×

நீங்கள் (‘பத்ரு' போர்க்களத்தில் மதீனாவுக்குச்) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கிலும், அவர்கள் (உங்களுக்கு எதிர்புறமுள்ள) தூரமான கோடியிலும், 8:42 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:42) ayat 42 in Tamil

8:42 Surah Al-Anfal ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 42 - الأنفَال - Page - Juz 10

﴿إِذۡ أَنتُم بِٱلۡعُدۡوَةِ ٱلدُّنۡيَا وَهُم بِٱلۡعُدۡوَةِ ٱلۡقُصۡوَىٰ وَٱلرَّكۡبُ أَسۡفَلَ مِنكُمۡۚ وَلَوۡ تَوَاعَدتُّمۡ لَٱخۡتَلَفۡتُمۡ فِي ٱلۡمِيعَٰدِ وَلَٰكِن لِّيَقۡضِيَ ٱللَّهُ أَمۡرٗا كَانَ مَفۡعُولٗا لِّيَهۡلِكَ مَنۡ هَلَكَ عَنۢ بَيِّنَةٖ وَيَحۡيَىٰ مَنۡ حَيَّ عَنۢ بَيِّنَةٖۗ وَإِنَّ ٱللَّهَ لَسَمِيعٌ عَلِيمٌ ﴾
[الأنفَال: 42]

நீங்கள் (‘பத்ரு' போர்க்களத்தில் மதீனாவுக்குச்) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கிலும், அவர்கள் (உங்களுக்கு எதிர்புறமுள்ள) தூரமான கோடியிலும், (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலத்தையும் இடத்தையும் குறிப்பிட்டு) வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் (நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அங்கு வந்து சேர்ந்து) அவ்வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பதில் நீங்கள் (ஏதும்) தவறிழைத்தே இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் முடிவு செய்துவிட்ட காரியம் நடந்தேறுவதற்காக (உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அங்கு ஒன்று சேர்த்தான்). அழிந்தவர்கள் தக்க ஆதாரத்துடன் அழிவதற்காகவும், (தப்பிப்) பிழைத்தவர்கள் தக்க ஆதாரத்தைக் கொண்டே தப்புவதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم, باللغة التاميلية

﴿إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم﴾ [الأنفَال: 42]

Abdulhameed Baqavi
Ninkal (‘patru' porkkalattil matinavukkuc) camipamaka ulla pallattakkilum, avarkal (unkalukku etirpuramulla) turamana kotiyilum, (varttakarkalakiya) vakanakkararkal unkalukkuk kilppurattilum iruntatai ninkal ninaittup parunkal. Ninkal oruvarukkoruvar (cantikkum kalattaiyum itattaiyum kurippittu) vakkuruti ceytu kontiruntal (ninkal kurippitta kalattil anku vantu cerntu) avvakkurutiyai niraiverri vaippatil ninkal (etum) tavarilaitte iruppirkal. Eninum, allah mutivu ceytuvitta kariyam natanteruvatarkaka (unkal anaivaraiyum ore nerattil anku onru certtan). Alintavarkal takka atarattutan alivatarkakavum, (tappip) pilaittavarkal takka atarattaik konte tappuvatarkakavum (allah ivvaru ceytan). Niccayamaka allah nanku ceviyurupavan, (anaittaiyum) nankarintavan avan
Abdulhameed Baqavi
Nīṅkaḷ (‘patru' pōrkkaḷattil matīṉāvukkuc) camīpamāka uḷḷa paḷḷattākkilum, avarkaḷ (uṅkaḷukku etirpuṟamuḷḷa) tūramāṉa kōṭiyilum, (varttakarkaḷākiya) vākaṉakkārarkaḷ uṅkaḷukkuk kīḻppuṟattilum iruntatai nīṅkaḷ niṉaittup pāruṅkaḷ. Nīṅkaḷ oruvarukkoruvar (cantikkum kālattaiyum iṭattaiyum kuṟippiṭṭu) vākkuṟuti ceytu koṇṭiruntāl (nīṅkaḷ kuṟippiṭṭa kālattil aṅku vantu cērntu) avvākkuṟutiyai niṟaivēṟṟi vaippatil nīṅkaḷ (ētum) tavaṟiḻaittē iruppīrkaḷ. Eṉiṉum, allāh muṭivu ceytuviṭṭa kāriyam naṭantēṟuvataṟkāka (uṅkaḷ aṉaivaraiyum orē nērattil aṅku oṉṟu cērttāṉ). Aḻintavarkaḷ takka ātārattuṭaṉ aḻivataṟkākavum, (tappip) piḻaittavarkaḷ takka ātārattaik koṇṭē tappuvataṟkākavum (allāh ivvāṟu ceytāṉ). Niccayamāka allāh naṉku ceviyuṟupavaṉ, (aṉaittaiyum) naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
(patru porkkalattil matina pakkam) pallattakkil ninkalum, (etirikal) turamana kotiyilum, (kuraisi viyaparikalakiya) vakanakkararkal unkal kilppurattilum iruntirkal. Ninkalum avarkalum (cantikkum kalam itam parri) vakkuruti ceytirunta potilum atai niraiverruvatil niccayamakak karuttu verrumai kontiruppirkal; anal ceyyappata ventiya kariyattai allah niraiverruvatarkakavum, alintavarkal takka mukantarattutan alivatarkakavum, tappip pilaittavarkal takka mukantarattaik konte tappikkavum (ivvaru avan ceytan) - niccayamaka allah ceviyerpavanakavum, aripavanakavum irukkinran
Jan Turst Foundation
(patru pōrkkaḷattil matīṉā pakkam) paḷḷattākkil nīṅkaḷum, (etirikaḷ) tūramāṉa kōṭiyilum, (kuṟaiṣi viyāpārikaḷākiya) vākaṉakkārarkaḷ uṅkaḷ kīḻppuṟattilum iruntīrkaḷ. Nīṅkaḷum avarkaḷum (cantikkum kālam iṭam paṟṟi) vākkuṟuti ceytirunta pōtilum atai niṟaivēṟṟuvatil niccayamākak karuttu vēṟṟumai koṇṭiruppīrkaḷ; āṉāl ceyyappaṭa vēṇṭiya kāriyattai allāh niṟaivēṟṟuvataṟkākavum, aḻintavarkaḷ takka mukāntarattuṭaṉ aḻivataṟkākavum, tappip piḻaittavarkaḷ takka mukāntarattaik koṇṭē tappikkavum (ivvāṟu avaṉ ceytāṉ) - niccayamāka allāh ceviyēṟpavaṉākavum, aṟipavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek