×

(நபியே!) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவர்களில் 58:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Mujadilah ⮕ (58:7) ayat 7 in Tamil

58:7 Surah Al-Mujadilah ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mujadilah ayat 7 - المُجَادلة - Page - Juz 28

﴿أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ مَا يَكُونُ مِن نَّجۡوَىٰ ثَلَٰثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمۡ وَلَا خَمۡسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمۡ وَلَآ أَدۡنَىٰ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡثَرَ إِلَّا هُوَ مَعَهُمۡ أَيۡنَ مَا كَانُواْۖ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُواْ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ ﴾
[المُجَادلة: 7]

(நபியே!) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவர்களில் மூன்று பேர்கள் (கூடிப் பேசும்) ரகசியத்தில் அவன் நான்காவதாக இல்லாமல் இல்லை. ஐந்து பேர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்தில் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை. இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ளவர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்திலும், அவன் அவர்களுடன் இல்லாமல் இல்லை. இவ்வாறு அவர்கள் எங்கிருந்த போதிலும் (ரகசியம் பேசினால் அவன் அவர்களுடைய ரகசியங்களை அறிந்து கொள்கிறான்). பின்னர், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் அறிவி(த்து அதற்குரிய கூலியைக் கொடு)க்கிறான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ألم تر أن الله يعلم ما في السموات وما في الأرض ما, باللغة التاميلية

﴿ألم تر أن الله يعلم ما في السموات وما في الأرض ما﴾ [المُجَادلة: 7]

Abdulhameed Baqavi
(Napiye!) Vanankalilum, pumiyilum ullavai anaittaiyum niccayamaka allah arikiran enpatai nir kavanikkavillaiya? Avarkalil munru perkal (kutip pecum) rakaciyattil avan nankavataka illamal illai. Aintu perkal (kutip pecum) irakaciyattil avan aravataka illamalillai. Itaivita kuraivakavo allatu atikamakavo ullavarkal (kutip pecum) irakaciyattilum, avan avarkalutan illamal illai. Ivvaru avarkal enkirunta potilum (rakaciyam pecinal avan avarkalutaiya rakaciyankalai arintu kolkiran). Pinnar, avarkal ceytavarraip parri avarkalukku marumai nalil arivi(ttu atarkuriya kuliyaik kotu)kkiran. Niccayamaka allah anaittaiyum nankarintavan avan
Abdulhameed Baqavi
(Napiyē!) Vāṉaṅkaḷilum, pūmiyilum uḷḷavai aṉaittaiyum niccayamāka allāh aṟikiṟāṉ eṉpatai nīr kavaṉikkavillaiyā? Avarkaḷil mūṉṟu pērkaḷ (kūṭip pēcum) rakaciyattil avaṉ nāṉkāvatāka illāmal illai. Aintu pērkaḷ (kūṭip pēcum) irakaciyattil avaṉ āṟāvatāka illāmalillai. Itaiviṭa kuṟaivākavō allatu atikamākavō uḷḷavarkaḷ (kūṭip pēcum) irakaciyattilum, avaṉ avarkaḷuṭaṉ illāmal illai. Ivvāṟu avarkaḷ eṅkirunta pōtilum (rakaciyam pēciṉāl avaṉ avarkaḷuṭaiya rakaciyaṅkaḷai aṟintu koḷkiṟāṉ). Piṉṉar, avarkaḷ ceytavaṟṟaip paṟṟi avarkaḷukku maṟumai nāḷil aṟivi(ttu ataṟkuriya kūliyaik koṭu)kkiṟāṉ. Niccayamāka allāh aṉaittaiyum naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
niccayamaka allah vanankalilullavarraiyum pumiyilullavarraiyum arikiran enpatai nir parkkavillaiya? Munru perkalin irakaciyattil avan avarkalil nankavataka illamalillai, innum aintu perkali(n irakaciyatti)l avan aravataka illamalillai, innum ataivita mikak kurainto, ataivita mika atikamakavo, avarkal enkiruntalum avan avarkalutan illamalillai - appal kiyama nalil avarkal ceytavarraip parri avarkalukku avan arivippan, niccayamaka allah ellap porutkalaip parriyum nankarintavan
Jan Turst Foundation
niccayamāka allāh vāṉaṅkaḷiluḷḷavaṟṟaiyum pūmiyiluḷḷavaṟṟaiyum aṟikiṟāṉ eṉpatai nīr pārkkavillaiyā? Mūṉṟu pērkaḷiṉ irakaciyattil avaṉ avarkaḷil nāṉkāvatāka illāmalillai, iṉṉum aintu pērkaḷi(ṉ irakaciyatti)l avaṉ āṟāvatāka illāmalillai, iṉṉum ataiviṭa mikak kuṟaintō, ataiviṭa mika atikamākavō, avarkaḷ eṅkiruntālum avaṉ avarkaḷuṭaṉ illāmalillai - appāl kiyāma nāḷil avarkaḷ ceytavaṟṟaip paṟṟi avarkaḷukku avaṉ aṟivippāṉ, niccayamāka allāh ellāp poruṭkaḷaip paṟṟiyum naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek