×

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (போர்முனையில் எதிர்படுபவர்கள் நம்பிக்கையாளர்களா? நிராகரிப்பவர்களா? என்பதைத்) தெளிவாக 4:94 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:94) ayat 94 in Tamil

4:94 Surah An-Nisa’ ayat 94 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 94 - النِّسَاء - Page - Juz 5

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا ضَرَبۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَتَبَيَّنُواْ وَلَا تَقُولُواْ لِمَنۡ أَلۡقَىٰٓ إِلَيۡكُمُ ٱلسَّلَٰمَ لَسۡتَ مُؤۡمِنٗا تَبۡتَغُونَ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ مَغَانِمُ كَثِيرَةٞۚ كَذَٰلِكَ كُنتُم مِّن قَبۡلُ فَمَنَّ ٱللَّهُ عَلَيۡكُمۡ فَتَبَيَّنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا ﴾
[النِّسَاء: 94]

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (போர்முனையில் எதிர்படுபவர்கள் நம்பிக்கையாளர்களா? நிராகரிப்பவர்களா? என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில் எவரேனும் தம்மை நம்பிக்கையாளர் என்று உங்களுக்கு அறிவிப்பதற்காக) உங்களுக்கு ஸலாம் கூறினால் (அவர்களிடமிருந்து) இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் அடையக்கருதி ‘‘நீ நம்பிக்கையாளரல்ல'' என்று அவரைக் கூறி (வெட்டி) விடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. (அவற்றை நீங்கள் அடையலாம்.) இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே (பயந்து பயந்து இஸ்லாமை வெளியிட்டுக் கொண்டு) இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். (அதன் பின்னரே நீங்கள் உண்மை நம்பிக்கையாளராக ஆனீர்கள்.) ஆகவே, (போர்புரிவதற்கு முன்னதாகவே உங்கள் முன் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்களா? இல்லையா? என்பதைத் தீர விசாரித்துத்) தெரிந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن﴾ [النِّسَاء: 94]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Allahvutaiya pataiyil (porukkaka) ninkal cenral (pormunaiyil etirpatupavarkal nampikkaiyalarkala? Nirakarippavarkala? Enpatait) telivaka arintu kollunkal. (Avarkalil evarenum tam'mai nampikkaiyalar enru unkalukku arivippatarkaka) unkalukku salam kurinal (avarkalitamiruntu) ivvulaka valkkaikkuriya (arpap) porulai ninkal ataiyakkaruti ‘‘ni nampikkaiyalaralla'' enru avaraik kuri (vetti) vitatirkal. Allahvitattil eralamana porulkal irukkinrana. (Avarrai ninkal ataiyalam.) Itarku munnar ninkalum ivvare (payantu payantu islamai veliyittuk kontu) iruntirkal. Allah unkal mitu arulpurintan. (Atan pinnare ninkal unmai nampikkaiyalaraka anirkal.) Akave, (porpurivatarku munnatakave unkal mun iruppavarkal nampikkaiyalarkala? Illaiya? Enpatait tira vicarittut) terintukollunkal. Niccayamaka allah ninkal ceypavarrai nankarintavanaka irukkiran
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Allāhvuṭaiya pātaiyil (pōrukkāka) nīṅkaḷ ceṉṟāl (pōrmuṉaiyil etirpaṭupavarkaḷ nampikkaiyāḷarkaḷā? Nirākarippavarkaḷā? Eṉpatait) teḷivāka aṟintu koḷḷuṅkaḷ. (Avarkaḷil evarēṉum tam'mai nampikkaiyāḷar eṉṟu uṅkaḷukku aṟivippataṟkāka) uṅkaḷukku salām kūṟiṉāl (avarkaḷiṭamiruntu) ivvulaka vāḻkkaikkuriya (aṟpap) poruḷai nīṅkaḷ aṭaiyakkaruti ‘‘nī nampikkaiyāḷaralla'' eṉṟu avaraik kūṟi (veṭṭi) viṭātīrkaḷ. Allāhviṭattil ērāḷamāṉa poruḷkaḷ irukkiṉṟaṉa. (Avaṟṟai nīṅkaḷ aṭaiyalām.) Itaṟku muṉṉar nīṅkaḷum ivvāṟē (payantu payantu islāmai veḷiyiṭṭuk koṇṭu) iruntīrkaḷ. Allāh uṅkaḷ mītu aruḷpurintāṉ. (Ataṉ piṉṉarē nīṅkaḷ uṇmai nampikkaiyāḷarāka āṉīrkaḷ.) Ākavē, (pōrpurivataṟku muṉṉatākavē uṅkaḷ muṉ iruppavarkaḷ nampikkaiyāḷarkaḷā? Illaiyā? Eṉpatait tīra vicārittut) terintukoḷḷuṅkaḷ. Niccayamāka allāh nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟintavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
Muhminkale! Allahvutaiya pataiyil (porukku) ninkal cenral, (por munaiyil unkalai etirttuc cantai ceyvor muhminkala allatu marravarkala enpatait) telivaka arintu kollunkal. (Avarkalil) evarenum (tam muhmin enpatai arivikkum poruttu) unkalukku"salam" connal, ivvulaka valkkaiyin arpamana aliyak kutiya porutkalai ataiyum poruttu"ni muhminalla" enru kuri (avaraik konru) vitatirkal;. Allahvitam eralamana porutkal irukkinrana. Itarku munnar ninkalum (payantu payantu) ivvare iruntirkal - allah unkal mitu arul purintan; enave (mele kuriyavaru por munaiyil) ninkal telivu patuttik kollunkal;. Niccayamaka allah ninakal ceyvataiyellam nanku arintavanakave irukkinran
Jan Turst Foundation
Muḥmiṉkaḷē! Allāhvuṭaiya pātaiyil (pōrukku) nīṅkaḷ ceṉṟāl, (pōr muṉaiyil uṅkaḷai etirttuc caṇṭai ceyvōr muḥmiṉkaḷā allatu maṟṟavarkaḷā eṉpatait) teḷivāka aṟintu koḷḷuṅkaḷ. (Avarkaḷil) evarēṉum (tām muḥmiṉ eṉpatai aṟivikkum poruṭṭu) uṅkaḷukku"salām" coṉṉāl, ivvulaka vāḻkkaiyiṉ aṟpamāṉa aḻiyak kūṭiya poruṭkaḷai aṭaiyum poruṭṭu"nī muḥmiṉalla" eṉṟu kūṟi (avaraik koṉṟu) viṭātīrkaḷ;. Allāhviṭam ērāḷamāṉa poruṭkaḷ irukkiṉṟaṉa. Itaṟku muṉṉar nīṅkaḷum (payantu payantu) ivvāṟē iruntīrkaḷ - allāh uṅkaḷ mītu aruḷ purintāṉ; eṉavē (mēlē kūṟiyāvāṟu pōr muṉaiyil) nīṅkaḷ teḷivu paṭuttik koḷḷuṅkaḷ;. Niccayamāka allāh nīṅakaḷ ceyvataiyellām naṉku aṟintavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு "ஸலாம்" சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு "நீ முஃமினல்ல" என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்;. அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன. இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek