×

(இக்குற்றவாளிகளைப் பற்றி) தீர்ப்புக் கூறப்பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனையைத் தருவதாக) 14:22 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:22) ayat 22 in Tamil

14:22 Surah Ibrahim ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 22 - إبراهِيم - Page - Juz 13

﴿وَقَالَ ٱلشَّيۡطَٰنُ لَمَّا قُضِيَ ٱلۡأَمۡرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمۡ وَعۡدَ ٱلۡحَقِّ وَوَعَدتُّكُمۡ فَأَخۡلَفۡتُكُمۡۖ وَمَا كَانَ لِيَ عَلَيۡكُم مِّن سُلۡطَٰنٍ إِلَّآ أَن دَعَوۡتُكُمۡ فَٱسۡتَجَبۡتُمۡ لِيۖ فَلَا تَلُومُونِي وَلُومُوٓاْ أَنفُسَكُمۖ مَّآ أَنَا۠ بِمُصۡرِخِكُمۡ وَمَآ أَنتُم بِمُصۡرِخِيَّ إِنِّي كَفَرۡتُ بِمَآ أَشۡرَكۡتُمُونِ مِن قَبۡلُۗ إِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴾
[إبراهِيم: 22]

(இக்குற்றவாளிகளைப் பற்றி) தீர்ப்புக் கூறப்பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனையைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்.) நானும் உங்களுக்கு(ப் பொய்யாக) வாக்களித்தேன்; எனினும், நான் உங்களை வஞ்சித்து விட்டேன்; ‘‘நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்'' என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு ஓர் அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான்

❮ Previous Next ❯

ترجمة: وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم, باللغة التاميلية

﴿وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم﴾ [إبراهِيم: 22]

Abdulhameed Baqavi
(Ikkurravalikalaip parri) tirppuk kurappattatum pinnar, saittan (ivarkalai nokki) ‘‘niccayamaka allah (ivvetanaiyait taruvataka) unkalukku meyyakave vakkalittiruntan. (Avvare kotuttum vittan.) Nanum unkalukku(p poyyaka) vakkalitten; eninum, nan unkalai vancittu vitten; ‘‘nan unkalai alaitten; ninkal ennaip pinparrinirkal'' enpatait tavira, unkalai nan nirppantippatarku enakku or atikaramum illamale iruntatu. Atalal, ninkal ennai nintikkatirkal; unkalaiye ninkal nintittuk kollunkal. Nan unkalukku or utaviyum ceyya mutiyatu. Ninkalum enakku or utaviyum ceyya mutiyatu. Itarku munnar ninkal ennai (allahvukku) inaiyakkik kontiruntataiyum niccayamaka nan nirakarittu vitten. Niccayamaka (unkalaip ponra) aniyayakkararkalukku mikka tunpuruttum vetanai untu enru kuruvan
Abdulhameed Baqavi
(Ikkuṟṟavāḷikaḷaip paṟṟi) tīrppuk kūṟappaṭṭatum piṉṉar, ṣaittāṉ (ivarkaḷai nōkki) ‘‘niccayamāka allāh (ivvētaṉaiyait taruvatāka) uṅkaḷukku meyyākavē vākkaḷittiruntāṉ. (Avvāṟē koṭuttum viṭṭāṉ.) Nāṉum uṅkaḷukku(p poyyāka) vākkaḷittēṉ; eṉiṉum, nāṉ uṅkaḷai vañcittu viṭṭēṉ; ‘‘nāṉ uṅkaḷai aḻaittēṉ; nīṅkaḷ eṉṉaip piṉpaṟṟiṉīrkaḷ'' eṉpatait tavira, uṅkaḷai nāṉ nirppantippataṟku eṉakku ōr atikāramum illāmalē iruntatu. Ātalāl, nīṅkaḷ eṉṉai nintikkātīrkaḷ; uṅkaḷaiyē nīṅkaḷ nintittuk koḷḷuṅkaḷ. Nāṉ uṅkaḷukku ōr utaviyum ceyya muṭiyātu. Nīṅkaḷum eṉakku ōr utaviyum ceyya muṭiyātu. Itaṟku muṉṉar nīṅkaḷ eṉṉai (allāhvukku) iṇaiyākkik koṇṭiruntataiyum niccayamāka nāṉ nirākarittu viṭṭēṉ. Niccayamāka (uṅkaḷaip pōṉṟa) aniyāyakkārarkaḷukku mikka tuṉpuṟuttum vētaṉai uṇṭu eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
(Marumaiyil ivarkal parrit)tirppuk kurapperratum saittan (ivarkalai nokki)"niccayamaka allah unkalukku unmaiyana vakkurutiyaiye vakkalittiruntan; nanum unkalukku vakkalittirunten - anal nan unkalukkuk kotutta vakkil maru ceytu vitten. Nan unkalai alaitten; appotu ninkal en alaippinai erruk kontirkal enpatait tavira enakku unkal mitu enta atikaramumillai akave ninkal ennai nintikkatirkal; unkalai nan kapparrupavan illai ninkalum ennaik kapparrukiravarkalillai. Ninkal munnal ennai (allahvukku) inaiyakkik kontiruntataiyum, niccayamaka nan nirakarittu vitten - niccayamaka akkiramakkararkalukku novinai mikka vetanai untu" enru kuruvan
Jan Turst Foundation
(Maṟumaiyil ivarkaḷ paṟṟit)tīrppuk kūṟappeṟṟatum ṣaittāṉ (ivarkaḷai nōkki)"niccayamāka allāh uṅkaḷukku uṇmaiyāṉa vākkuṟutiyaiyē vākkaḷittiruntāṉ; nāṉum uṅkaḷukku vākkaḷittiruntēṉ - āṉāl nāṉ uṅkaḷukkuk koṭutta vākkil māṟu ceytu viṭṭēṉ. Nāṉ uṅkaḷai aḻaittēṉ; appōtu nīṅkaḷ eṉ aḻaippiṉai ēṟṟuk koṇṭīrkaḷ eṉpatait tavira eṉakku uṅkaḷ mītu enta atikāramumillai ākavē nīṅkaḷ eṉṉai nintikkātīrkaḷ; uṅkaḷai nāṉ kāppāṟṟupavaṉ illai nīṅkaḷum eṉṉaik kāppāṟṟukiṟavarkaḷillai. Nīṅkaḷ muṉṉāl eṉṉai (allāhvukku) iṇaiyākkik koṇṭiruntataiyum, niccayamāka nāṉ nirākarittu viṭṭēṉ - niccayamāka akkiramakkārarkaḷukku nōviṉai mikka vētaṉai uṇṭu" eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
(மறுமையில் இவர்கள் பற்றித்)தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தான்; நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் - ஆனால் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறு செய்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன்; அப்போது நீங்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை ஆகவே நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களை நான் காப்பாற்றுபவன் இல்லை நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன் - நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு" என்று கூறுவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek