×

நம்பிக்கையாளர்களே! (நபியிடம் அவசியமின்றி) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். (பல விஷயங்கள்) 5:101 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:101) ayat 101 in Tamil

5:101 Surah Al-Ma’idah ayat 101 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 101 - المَائدة - Page - Juz 7

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَسۡـَٔلُواْ عَنۡ أَشۡيَآءَ إِن تُبۡدَ لَكُمۡ تَسُؤۡكُمۡ وَإِن تَسۡـَٔلُواْ عَنۡهَا حِينَ يُنَزَّلُ ٱلۡقُرۡءَانُ تُبۡدَ لَكُمۡ عَفَا ٱللَّهُ عَنۡهَاۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٞ ﴾
[المَائدة: 101]

நம்பிக்கையாளர்களே! (நபியிடம் அவசியமின்றி) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். (பல விஷயங்கள்) உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் (அவை) உங்களுக்கு வருத்தம் தரக்கூடும். அதிலும் இந்தக் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில், அத்தகைய விஷயங்களைப் பற்றி நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் அவை உங்களுக்கு தெளிவாக்கப்பட்டு (கடமையாகி)விடும். (அதனால் நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விடலாம். எனினும், இதுசமயம்) அதைப் பற்றி அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், அதிகம் சகித்துக்கொள்பவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن﴾ [المَائدة: 101]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! (Napiyitam avaciyaminri) ovvoru visayattaip parriyum (turuvit turuvik) kettuk kontirukkatirkal. (Pala visayankal) unkalukku arivikkappattal (avai) unkalukku varuttam tarakkutum. Atilum intak kur'an irakkappatum camayattil, attakaiya visayankalaip parri ninkal kettukkontiruntal avai unkalukku telivakkappattu (katamaiyaki)vitum. (Atanal ninkal ciramattirkullaki vitalam. Eninum, itucamayam) ataip parri allah unkalai mannittu vittan. Enenral, allah mikavum mannippavan, atikam cakittukkolpavan avan
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! (Napiyiṭam avaciyamiṉṟi) ovvoru viṣayattaip paṟṟiyum (turuvit turuvik) kēṭṭuk koṇṭirukkātīrkaḷ. (Pala viṣayaṅkaḷ) uṅkaḷukku aṟivikkappaṭṭāl (avai) uṅkaḷukku varuttam tarakkūṭum. Atilum intak kur'āṉ iṟakkappaṭum camayattil, attakaiya viṣayaṅkaḷaip paṟṟi nīṅkaḷ kēṭṭukkoṇṭiruntāl avai uṅkaḷukku teḷivākkappaṭṭu (kaṭamaiyāki)viṭum. (Ataṉāl nīṅkaḷ ciramattiṟkuḷḷāki viṭalām. Eṉiṉum, itucamayam) ataip paṟṟi allāh uṅkaḷai maṉṉittu viṭṭāṉ. Ēṉeṉṟāl, allāh mikavum maṉṉippavaṉ, atikam cakittukkoḷpavaṉ āvāṉ
Jan Turst Foundation
iman kontavarkale! Cila visayankalaipparri (avaciyamillamal) kettuk kontiratirkal. (Avai) unkalukku velippatuttappatumanal unkalukku (atu) tinkaka irukkum. Melum kur'an irakkappatum camayattil avai parri ninkal ketpirkalanal avai unkalukkut telivakkappatum; (avaciyamillamal ninkal vicarittatai) allah mannittu vittan. Allah mikka mannipponum, mikka porumai utaiyonumavan
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! Cila viṣayaṅkaḷaippaṟṟi (avaciyamillāmal) kēṭṭuk koṇṭirātīrkaḷ. (Avai) uṅkaḷukku veḷippaṭuttappaṭumāṉāl uṅkaḷukku (atu) tīṅkāka irukkum. Mēlum kur'āṉ iṟakkappaṭum camayattil avai paṟṟi nīṅkaḷ kēṭpīrkaḷāṉāl avai uṅkaḷukkut teḷivākkappaṭum; (avaciyamillāmal nīṅkaḷ vicārittatai) allāh maṉṉittu viṭṭāṉ. Allāh mikka maṉṉippōṉum, mikka poṟumai uṭaiyōṉumāvāṉ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப்பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும். மேலும் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும்; (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek