×

(நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்கள் கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்கள் 2:272 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:272) ayat 272 in Tamil

2:272 Surah Al-Baqarah ayat 272 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 272 - البَقَرَة - Page - Juz 3

﴿۞ لَّيۡسَ عَلَيۡكَ هُدَىٰهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يَشَآءُۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَلِأَنفُسِكُمۡۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ ٱللَّهِۚ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ ﴾
[البَقَرَة: 272]

(நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்கள் கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்கள் கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர்களையே நேரான வழியில் செலுத்துகிறான். (நம்பிக்கையாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் முகத்தைத் தேடுவதற்கே தவிர, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்) நன்மைக்காக எதைச் செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது

❮ Previous Next ❯

ترجمة: ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير, باللغة التاميلية

﴿ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير﴾ [البَقَرَة: 272]

Abdulhameed Baqavi
(napiye! Manitarkalukku nerana valiyai arivippatutan unkal katamai.) Nerana valiyil avarkalaic celuttuvatu unkal katamaiyalla. Ayinum, allah, tan natiyavarkalaiye nerana valiyil celuttukiran. (Nampikkaiyalarkale!) Nallatiliruntu ninkal etai celavu ceytapotilum atu unkalukke (nanmaiyaka amaiyum). Allahvin mukattait tetuvatarke tavira, (perumaikkaka) ninkal (etaiyum) celavu ceyyatirkal. (Perumaiyai natamal) nanmaikkaka etaic celavu ceytapotilum atan kuliyai ninkal mulumaiyaka ataivirkal, (atil) unkalukku aniti ilaikkappatamattatu
Abdulhameed Baqavi
(napiyē! Maṉitarkaḷukku nērāṉa vaḻiyai aṟivippatutāṉ uṅkaḷ kaṭamai.) Nērāṉa vaḻiyil avarkaḷaic celuttuvatu uṅkaḷ kaṭamaiyalla. Āyiṉum, allāh, tāṉ nāṭiyavarkaḷaiyē nērāṉa vaḻiyil celuttukiṟāṉ. (Nampikkaiyāḷarkaḷē!) Nallatiliruntu nīṅkaḷ etai celavu ceytapōtilum atu uṅkaḷukkē (naṉmaiyāka amaiyum). Allāhviṉ mukattait tēṭuvataṟkē tavira, (perumaikkāka) nīṅkaḷ (etaiyum) celavu ceyyātīrkaḷ. (Perumaiyai nāṭāmal) naṉmaikkāka etaic celavu ceytapōtilum ataṉ kūliyai nīṅkaḷ muḻumaiyāka aṭaivīrkaḷ, (atil) uṅkaḷukku anīti iḻaikkappaṭamāṭṭātu
Jan Turst Foundation
(Napiye!) Avarkalai nervaliyil natattuvatu um katamaiyalla, anal, tan natiyavarkalai allah nervaliyil celuttukinran;. Innum, nallatil ninkal etaic celavitinum, atu unkalukke nanmai payappatakum;. Allahvin tirumukattai natiye allatu (vin perumaikkakac) celavu ceyyatirkal;. Nallavarriliruntu ninkal etaic celavu ceytalum, atarkuriya narpalan unkalukkup puranamakat tiruppik kotukkappatum; ninkal aniyayam ceyyappatamattirkal
Jan Turst Foundation
(Napiyē!) Avarkaḷai nērvaḻiyil naṭattuvatu um kaṭamaiyalla, āṉāl, tāṉ nāṭiyavarkaḷai allāh nērvaḻiyil celuttukiṉṟāṉ;. Iṉṉum, nallatil nīṅkaḷ etaic celaviṭiṉum, atu uṅkaḷukkē naṉmai payappatākum;. Allāhviṉ tirumukattai nāṭiyē allātu (vīṇ perumaikkākac) celavu ceyyātīrkaḷ;. Nallavaṟṟiliruntu nīṅkaḷ etaic celavu ceytālum, ataṟkuriya naṟpalaṉ uṅkaḷukkup pūraṇamākat tiruppik koṭukkappaṭum; nīṅkaḷ aniyāyam ceyyappaṭamāṭṭīrkaḷ
Jan Turst Foundation
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்;. அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்;. நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek