×

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் 2:264 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:264) ayat 264 in Tamil

2:264 Surah Al-Baqarah ayat 264 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 264 - البَقَرَة - Page - Juz 3

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُبۡطِلُواْ صَدَقَٰتِكُم بِٱلۡمَنِّ وَٱلۡأَذَىٰ كَٱلَّذِي يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفۡوَانٍ عَلَيۡهِ تُرَابٞ فَأَصَابَهُۥ وَابِلٞ فَتَرَكَهُۥ صَلۡدٗاۖ لَّا يَقۡدِرُونَ عَلَىٰ شَيۡءٖ مِّمَّا كَسَبُواْۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ ﴾
[البَقَرَة: 264]

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கிறது. அதன் மீது மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து ஒரு பலனையும் (மறுமையில்) அடையமாட்டார்கள். மேலும், அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் கூட்டத்தை (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء﴾ [البَقَرَة: 264]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Allahvaiyum marumai nalaiyum nampamal makkal kanpatarkaka tan porulai celavu cey(tu vinakku)pavanaip pola (ninkal manamuvantu valankum) unkal tarmankalai(p perravanukku munnum pinnum) colli kanpippatalum tunpuruttuvatalum (atan palanai) palakki vitatirkal. Ivanin utaranam, oru valukkaip paraiyai ottirukkiratu. Atan mitu manpatintatu. Eninum, oru perum malai polintu, atai(k kaluvi) verum paraiyakki vittatu. (Ivvare avan ceyta tanattai avanutaiya perumai alittuvitum.) Akave, avarkal (tanam) ceytatil iruntu oru palanaiyum (marumaiyil) ataiyamattarkal. Melum, allah (tannai) nirakarikkum kuttattai (avarkalin tiyac ceyalkalin karanamaka) nerana valiyil celuttamattan
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Allāhvaiyum maṟumai nāḷaiyum nampāmal makkaḷ kāṇpataṟkāka taṉ poruḷai celavu cey(tu vīṇākku)pavaṉaip pōla (nīṅkaḷ maṉamuvantu vaḻaṅkum) uṅkaḷ tarmaṅkaḷai(p peṟṟavaṉukku muṉṉum piṉṉum) colli kāṇpippatālum tuṉpuṟuttuvatālum (ataṉ palaṉai) pāḻākki viṭātīrkaḷ. Ivaṉiṉ utāraṇam, oru vaḻukkaip pāṟaiyai ottirukkiṟatu. Ataṉ mītu maṇpaṭintatu. Eṉiṉum, oru perum maḻai poḻintu, atai(k kaḻuvi) veṟum pāṟaiyākki viṭṭatu. (Ivvāṟē avaṉ ceyta tāṉattai avaṉuṭaiya perumai aḻittuviṭum.) Ākavē, avarkaḷ (tāṉam) ceytatil iruntu oru palaṉaiyum (maṟumaiyil) aṭaiyamāṭṭārkaḷ. Mēlum, allāh (taṉṉai) nirākarikkum kūṭṭattai (avarkaḷiṉ tīyac ceyalkaḷiṉ kāraṇamāka) nērāṉa vaḻiyil celuttamāṭṭāṉ
Jan Turst Foundation
Nampikkai kontavarkale! Allahvin mitum, iruti nalin mitum nampikkai kollamal, manitarkalukkuk kattuvatarkakave tan porulaic celavalippavanaippol, kotuttataic collik kanpittum, novinaikal ceytum unkal satakkavai (tana tarmankalaip) palakki vitatirkal;. A(ppatic ceypa)vanukku uvamaiyavatu, oru valukkup paraiyakum;. Atan mel ciritu man patintullatu, atan mitu perumalavu peytu (atilirunta ciritu mannaiyum kaluvit) tutaittu vittatu. Ivvare avarkal ceyta -(tanat)tiliruntu yatoru palanaiyum ataiya mattarkal; innum, allah kahpirana makkalai ner valiyil celuttuvatillai
Jan Turst Foundation
Nampikkai koṇṭavarkaḷē! Allāhviṉ mītum, iṟuti nāḷiṉ mītum nampikkai koḷḷāmal, maṉitarkaḷukkuk kāṭṭuvataṟkākavē taṉ poruḷaic celavaḻippavaṉaippōl, koṭuttataic collik kāṇpittum, nōviṉaikaḷ ceytum uṅkaḷ satakkāvai (tāṉa tarmaṅkaḷaip) pāḻākki viṭātīrkaḷ;. A(ppaṭic ceypa)vaṉukku uvamaiyāvatu, oru vaḻukkup pāṟaiyākum;. Ataṉ mēl ciṟitu maṇ paṭintuḷḷatu, ataṉ mītu perumaḷavu peytu (atilirunta ciṟitu maṇṇaiyum kaḻuvit) tuṭaittu viṭṭatu. Ivvāṟē avarkaḷ ceyta -(tāṉat)tiliruntu yātoru palaṉaiyum aṭaiya māṭṭārkaḷ; iṉṉum, allāh kāḥpirāṉa makkaḷai nēr vaḻiyil celuttuvatillai
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;. அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும்;. அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமளவு பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek