×

(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) 2:221 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:221) ayat 221 in Tamil

2:221 Surah Al-Baqarah ayat 221 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 221 - البَقَرَة - Page - Juz 2

﴿وَلَا تَنكِحُواْ ٱلۡمُشۡرِكَٰتِ حَتَّىٰ يُؤۡمِنَّۚ وَلَأَمَةٞ مُّؤۡمِنَةٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكَةٖ وَلَوۡ أَعۡجَبَتۡكُمۡۗ وَلَا تُنكِحُواْ ٱلۡمُشۡرِكِينَ حَتَّىٰ يُؤۡمِنُواْۚ وَلَعَبۡدٞ مُّؤۡمِنٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكٖ وَلَوۡ أَعۡجَبَكُمۡۗ أُوْلَٰٓئِكَ يَدۡعُونَ إِلَى ٱلنَّارِۖ وَٱللَّهُ يَدۡعُوٓاْ إِلَى ٱلۡجَنَّةِ وَٱلۡمَغۡفِرَةِ بِإِذۡنِهِۦۖ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ﴾
[البَقَرَة: 221]

(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணை வைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும்வரை அவர்களுக்கு (நம்பிக்கையாளர்களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஓர் ஆண் உங்களைக் கவரக்கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்) இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கிறான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன் வசனங்களை (மேலும்) விவரிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم, باللغة التاميلية

﴿ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم﴾ [البَقَرَة: 221]

Abdulhameed Baqavi
(Nampikkaiyalarkale!) Inaivaittu vanankum penkalai avarkal nampikkai kollum varai ninkal manantu kollatirkal. (Enenral,) inaivaittu vanankum oru pen unkalaik kavarakkutiyavalaka iruppinum, nampikkai konta or atimaip pen avalaivita niccayamaka melanaval. (Avvare) inai vaittu vanankum ankal nampikkai kollumvarai avarkalukku (nampikkaiyalarkalana penkalai) ninkal manamutittuk kotukkatirkal. Inaivaittu vanankum or an unkalaik kavarakkutiyavanaka iruppinum, nampikkai konta or atimai avanaivita niccayamaka melanavan. (Inaivaikkum) ivarkal ellam narakattirku alaipparkal. Anal, allahvo tan arulal corkkattirkum (tan) mannippukkum (unkalai) alaikkiran. Manitarkal kavanittu upatecam peruvatarkaka tan vacanankalai (melum) vivarikkiran
Abdulhameed Baqavi
(Nampikkaiyāḷarkaḷē!) Iṇaivaittu vaṇaṅkum peṇkaḷai avarkaḷ nampikkai koḷḷum varai nīṅkaḷ maṇantu koḷḷātīrkaḷ. (Ēṉeṉṟāl,) iṇaivaittu vaṇaṅkum oru peṇ uṅkaḷaik kavarakkūṭiyavaḷāka iruppiṉum, nampikkai koṇṭa ōr aṭimaip peṇ avaḷaiviṭa niccayamāka mēlāṉavaḷ. (Avvāṟē) iṇai vaittu vaṇaṅkum āṇkaḷ nampikkai koḷḷumvarai avarkaḷukku (nampikkaiyāḷarkaḷāṉa peṇkaḷai) nīṅkaḷ maṇamuṭittuk koṭukkātīrkaḷ. Iṇaivaittu vaṇaṅkum ōr āṇ uṅkaḷaik kavarakkūṭiyavaṉāka iruppiṉum, nampikkai koṇṭa ōr aṭimai avaṉaiviṭa niccayamāka mēlāṉavaṉ. (Iṇaivaikkum) ivarkaḷ ellām narakattiṟku aḻaippārkaḷ. Āṉāl, allāhvō taṉ aruḷāl corkkattiṟkum (taṉ) maṉṉippukkum (uṅkaḷai) aḻaikkiṟāṉ. Maṉitarkaḷ kavaṉittu upatēcam peṟuvataṟkāka taṉ vacaṉaṅkaḷai (mēlum) vivarikkiṟāṉ
Jan Turst Foundation
(Allahvukku) inaivaikkum penkalai-avarkal nampikkai kollum varai- ninkal tirumanam ceytu kollatirkal;. Inai vaikkum oru pen, unkalaik kavarakkutiyavalaka iruntapotilum, avalaivita muhminana or atimaip pen niccayamaka melanaval. Aval; avvare inaivaikkum ankalukku- avarkal nampikkai kollum varai (muhminana penkalutan) ninkal tirumanam ceytu vaikkatirkal;. Inai vaikkum an unkalukkuk kavarcciyuttupavanaka irunta potilum, oru muhminana atimai avanaivita melanavan; (nirakaripporakiya) ivarkal, unkalai naraka neruppin pakkam alaikkirarkal;. Anal allahvo tan kirupaiyal cuvarkkattin pakkamum, mannippin pakkamum alaikkiran;. Manitarkal patippinai peruvatarkaka tan vacanankalai avan telivaka vilakkukiran
Jan Turst Foundation
(Allāhvukku) iṇaivaikkum peṇkaḷai-avarkaḷ nampikkai koḷḷum varai- nīṅkaḷ tirumaṇam ceytu koḷḷātīrkaḷ;. Iṇai vaikkum oru peṇ, uṅkaḷaik kavarakkūṭiyavaḷāka iruntapōtilum, avaḷaiviṭa muḥmiṉāṉa ōr aṭimaip peṇ niccayamāka mēlāṉavaḷ. Āvāḷ; avvāṟē iṇaivaikkum āṇkaḷukku- avarkaḷ nampikkai koḷḷum varai (muḥmiṉāṉa peṇkaḷuṭaṉ) nīṅkaḷ tirumaṇam ceytu vaikkātīrkaḷ;. Iṇai vaikkum āṇ uṅkaḷukkuk kavarcciyūṭṭupavaṉāka irunta pōtilum, oru muḥmiṉāṉa aṭimai avaṉaiviṭa mēlāṉavaṉ; (nirākarippōrākiya) ivarkaḷ, uṅkaḷai naraka neruppiṉ pakkam aḻaikkiṟārkaḷ;. Āṉāl allāhvō taṉ kirupaiyāl cuvarkkattiṉ pakkamum, maṉṉippiṉ pakkamum aḻaikkiṟāṉ;. Maṉitarkaḷ paṭippiṉai peruvataṟkāka taṉ vacaṉaṅkaḷai avaṉ teḷivāka viḷakkukiṟāṉ
Jan Turst Foundation
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek