×

‘‘உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் நம்பாதீர்கள்'' (என்றும் கூறுகின்றனர்). இதற்கு (நபியே!) கூறுவீராக: 3:73 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:73) ayat 73 in Tamil

3:73 Surah al-‘Imran ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 73 - آل عِمران - Page - Juz 3

﴿وَلَا تُؤۡمِنُوٓاْ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمۡ قُلۡ إِنَّ ٱلۡهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤۡتَىٰٓ أَحَدٞ مِّثۡلَ مَآ أُوتِيتُمۡ أَوۡ يُحَآجُّوكُمۡ عِندَ رَبِّكُمۡۗ قُلۡ إِنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ ﴾
[آل عِمران: 73]

‘‘உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் நம்பாதீர்கள்'' (என்றும் கூறுகின்றனர்). இதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘உண்மையான நேர்வழி அல்லாஹ்வின் நேர்வழிதான்.'' (மேலும், அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி) ‘‘உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று (ஒரு வேதம்) மற்றெவருக்கும் கொடுக்கப்படும் என்பதையோ அல்லது அந்த நம்பிக்கையாளர்கள் உங்கள் இறைவன் முன்பாக தர்க்கித்து உங்களை வெற்றி கொள்வார்கள் என்பதையோ நம்பாதீர்கள்!'' (என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘(வேதம் என்னும்) பெரும்பாக்கியம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. அதை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவன், (மனிதர்களின் தகுதியை) நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن, باللغة التاميلية

﴿ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن﴾ [آل عِمران: 73]

Abdulhameed Baqavi
‘‘unkal markkattaip pinparriyavarkalait tavira (marrevaraiyum) ninkal nampatirkal'' (enrum kurukinranar). Itarku (napiye!) Kuruviraka: ‘‘Unmaiyana nervali allahvin nervalitan.'' (Melum, avarkal tankal inattarai nokki) ‘‘unkalukkuk kotukkappattatu ponru (oru vetam) marrevarukkum kotukkappatum enpataiyo allatu anta nampikkaiyalarkal unkal iraivan munpaka tarkkittu unkalai verri kolvarkal enpataiyo nampatirkal!'' (Enrum kurukinranar. Atarku napiye!) Kuruviraka: ‘‘(Vetam ennum) perumpakkiyam niccayamaka allahvin kaiyiltan irukkiratu. Atai avan virumpiyavarkalukke kotukkiran. Allah mika vicalamanavan, (manitarkalin takutiyai) nankarintavan avan
Abdulhameed Baqavi
‘‘uṅkaḷ mārkkattaip piṉpaṟṟiyavarkaḷait tavira (maṟṟevaraiyum) nīṅkaḷ nampātīrkaḷ'' (eṉṟum kūṟukiṉṟaṉar). Itaṟku (napiyē!) Kūṟuvīrāka: ‘‘Uṇmaiyāṉa nērvaḻi allāhviṉ nērvaḻitāṉ.'' (Mēlum, avarkaḷ taṅkaḷ iṉattārai nōkki) ‘‘uṅkaḷukkuk koṭukkappaṭṭatu pōṉṟu (oru vētam) maṟṟevarukkum koṭukkappaṭum eṉpataiyō allatu anta nampikkaiyāḷarkaḷ uṅkaḷ iṟaivaṉ muṉpāka tarkkittu uṅkaḷai veṟṟi koḷvārkaḷ eṉpataiyō nampātīrkaḷ!'' (Eṉṟum kūṟukiṉṟaṉar. Ataṟku napiyē!) Kūṟuvīrāka: ‘‘(Vētam eṉṉum) perumpākkiyam niccayamāka allāhviṉ kaiyiltāṉ irukkiṟatu. Atai avaṉ virumpiyavarkaḷukkē koṭukkiṟāṉ. Allāh mika vicālamāṉavaṉ, (maṉitarkaḷiṉ takutiyai) naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
unkal markkattaip pinparruvorait tavira (veru evaraiyum) nampatirkal" (enrum kurukinranar. Napiye!) Nir kurum; niccayamaka nervaliyenpatu allahvin valiye akum;. Unkalukku (vetam) kotukkappattatupol innoruvarukkum kotukkappatuvata allatu avarkal unkal iraivan mun unkalai mikaittu vituvata?" (Enru avarkal tankalukkul pecik kolkirarkal.) Niccayamaka arutkotaiyellam allahvin kaiyileye ullatu. Atai avan natiyorukku valankukinran; allah vicalamana (kotaiyalippavan; yavarraiyum) nankaripavan enru kuruviraka
Jan Turst Foundation
uṅkaḷ mārkkattaip piṉpaṟṟuvōrait tavira (vēṟu evaraiyum) nampātīrkaḷ" (eṉṟum kūṟukiṉṟaṉar. Napiyē!) Nīr kūṟum; niccayamāka nērvaḻiyeṉpatu allāhviṉ vaḻiyē ākum;. Uṅkaḷukku (vētam) koṭukkappaṭṭatupōl iṉṉoruvarukkum koṭukkappaṭuvatā allatu avarkaḷ uṅkaḷ iṟaivaṉ muṉ uṅkaḷai mikaittu viṭuvatā?" (Eṉṟu avarkaḷ taṅkaḷukkuḷ pēcik koḷkiṟārkaḷ.) Niccayamāka aruṭkoṭaiyellām allāhviṉ kaiyilēyē uḷḷatu. Atai avaṉ nāṭiyōrukku vaḻaṅkukiṉṟāṉ; allāh vicālamāṉa (koṭaiyaḷippavaṉ; yāvaṟṟaiyum) naṉkaṟipavaṉ eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்;. உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?" (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது. அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek