×

‘தலாக்' கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் வரும் வரை எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி 2:228 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:228) ayat 228 in Tamil

2:228 Surah Al-Baqarah ayat 228 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 228 - البَقَرَة - Page - Juz 2

﴿وَٱلۡمُطَلَّقَٰتُ يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٖۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكۡتُمۡنَ مَا خَلَقَ ٱللَّهُ فِيٓ أَرۡحَامِهِنَّ إِن كُنَّ يُؤۡمِنَّ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنۡ أَرَادُوٓاْ إِصۡلَٰحٗاۚ وَلَهُنَّ مِثۡلُ ٱلَّذِي عَلَيۡهِنَّ بِٱلۡمَعۡرُوفِۚ وَلِلرِّجَالِ عَلَيۡهِنَّ دَرَجَةٞۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ ﴾
[البَقَرَة: 228]

‘தலாக்' கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் வரும் வரை எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப்பையில் (சிசுவை) படைத்திருந்தால் அதை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. தவிர (‘ரஜயி'யான தலாக்குக் கூறப்பட்ட) அப்பெண்களின் கணவர்கள் (சேர்ந்து வாழக் கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள (அக்கணவர்கள்) மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர் பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவு உடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق, باللغة التاميلية

﴿والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق﴾ [البَقَرَة: 228]

Abdulhameed Baqavi
‘Talak' kurappatta penkal, tankalukku munru matavitaykal varum varai etirparttirukkavum. Avarkal allahvaiyum iruti nalaiyum nampikkai kontavarkalaka iruntal allah avarkalutaiya karppappaiyil (cicuvai) pataittiruntal atai maraippatu avarkalukku akumanatu alla. Tavira (‘rajayi'yana talakkuk kurappatta) appenkalin kanavarkal (cerntu valak karuti, tavanaikkul) camatanattai virumpinal avarkalai (manaivikalaka)t tiruppikkolla (akkanavarkal) mikavum urimaiyutaiyavarkal. (Akave, maruvivakaminriye manaiviyakkik kollalam. Ankalukku) muraippati penkalin mitulla urimaikal ponrate (ankal mitu) penkalukkum untu. Ayinum, ankalukkup penkal mitu (or) uyar patavi untu. Allah mikaittavan, nunnarivu utaiyavan avan
Abdulhameed Baqavi
‘Talāk' kūṟappaṭṭa peṇkaḷ, taṅkaḷukku mūṉṟu mātaviṭāykaḷ varum varai etirpārttirukkavum. Avarkaḷ allāhvaiyum iṟuti nāḷaiyum nampikkai koṇṭavarkaḷāka iruntāl allāh avarkaḷuṭaiya karppappaiyil (cicuvai) paṭaittiruntāl atai maṟaippatu avarkaḷukku ākumāṉatu alla. Tavira (‘rajayi'yāṉa talākkuk kūṟappaṭṭa) appeṇkaḷiṉ kaṇavarkaḷ (cērntu vāḻak karuti, tavaṇaikkuḷ) camātāṉattai virumpiṉāl avarkaḷai (maṉaivikaḷāka)t tiruppikkoḷḷa (akkaṇavarkaḷ) mikavum urimaiyuṭaiyavarkaḷ. (Ākavē, maṟuvivākamiṉṟiyē maṉaiviyākkik koḷḷalām. Āṇkaḷukku) muṟaippaṭi peṇkaḷiṉ mītuḷḷa urimaikaḷ pōṉṟatē (āṇkaḷ mītu) peṇkaḷukkum uṇṭu. Āyiṉum, āṇkaḷukkup peṇkaḷ mītu (ōr) uyar patavi uṇṭu. Allāh mikaittavaṉ, nuṇṇaṟivu uṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
Talak kurappatta penkal, tankalukku munru matavitaykal akumvarai poruttu irukka ventum; allahvaiyum, iruti nalaiyum avarkal nampuvarkalayin, tam karppak kolaraikalil, allah pataittiruppatai maraittal kutatu. Anal penkalin kanavarkal (avarkalait tirumpa alaittuk kolvatan mulam) inakkattai natinal, (attavanaikkul) avarkalai (manaiviyaraka)t tiruppikkolla avarkalukku atika urimaiyuntu. Kanavarkalukkup penkalitam irukkum urimaikal ponru, muraippati avarkalmitu penkalukkum urimaiyuntu; ayinum ankalukku avarkalmitu orupati uyarvuntu. Melum allah vallamaiyum; nanamum mikkonaka irukkinran
Jan Turst Foundation
Talāk kūṟappaṭṭa peṇkaḷ, taṅkaḷukku mūṉṟu mātaviṭāykaḷ ākumvarai poṟuttu irukka vēṇṭum; allāhvaiyum, iṟuti nāḷaiyum avarkaḷ nampuvārkaḷāyiṉ, tam karppak kōḷaṟaikaḷil, allāh paṭaittiruppatai maṟaittal kūṭātu. Āṉāl peṇkaḷiṉ kaṇavarkaḷ (avarkaḷait tirumpa aḻaittuk koḷvataṉ mūlam) iṇakkattai nāṭiṉāl, (attavaṇaikkuḷ) avarkaḷai (maṉaiviyarāka)t tiruppikkoḷḷa avarkaḷukku atika urimaiyuṇṭu. Kaṇavarkaḷukkup peṇkaḷiṭam irukkum urimaikaḷ pōṉṟu, muṟaippaṭi avarkaḷmītu peṇkaḷukkum urimaiyuṇṭu; āyiṉum āṇkaḷukku avarkaḷmītu orupaṭi uyarvuṇṭu. Mēlum allāh vallamaiyum; ñāṉamum mikkōṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek