×

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்தவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் 6:151 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:151) ayat 151 in Tamil

6:151 Surah Al-An‘am ayat 151 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 151 - الأنعَام - Page - Juz 8

﴿۞ قُلۡ تَعَالَوۡاْ أَتۡلُ مَا حَرَّمَ رَبُّكُمۡ عَلَيۡكُمۡۖ أَلَّا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡـٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗاۖ وَلَا تَقۡتُلُوٓاْ أَوۡلَٰدَكُم مِّنۡ إِمۡلَٰقٖ نَّحۡنُ نَرۡزُقُكُمۡ وَإِيَّاهُمۡۖ وَلَا تَقۡرَبُواْ ٱلۡفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنۡهَا وَمَا بَطَنَۖ وَلَا تَقۡتُلُواْ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ﴾
[الأنعَام: 151]

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்தவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடை செய்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு இவற்றை (விவரித்து) உபதேசிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين, باللغة التاميلية

﴿قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين﴾ [الأنعَام: 151]

Abdulhameed Baqavi
(Napiye! Avarkalai nokki) kuruviraka: ‘‘Varunkal! Unkal iraivan unkalukkut tatai ceytavarrai(yum eviyiruppavarraiyum) nan unkalukku otik kanpikkiren. (Avaiyavana:) Avanukku etaiyum ninkal inaiyakkatirkal. (Unkal) tay tantaiyutan mika alakiya muraiyil natantu kollunkal (avarkalukku utavi ceyyunkal). Varumaikkup payantu unkal pillaikalai ninkal kolai ceyyatirkal. (Enenral,) unkalukkum avarkalukkum name unavalikkirom. Irakaciyamakavo, pakirankamakavo ulla manakketana visayankalil etarkum nerunkatirkal. (Kolai ceyyakkutatenru) allah tatai ceytulla enta manitanaiyum niyayaminri kolai ceyyatirkal. Ninkal (tavaru ceyyatu) unarntu kolvatarkaka (iraivan) unkalukku ivarrai (vivarittu) upatecikkiran
Abdulhameed Baqavi
(Napiyē! Avarkaḷai nōkki) kūṟuvīrāka: ‘‘Vāruṅkaḷ! Uṅkaḷ iṟaivaṉ uṅkaḷukkut taṭai ceytavaṟṟai(yum ēviyiruppavaṟṟaiyum) nāṉ uṅkaḷukku ōtik kāṇpikkiṟēṉ. (Avaiyāvaṉa:) Avaṉukku etaiyum nīṅkaḷ iṇaiyākkātīrkaḷ. (Uṅkaḷ) tāy tantaiyuṭaṉ mika aḻakiya muṟaiyil naṭantu koḷḷuṅkaḷ (avarkaḷukku utavi ceyyuṅkaḷ). Vaṟumaikkup payantu uṅkaḷ piḷḷaikaḷai nīṅkaḷ kolai ceyyātīrkaḷ. (Ēṉeṉṟāl,) uṅkaḷukkum avarkaḷukkum nāmē uṇavaḷikkiṟōm. Irakaciyamākavō, pakiraṅkamākavō uḷḷa māṉakkēṭāṉa viṣayaṅkaḷil etaṟkum neruṅkātīrkaḷ. (Kolai ceyyakkūṭāteṉṟu) allāh taṭai ceytuḷḷa enta maṉitaṉaiyum niyāyamiṉṟi kolai ceyyātīrkaḷ. Nīṅkaḷ (tavaṟu ceyyātu) uṇarntu koḷvataṟkāka (iṟaivaṉ) uṅkaḷukku ivaṟṟai (vivarittu) upatēcikkiṟāṉ
Jan Turst Foundation
Varunkal! Unkal iraivan unkal mitu vilakkiyiruppavarraiyum (eviyiruppavarraiyum) nam otik kanpikkiren; epporulaiyum avanukku inaiyaka vaikkatirkal; perrorkalukku nanmai ceyyunkal; varumaikkup payantu unkal kulantaikalaik kollatirkal - enenil unkalukkum, avarkalukkum name unavalikkinrom; veliptaiyana irakaciyamana manakketana kariyankalai ninkal nerunkatirkal; allah tatuttulla enta or atmavaiyum niyayamanatarku allamal - kolai ceyyatirkal - ivarrai ninkal unarntu kolvatarkaka (iraivan) unkalukku (ivvaru) potikkinran
Jan Turst Foundation
Vāruṅkaḷ! Uṅkaḷ iṟaivaṉ uṅkaḷ mītu vilakkiyiruppavaṟṟaiyum (ēviyiruppavaṟṟaiyum) nām ōtik kāṇpikkiṟēṉ; epporuḷaiyum avaṉukku iṇaiyāka vaikkātīrkaḷ; peṟṟōrkaḷukku naṉmai ceyyuṅkaḷ; vaṟumaikkup payantu uṅkaḷ kuḻantaikaḷaik kollātīrkaḷ - ēṉeṉil uṅkaḷukkum, avarkaḷukkum nāmē uṇavaḷikkiṉṟōm; veḷipṭaiyāṉa irakaciyamāṉa māṉakkēṭāṉa kāriyaṅkaḷai nīṅkaḷ neruṅkātīrkaḷ; allāh taṭuttuḷḷa enta ōr ātmāvaiyum niyāyamāṉataṟku allāmal - kolai ceyyātīrkaḷ - ivaṟṟai nīṅkaḷ uṇarntu koḷvataṟkāka (iṟaivaṉ) uṅkaḷukku (ivvāṟu) pōtikkiṉṟāṉ
Jan Turst Foundation
வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek