×

(நபியே! உமக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீர் கூறுவதைக் கேட்க) உமக்கு செவி சாய்ப்பவர்களும் 6:25 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:25) ayat 25 in Tamil

6:25 Surah Al-An‘am ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 25 - الأنعَام - Page - Juz 7

﴿وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُ إِلَيۡكَۖ وَجَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۚ وَإِن يَرَوۡاْ كُلَّ ءَايَةٖ لَّا يُؤۡمِنُواْ بِهَاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴾
[الأنعَام: 25]

(நபியே! உமக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீர் கூறுவதைக் கேட்க) உமக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்திவிட்டோம். ஆகவே, (இவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் அனைத்தையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்த போதிலும், உம்முடன் தர்க்கித்து, ‘‘இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم, باللغة التاميلية

﴿ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم﴾ [الأنعَام: 25]

Abdulhameed Baqavi
(napiye! Umakku kattuppatukiravarkalaip pola pavanai ceytu nir kuruvataik ketka) umakku cevi cayppavarkalum avarkalil untu. Eninum, avarkal (tam tiyac ceyalkalin karanamaka) atai vilankik kollatirukkumpati avarkalutaiya ullankalil tiraiyaiyum avarkalutaiya katukalil cevittaiyum nam erpatuttivittom. Akave, (ivarkal cattiyattirkuriya) attatcikal anaittaiyum (telivakak) kantapotilum avarrai avarkal (oru ciritum) nampave mattarkal. (Napiye!) Avarkal um'mitam vanta potilum, um'mutan tarkkittu, ‘‘ivai palankalattil ullavarkalin kattuk kataikale tavira verillai'' enre innirakarippavarkal kuruvarkal
Abdulhameed Baqavi
(napiyē! Umakku kaṭṭuppaṭukiṟavarkaḷaip pōla pāvaṉai ceytu nīr kūṟuvataik kēṭka) umakku cevi cāyppavarkaḷum avarkaḷil uṇṭu. Eṉiṉum, avarkaḷ (tam tīyac ceyalkaḷiṉ kāraṇamāka) atai viḷaṅkik koḷḷātirukkumpaṭi avarkaḷuṭaiya uḷḷaṅkaḷil tiraiyaiyum avarkaḷuṭaiya kātukaḷil ceviṭṭaiyum nām ēṟpaṭuttiviṭṭōm. Ākavē, (ivarkaḷ cattiyattiṟkuriya) attāṭcikaḷ aṉaittaiyum (teḷivākak) kaṇṭapōtilum avaṟṟai avarkaḷ (oru ciṟitum) nampavē māṭṭārkaḷ. (Napiyē!) Avarkaḷ um'miṭam vanta pōtilum, um'muṭaṉ tarkkittu, ‘‘ivai paḻaṅkālattil uḷḷavarkaḷiṉ kaṭṭuk kataikaḷē tavira vēṟillai'' eṉṟē innirākarippavarkaḷ kūṟuvārkaḷ
Jan Turst Foundation
avarkalil cilar um peccaik ket(patu pol pavanai cey)kinranar; nam avarkalutaiya ullankalil atai vilankik kollatu irukkumaru tiraikalaiyum innum avarkal katukalil cevittut tanmaiyum erpatuttinom; innum avarkal ella attatcikalaiyum parttalum avarrai nampamattarkal; innum ivarkal um'mitam vantal um'motu vatatuvarkal; "ivaiyellam munnorkalutaiya kattuk kataikaleyanri verillai" enru innirakarippor kuruvarkal
Jan Turst Foundation
avarkaḷil cilar um pēccaik kēṭ(patu pōl pāvaṉai cey)kiṉṟaṉar; nām avarkaḷuṭaiya uḷḷaṅkaḷil atai viḷaṅkik koḷḷātu irukkumāṟu tiraikaḷaiyum iṉṉum avarkaḷ kātukaḷil ceviṭṭut taṉmaiyum ēṟpaṭuttiṉōm; iṉṉum avarkaḷ ellā attāṭcikaḷaiyum pārttālum avaṟṟai nampamāṭṭārkaḷ; iṉṉum ivarkaḷ um'miṭam vantāl um'mōṭu vātāṭuvārkaḷ; "ivaiyellām muṉṉōrkaḷuṭaiya kaṭṭuk kataikaḷēyaṉṟi vēṟillai" eṉṟu innirākarippōr kūṟuvārkaḷ
Jan Turst Foundation
அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; "இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek