×

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் 4:1 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:1) ayat 1 in Tamil

4:1 Surah An-Nisa’ ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 1 - النِّسَاء - Page - Juz 4

﴿يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ وَخَلَقَ مِنۡهَا زَوۡجَهَا وَبَثَّ مِنۡهُمَا رِجَالٗا كَثِيرٗا وَنِسَآءٗۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِي تَسَآءَلُونَ بِهِۦ وَٱلۡأَرۡحَامَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَيۡكُمۡ رَقِيبٗا ﴾
[النِّسَاء: 1]

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها, باللغة التاميلية

﴿ياأيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها﴾ [النِّسَاء: 1]

Abdulhameed Baqavi
Manitarkale! Ninkal unkal iraivanukkup payantu (natantu)kollunkal. Avan unkal anaivaraiyum ore or anmavil iruntu urpatti ceytan. (Arampattil anta oruvarai pataittu) avariliruntu avarutaiya manaiviyaip pataittan. Pinpu avviruvariliruntu ankal, penkal ena palarai (ippumiyil) parappinan. Akave, (attakaiya) allahvukku ninkal payantu (natantu)kollunkal. Avanaikkonte ninkal (unkalukkul oruvarukkoruvar ventiyavarraik) kettukkolkirirkal. Innum (allahvukkup payantu) irattak kalappu uravinarkalitamum (anpaka natantu kollunkal). Niccayamaka allah unkalaik kavanittavanakave irukkiran
Abdulhameed Baqavi
Maṉitarkaḷē! Nīṅkaḷ uṅkaḷ iṟaivaṉukkup payantu (naṭantu)koḷḷuṅkaḷ. Avaṉ uṅkaḷ aṉaivaraiyum orē ōr āṉmāvil iruntu uṟpatti ceytāṉ. (Ārampattil anta oruvarai paṭaittu) avariliruntu avaruṭaiya maṉaiviyaip paṭaittāṉ. Piṉpu avviruvariliruntu āṇkaḷ, peṇkaḷ eṉa palarai (ippūmiyil) parappiṉāṉ. Ākavē, (attakaiya) allāhvukku nīṅkaḷ payantu (naṭantu)koḷḷuṅkaḷ. Avaṉaikkoṇṭē nīṅkaḷ (uṅkaḷukkuḷ oruvarukkoruvar vēṇṭiyavaṟṟaik) kēṭṭukkoḷkiṟīrkaḷ. Iṉṉum (allāhvukkup payantu) irattak kalappu uṟaviṉarkaḷiṭamum (aṉpāka naṭantu koḷḷuṅkaḷ). Niccayamāka allāh uṅkaḷaik kavaṉittavaṉākavē irukkiṟāṉ
Jan Turst Foundation
manitarkale! Unkal iraivanukkup payantu natantu kollunkal, avan unkal yavaraiyum ore atmaviliruntu pataittan, avarilirunte avar manaiviyaiyum pataittan;. Pinnar ivviruvariliruntu, aneka ankalaiyum penkalaiyum (velippatutti ulakil) paravac ceytan;. Akave, allahvukke payantu kollunkal;. Avanaikkonte ninkal oruvarukkoruvar (tamakkuriya urimaikalaik) kettuk kolkirirkal;. Melum (unkal) irattak kalapputaiya uravinarkalaiyum (atariyunkal). - Niccayamaka allah unkal mitu kankanippavanakave irukkinran
Jan Turst Foundation
maṉitarkaḷē! Uṅkaḷ iṟaivaṉukkup payantu naṭantu koḷḷuṅkaḷ, avaṉ uṅkaḷ yāvaraiyum orē ātmāviliruntu paṭaittāṉ, avariliruntē avar maṉaiviyaiyum paṭaittāṉ;. Piṉṉar ivviruvariliruntu, anēka āṇkaḷaiyum peṇkaḷaiyum (veḷippaṭutti ulakil) paravac ceytāṉ;. Ākavē, allāhvukkē payantu koḷḷuṅkaḷ;. Avaṉaikkoṇṭē nīṅkaḷ oruvarukkoruvar (tamakkuriya urimaikaḷaik) kēṭṭuk koḷkiṟīrkaḷ;. Mēlum (uṅkaḷ) irattak kalappuṭaiya uṟaviṉarkaḷaiyum (ātariyuṅkaḷ). - Niccayamāka allāh uṅkaḷ mītu kaṇkāṇippavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek