×

ஆனால், (நீங்கள் மூஸாவை நோக்கி) ''மூஸாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் 2:61 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:61) ayat 61 in Tamil

2:61 Surah Al-Baqarah ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 61 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نَّصۡبِرَ عَلَىٰ طَعَامٖ وَٰحِدٖ فَٱدۡعُ لَنَا رَبَّكَ يُخۡرِجۡ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ مِنۢ بَقۡلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَاۖ قَالَ أَتَسۡتَبۡدِلُونَ ٱلَّذِي هُوَ أَدۡنَىٰ بِٱلَّذِي هُوَ خَيۡرٌۚ ٱهۡبِطُواْ مِصۡرٗا فَإِنَّ لَكُم مَّا سَأَلۡتُمۡۗ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلذِّلَّةُ وَٱلۡمَسۡكَنَةُ وَبَآءُو بِغَضَبٖ مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانُواْ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ ﴾
[البَقَرَة: 61]

ஆனால், (நீங்கள் மூஸாவை நோக்கி) ''மூஸாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் விளையக்கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் வெளிப்படுத்தித் தரும்படி உமது இறைவனை எங்களுக்காக நீர் கேட்பீராக'' என அவரிடம் கேட்டீர்கள். அதற்கு (மூஸா) ''மேலானதற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக்கொள்(ள விரும்பு)கிறீர்களா? (அவ்வாறாயின்) நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள். நீங்கள் கேட்பது நிச்சயமாக (அங்குதான்) உங்களுக்குக் கிடைக்கும்'' என்று கூறிவிட்டார். ஆகவே, வீழ்ச்சியும் இழிவும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் (அவர்கள்) சார்ந்து விட்டார்கள். மெய்யாகவே அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததும், நியாயமின்றி இறைத்தூதர்களைக் கொலை செய்து வந்ததும் இதற்குக் காரணமாகும். இ(வ்வளவு பெரிய குற்றங்களை அவர்கள் செய்யும்படி நேர்ந்த)தற்குக் காரணம்: அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு) மாறு செய்தனர். மேலும், வரம்பு மீறிக்கொண்டிருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: وإذ قلتم ياموسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج, باللغة التاميلية

﴿وإذ قلتم ياموسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج﴾ [البَقَرَة: 61]

Abdulhameed Baqavi
Anal, (ninkal musavai nokki)''musave! Ore (vitamana) unavai utkontirukka enkalal mutiyatu. Pumiyil vilaiyakkutiya kirai, vellarikkay, kotumai, paruppu, venkayam akiyavarrai avan velippatuttit tarumpati umatu iraivanai enkalukkaka nir ketpiraka'' ena avaritam kettirkal. Atarku (musa)''melanatarkup patilakat talntatai marrikkol(la virumpu)kirirkala? (Avvarayin) ninkal etenum oru pattanattil iranki vitunkal. Ninkal ketpatu niccayamaka (ankutan) unkalukkuk kitaikkum'' enru kurivittar. Akave, vilcciyum ilivum avarkal mitu vitikkappattuvittana. Allahvin kopattilum (avarkal) carntu vittarkal. Meyyakave avarkal allahvutaiya vacanankalai nirakarittatum, niyayaminri iraittutarkalaik kolai ceytu vantatum itarkuk karanamakum. I(vvalavu periya kurrankalai avarkal ceyyumpati nernta)tarkuk karanam: Avarkal (allahvin kattalaikalukku) maru ceytanar. Melum, varampu mirikkontiruntanar
Abdulhameed Baqavi
Āṉāl, (nīṅkaḷ mūsāvai nōkki)''mūsāvē! Orē (vitamāṉa) uṇavai uṭkoṇṭirukka eṅkaḷāl muṭiyātu. Pūmiyil viḷaiyakkūṭiya kīrai, veḷḷarikkāy, kōtumai, paruppu, veṅkāyam ākiyavaṟṟai avaṉ veḷippaṭuttit tarumpaṭi umatu iṟaivaṉai eṅkaḷukkāka nīr kēṭpīrāka'' eṉa avariṭam kēṭṭīrkaḷ. Ataṟku (mūsā)''mēlāṉataṟkup patilākat tāḻntatai māṟṟikkoḷ(ḷa virumpu)kiṟīrkaḷā? (Avvāṟāyiṉ) nīṅkaḷ ētēṉum oru paṭṭaṇattil iṟaṅki viṭuṅkaḷ. Nīṅkaḷ kēṭpatu niccayamāka (aṅkutāṉ) uṅkaḷukkuk kiṭaikkum'' eṉṟu kūṟiviṭṭār. Ākavē, vīḻcciyum iḻivum avarkaḷ mītu vitikkappaṭṭuviṭṭaṉa. Allāhviṉ kōpattilum (avarkaḷ) cārntu viṭṭārkaḷ. Meyyākavē avarkaḷ allāhvuṭaiya vacaṉaṅkaḷai nirākarittatum, niyāyamiṉṟi iṟaittūtarkaḷaik kolai ceytu vantatum itaṟkuk kāraṇamākum. I(vvaḷavu periya kuṟṟaṅkaḷai avarkaḷ ceyyumpaṭi nērnta)taṟkuk kāraṇam: Avarkaḷ (allāhviṉ kaṭṭaḷaikaḷukku) māṟu ceytaṉar. Mēlum, varampu mīṟikkoṇṭiruntaṉar
Jan Turst Foundation
Innum, "musave! Ore vitamana unavai nankal cakikka mattom. Atalal, pumi vilaivikkum atan kiraiyaiyum, atan vellarikkayaiyum, atan kotumaiyaiyum, atan paruppaiyum, atan venkayattaiyum enkalukku velippatuttittarumaru un iraivanitam enkalukkakak kelum" enru ninkal kura, "nallataka etu irukkirato, atarku patilaka mikattalvanatai ninkal marrik kol(la natu)kirirkala? Ninkal etenum oru pattanattil iranki vitunkal; anku ninkal ketpatu niccayamaka unkalukkuk kitaikkum" enru avar kurinar. Varumaiyum ilivum avarkal mitu cattappattu vittana, melum allahvin kopattirkum avarkal alanarkal; itu enenral titamakave avarkal allahvin vacanankalai nirakarittum, aniyayamaka avarkal napimarkalaik kolai ceytu vantatumtan. Inta nilai avarkal (allahvukkup paniyatu) maru ceytu vantatum, (allah vititta) varampukalai mirikkonteyiruntatinalum erpattatu
Jan Turst Foundation
Iṉṉum, "mūsāvē! Orē vitamāṉa uṇavai nāṅkaḷ cakikka māṭṭōm. Ātalāl, pūmi viḷaivikkum ataṉ kīraiyaiyum, ataṉ veḷḷarikkāyaiyum, ataṉ kōtumaiyaiyum, ataṉ paruppaiyum, ataṉ veṅkāyattaiyum eṅkaḷukku veḷippaṭuttittarumāṟu uṉ iṟaivaṉiṭam eṅkaḷukkākak kēḷum" eṉṟu nīṅkaḷ kūṟa, "nallatāka etu irukkiṟatō, ataṟku patilāka mikattāḻvāṉatai nīṅkaḷ māṟṟik koḷ(ḷa nāṭu)kiṟīrkaḷā? Nīṅkaḷ ētēṉum oru paṭṭaṇattil iṟaṅki viṭuṅkaḷ; aṅku nīṅkaḷ kēṭpatu niccayamāka uṅkaḷukkuk kiṭaikkum" eṉṟu avar kūṟiṉār. Vaṟumaiyum iḻivum avarkaḷ mītu cāṭṭappaṭṭu viṭṭaṉa, mēlum allāhviṉ kōpattiṟkum avarkaḷ āḷāṉārkaḷ; itu ēṉeṉṟāl tiṭamākavē avarkaḷ allāhviṉ vacaṉaṅkaḷai nirākarittum, aniyāyamāka avarkaḷ napimārkaḷaik kolai ceytu vantatumtāṉ. Inta nilai avarkaḷ (allāhvukkup paṇiyātu) māṟu ceytu vantatum, (allāh vititta) varampukaḷai mīṟikkoṇṭēyiruntatiṉālum ēṟpaṭṭatu
Jan Turst Foundation
இன்னும், "மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்" என்று நீங்கள் கூற, "நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன, மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek