷukku allāh taṉ aruḷaikkoṇṭu nērvaḻi kāṭṭiṉāṉ. Iṉṉum (ivvāṉṟa) tāṉ virumpiyavarkaḷai allāh nērāṉa vaḻiyil celuttukiṟāṉ
Jan Turst Foundation
(arampattil) manitarkal ore kuttattinarakave iruntanar;. Allah (nallorukku) nanmarayan kuruvorakavum, (tiyorukku) accamutti eccarikkai ceyvorakavum napimarkalai anuppi vaittan;. Attutan manitarkalitaiye erpatum karuttu verupatukalait tirttu vaippatarkaka avarkalutan unmaiyutaiya vetattaiyum irakki vaittan;. Eninum avvetam kotukkap perravarkal, telivana atarankal vanta pinnarum, tam'mitaiye untana poramai karanamaka marupattarkal. Ayinum allah avarkal marupattup purakkanittuvitta unmaiyin pakkam cellumaru iman kontorukkut tan arulinal ner vali kattinan;. Avvare, allah tan natiyorai nervaliyil celuttukiran
Jan Turst Foundation
(ārampattil) maṉitarkaḷ orē kūṭṭattiṉarākavē iruntaṉar;. Allāh (nallōrukku) naṉmārāyaṅ kūṟuvōrākavum, (tīyōrukku) accamūṭṭi eccarikkai ceyvōrākavum napimārkaḷai aṉuppi vaittāṉ;. Attuṭaṉ maṉitarkaḷiṭaiyē ēṟpaṭum karuttu vēṟupāṭukaḷait tīrttu vaippataṟkāka avarkaḷuṭaṉ uṇmaiyuṭaiya vētattaiyum iṟakki vaittāṉ;. Eṉiṉum avvētam koṭukkap peṟṟavarkaḷ, teḷivāṉa ātāraṅkaḷ vanta piṉṉarum, tam'miṭaiyē uṇṭāṉa poṟāmai kāraṇamāka māṟupaṭṭārkaḷ. Āyiṉum allāh avarkaḷ māṟupaṭṭup puṟakkaṇittuviṭṭa uṇmaiyiṉ pakkam cellumāṟu īmāṉ koṇṭōrukkut taṉ aruḷiṉāl nēr vaḻi kāṭṭiṉāṉ;. Avvāṟē, allāh tāṉ nāṭiyōrai nērvaḻiyil celuttukiṟāṉ
Jan Turst Foundation
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek