×

(நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கு ஏதும் நஷ்டம் ஏற்பட்டு விடாது. ஏனென்றால்) 9:40 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:40) ayat 40 in Tamil

9:40 Surah At-Taubah ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 40 - التوبَة - Page - Juz 10

﴿إِلَّا تَنصُرُوهُ فَقَدۡ نَصَرَهُ ٱللَّهُ إِذۡ أَخۡرَجَهُ ٱلَّذِينَ كَفَرُواْ ثَانِيَ ٱثۡنَيۡنِ إِذۡ هُمَا فِي ٱلۡغَارِ إِذۡ يَقُولُ لِصَٰحِبِهِۦ لَا تَحۡزَنۡ إِنَّ ٱللَّهَ مَعَنَاۖ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَيۡهِ وَأَيَّدَهُۥ بِجُنُودٖ لَّمۡ تَرَوۡهَا وَجَعَلَ كَلِمَةَ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلسُّفۡلَىٰۗ وَكَلِمَةُ ٱللَّهِ هِيَ ٱلۡعُلۡيَاۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ ﴾
[التوبَة: 40]

(நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கு ஏதும் நஷ்டம் ஏற்பட்டு விடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கிறான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி ‘‘நீர் கவலைப்படாதீர்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன் புறத்திலிருந்து மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங்களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்)தான் மிக உயர்வானது. இன்னும், அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ, باللغة التاميلية

﴿إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ﴾ [التوبَة: 40]

Abdulhameed Baqavi
(Nam tutarukku) ninkal utavi ceyyavittal (atanal avarukku etum nastam erpattu vitatu. Enenral) nirakarippavarkal avarai (uraivittu) veliyerriya camayattil niccayamaka allah avarukku utaviceyte irukkiran. (Malaik) kukaiyil irunta iruvaril oruvaraka avar irunta (potu etirikal culntukonta) camayattil tannutan (kukaiyil) irunta tola(rakiya apupak)rai nokki ‘‘nir kavalaippatatir! Niccayamaka allah nam'mutan irukkiran'' enru kuriyapotum allah avarukkut tan purattiliruntu mananim'matiyai alittan. (Marra por camayankalilum) ninkal kanamutiyata pataikalaik kontu avarukku utavi ceytu nirakarippavarkalin varttaiyai (markkattai) talttinan. Enenral, allahvin varttai (markkam)tan mika uyarvanatu. Innum, allah (anaittaiyum) mikaittavan, nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
(Nam tūtarukku) nīṅkaḷ utavi ceyyāviṭṭāl (ataṉāl avarukku ētum naṣṭam ēṟpaṭṭu viṭātu. Ēṉeṉṟāl) nirākarippavarkaḷ avarai (ūraiviṭṭu) veḷiyēṟṟiya camayattil niccayamāka allāh avarukku utaviceytē irukkiṟāṉ. (Malaik) kukaiyil irunta iruvaril oruvarāka avar irunta (pōtu etirikaḷ cūḻntukoṇṭa) camayattil taṉṉuṭaṉ (kukaiyil) irunta tōḻa(rākiya apūpak)rai nōkki ‘‘nīr kavalaippaṭātīr! Niccayamāka allāh nam'muṭaṉ irukkiṟāṉ'' eṉṟu kūṟiyapōtum allāh avarukkut taṉ puṟattiliruntu maṉanim'matiyai aḷittāṉ. (Maṟṟa pōr camayaṅkaḷilum) nīṅkaḷ kāṇamuṭiyāta paṭaikaḷaik koṇṭu avarukku utavi ceytu nirākarippavarkaḷiṉ vārttaiyai (mārkkattai) tāḻttiṉāṉ. Ēṉeṉṟāl, allāhviṉ vārttai (mārkkam)tāṉ mika uyarvāṉatu. Iṉṉum, allāh (aṉaittaiyum) mikaittavaṉ, ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
(nam tutarakiya) avarukku ninkal utavi ceyya vittal, (avarukku yatoru ilappumillai) nirakarippavarkal avarai urai vittu veliyerriyapotu niccayamaka allah avarukku utavi ceyte irukkinran; kukaiyil iruvaril oruvaraka irunta potu, (nam tutar) tam tolaritam, "kavalaippatatirkal; niccayamaka allah nam'mutan irukkinran" enru kurinar. Appotu avar mitu allah tan cantiyai irakki vaittan; melum ninkal parkka mutiyap pataikalaik kontu avaraip palappatuttinan; nirakaripporin vakkaik kilakkinan; enenil allahvin vakkuttan (eppotum) melonkum - allah mikaittavan, nanamikkavan
Jan Turst Foundation
(nam tūtarākiya) avarukku nīṅkaḷ utavi ceyyā viṭṭāl, (avarukku yātoru iḻappumillai) nirākarippavarkaḷ avarai ūrai viṭṭu veḷiyēṟṟiyapōtu niccayamāka allāh avarukku utavi ceytē irukkiṉṟāṉ; kukaiyil iruvaril oruvarāka irunta pōtu, (nam tūtar) tam tōḻariṭam, "kavalaippaṭātīrkaḷ; niccayamāka allāh nam'muṭaṉ irukkiṉṟāṉ" eṉṟu kūṟiṉār. Appōtu avar mītu allāh taṉ cāntiyai iṟakki vaittāṉ; mēlum nīṅkaḷ pārkka muṭiyāp paṭaikaḷaik koṇṭu avaraip palappaṭuttiṉāṉ; nirākarippōriṉ vākkaik kīḻākkiṉāṉ; ēṉeṉil allāhviṉ vākkuttāṉ (eppōtum) mēlōṅkum - allāh mikaittavaṉ, ñāṉamikkavaṉ
Jan Turst Foundation
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், "கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek