×

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாசனம் கூற விரும்பினால்) அவர் மரண 5:106 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:106) ayat 106 in Tamil

5:106 Surah Al-Ma’idah ayat 106 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 106 - المَائدة - Page - Juz 7

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ شَهَٰدَةُ بَيۡنِكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ حِينَ ٱلۡوَصِيَّةِ ٱثۡنَانِ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ أَوۡ ءَاخَرَانِ مِنۡ غَيۡرِكُمۡ إِنۡ أَنتُمۡ ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَأَصَٰبَتۡكُم مُّصِيبَةُ ٱلۡمَوۡتِۚ تَحۡبِسُونَهُمَا مِنۢ بَعۡدِ ٱلصَّلَوٰةِ فَيُقۡسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرۡتَبۡتُمۡ لَا نَشۡتَرِي بِهِۦ ثَمَنٗا وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰ وَلَا نَكۡتُمُ شَهَٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذٗا لَّمِنَ ٱلۡأٓثِمِينَ ﴾
[المَائدة: 106]

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாசனம் கூற விரும்பினால்) அவர் மரண சாசனம் (வஸீயத்) கூறும் சமயத்தில் உங்களில் நம்பிக்கைக்குரிய (நேர்மையான) இருவர் சாட்சியாக இருக்கவேண்டும். அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்துகொண்டு இருக்கும்பொழுது மரணம் சமீபித்தால் (அது சமயம் சாசனத்தின் சாட்சிக்காக முஸ்லிம்களாகிய இருவர் கிடைக்காவிடில்) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கவும். (இந்தச் சாட்சிகள் கூறும் விஷயத்தில்) உங்களுக்குச் சந்தேகமேற்பட்டால் அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப்பின் தடுத்து வைத்துக்கொள்ளவும். அவ்விருவரும் ‘‘நாங்கள் கூறிய (சாட்சியத்)தைக் கொண்டு ஒரு பொருளையும் அதற்காக நாங்கள் அடையவிரும்பவில்லை. அவர்கள் எங்கள் உறவினர்களாக இருந்தபோதிலும் நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்கவே இல்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان﴾ [المَائدة: 106]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Unkalil evarukkum maranam camipittu (avar marana cacanam kura virumpinal) avar marana cacanam (vasiyat) kurum camayattil unkalil nampikkaikkuriya (nermaiyana) iruvar catciyaka irukkaventum. Allatu unkalil evarum pumiyil payanam ceytukontu irukkumpolutu maranam camipittal (atu camayam cacanattin catcikkaka muslimkalakiya iruvar kitaikkavitil) ninkal allata veriruvar (catciyaka) irukkavum. (Intac catcikal kurum visayattil) unkalukkuc cantekamerpattal avviruvaraiyum (asar) tolukaikkuppin tatuttu vaittukkollavum. Avviruvarum ‘‘nankal kuriya (catciyat)taik kontu oru porulaiyum atarkaka nankal ataiyavirumpavillai. Avarkal enkal uravinarkalaka iruntapotilum nankal allahvukkaka catci kuriyatil etaiyum maraikkave illai. Avvaru ceytiruntal niccayamaka nankal pavikalaki vituvom'' enru allahvin mitu cattiyam ceytu kuraventum
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Uṅkaḷil evarukkum maraṇam camīpittu (avar maraṇa cācaṉam kūṟa virumpiṉāl) avar maraṇa cācaṉam (vasīyat) kūṟum camayattil uṅkaḷil nampikkaikkuriya (nērmaiyāṉa) iruvar cāṭciyāka irukkavēṇṭum. Allatu uṅkaḷil evarum pūmiyil payaṇam ceytukoṇṭu irukkumpoḻutu maraṇam camīpittāl (atu camayam cācaṉattiṉ cāṭcikkāka muslimkaḷākiya iruvar kiṭaikkāviṭil) nīṅkaḷ allāta vēṟiruvar (cāṭciyāka) irukkavum. (Intac cāṭcikaḷ kūṟum viṣayattil) uṅkaḷukkuc cantēkamēṟpaṭṭāl avviruvaraiyum (asar) toḻukaikkuppiṉ taṭuttu vaittukkoḷḷavum. Avviruvarum ‘‘nāṅkaḷ kūṟiya (cāṭciyat)taik koṇṭu oru poruḷaiyum ataṟkāka nāṅkaḷ aṭaiyavirumpavillai. Avarkaḷ eṅkaḷ uṟaviṉarkaḷāka iruntapōtilum nāṅkaḷ allāhvukkāka cāṭci kūṟiyatil etaiyum maṟaikkavē illai. Avvāṟu ceytiruntāl niccayamāka nāṅkaḷ pāvikaḷāki viṭuvōm'' eṉṟu allāhviṉ mītu cattiyam ceytu kūṟavēṇṭum
Jan Turst Foundation
Iman kontavarkale! Unkalil yarukkenum maranam camipittu (avar maranacasanam kura virumpinal) accamayattil unkalukkul nampikkaikkuriya irantu catcikal irukkaventum;. Allatu unkalil evarum pumiyil pirayanam ceytu kontirukkumpotu maranam camipittal (appotu muslimkalaka iru catcikal kitaiyavitin) unkalaiyallata veriruvar catciyaka irukkattum;. (Ivarkal mitu) unkalukku cantekam erpattal ivviruvaraiyum (asaru) tolukaikkup pin tatuttu vaittuk kollavum;. Ivviruvarum"nankal (catci) kuriyatu kontu yatoru porulaiyum nankal ataiya virumpavillai. Avarkal, enkalutaiya pantukkalayirunta potilum, nankal allahvukkaka catciyan kuriyatil etaiyum maraikkavillai. Avvaru ceytiruntal niccayamaka nankal pavikalaki vituvom" enru allahvin mitu cattiyam ceytu kuraventum
Jan Turst Foundation
Īmāṉ koṇṭavarkaḷē! Uṅkaḷil yārukkēṉum maraṇam camīpittu (avar maraṇacāsaṉam kūṟa virumpiṉāl) accamayattil uṅkaḷukkuḷ nampikkaikkuriya iraṇṭu cāṭcikaḷ irukkavēṇṭum;. Allatu uṅkaḷil evarum pūmiyil pirayāṇam ceytu koṇṭirukkumpōtu maraṇam camīpittāl (appōtu muslīmkaḷāka iru cāṭcikaḷ kiṭaiyāviṭiṉ) uṅkaḷaiyallāta vēṟiruvar cāṭciyāka irukkaṭṭum;. (Ivarkaḷ mītu) uṅkaḷukku cantēkam ēṟpaṭṭāl ivviruvaraiyum (asaru) toḻukaikkup piṉ taṭuttu vaittuk koḷḷavum;. Ivviruvarum"nāṅkaḷ (cāṭci) kūṟiyatu koṇṭu yātoru poruḷaiyum nāṅkaḷ aṭaiya virumpavillai. Avarkaḷ, eṅkaḷuṭaiya pantukkaḷāyirunta pōtilum, nāṅkaḷ allāhvukkāka cāṭciyaṅ kūṟiyatil etaiyum maṟaikkavillai. Avvāṟu ceytiruntāl niccayamāka nāṅkaḷ pāvikaḷāki viṭuvōm" eṉṟu allāhviṉ mītu cattiyam ceytu kūṟavēṇṭum
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்;. அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லீம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்;. (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்;. இவ்விருவரும் "நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை. அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek