×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் வேட்டையாடி மிருகங்களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவரேனும், அதை வேண்டுமென்ன்ற 5:95 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:95) ayat 95 in Tamil

5:95 Surah Al-Ma’idah ayat 95 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 95 - المَائدة - Page - Juz 7

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقۡتُلُواْ ٱلصَّيۡدَ وَأَنتُمۡ حُرُمٞۚ وَمَن قَتَلَهُۥ مِنكُم مُّتَعَمِّدٗا فَجَزَآءٞ مِّثۡلُ مَا قَتَلَ مِنَ ٱلنَّعَمِ يَحۡكُمُ بِهِۦ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ هَدۡيَۢا بَٰلِغَ ٱلۡكَعۡبَةِ أَوۡ كَفَّٰرَةٞ طَعَامُ مَسَٰكِينَ أَوۡ عَدۡلُ ذَٰلِكَ صِيَامٗا لِّيَذُوقَ وَبَالَ أَمۡرِهِۦۗ عَفَا ٱللَّهُ عَمَّا سَلَفَۚ وَمَنۡ عَادَ فَيَنتَقِمُ ٱللَّهُ مِنۡهُۚ وَٱللَّهُ عَزِيزٞ ذُو ٱنتِقَامٍ ﴾
[المَائدة: 95]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் வேட்டையாடி மிருகங்களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவரேனும், அதை வேண்டுமென்ன்ற கொன்றுவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் அதற்குச் சமமானதை (பரிகாரமாக) ஈடு கொடுக்க வேண்டும். உங்களில் நேர்மையான இருவர் நீங்கள் (ஈடாகக்) கொடுக்கும் பொருள் அதற்குச் சமமெனத் தீர்ப்பளிக்க வேண்டும். இதைக் காணிக்கையாக கஅபாவுக்கு அனுப்பிவிட வேண்டும். அல்லது (அதன் மதிப்புக்கு) ஏழைகளுக்கு உணவு அளிப்பது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். (பரிகாரமளிக்கப் பொருள் இல்லாதவன்) தான் செய்த குற்றத்தின் பலனை அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும். (இதற்கு) முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். எவரேனும் (இத்தகைய குற்றம் செய்ய) மீண்டும் திரும்பி விட்டால் அல்லாஹ் அவனை தண்டிப்பான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (குற்றவாளிகளை) தண்டிப்பவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا﴾ [المَائدة: 95]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Ninkal ihram anintirukkum camayattil vettaiyati mirukankalaik kollatirkal. Unkalil evarenum, atai ventumennra konruvittal atu, matu, ottakam akiyavarril atarkuc camamanatai (parikaramaka) itu kotukka ventum. Unkalil nermaiyana iruvar ninkal (itakak) kotukkum porul atarkuc camamenat tirppalikka ventum. Itaik kanikkaiyaka ka'apavukku anuppivita ventum. Allatu (atan matippukku) elaikalukku unavu alippatu kontu parikaram ceyya ventum. (Parikaramalikkap porul illatavan) tan ceyta kurrattin palanai anupavippatarkaka (ennikkaiyil) atarkuc camamana nonpukal norka ventum. (Itarku) mun natantavarrai allah mannittu vittan. Evarenum (ittakaiya kurram ceyya) mintum tirumpi vittal allah avanai tantippan. Allah (anaivaraiyum) mikaittavan, (kurravalikalai) tantippavan avan
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ ihrām aṇintirukkum camayattil vēṭṭaiyāṭi mirukaṅkaḷaik kollātīrkaḷ. Uṅkaḷil evarēṉum, atai vēṇṭumeṉṉṟa koṉṟuviṭṭāl āṭu, māṭu, oṭṭakam ākiyavaṟṟil ataṟkuc camamāṉatai (parikāramāka) īṭu koṭukka vēṇṭum. Uṅkaḷil nērmaiyāṉa iruvar nīṅkaḷ (īṭākak) koṭukkum poruḷ ataṟkuc camameṉat tīrppaḷikka vēṇṭum. Itaik kāṇikkaiyāka ka'apāvukku aṉuppiviṭa vēṇṭum. Allatu (ataṉ matippukku) ēḻaikaḷukku uṇavu aḷippatu koṇṭu parikāram ceyya vēṇṭum. (Parikāramaḷikkap poruḷ illātavaṉ) tāṉ ceyta kuṟṟattiṉ palaṉai aṉupavippataṟkāka (eṇṇikkaiyil) ataṟkuc camamāṉa nōṉpukaḷ nōṟka vēṇṭum. (Itaṟku) muṉ naṭantavaṟṟai allāh maṉṉittu viṭṭāṉ. Evarēṉum (ittakaiya kuṟṟam ceyya) mīṇṭum tirumpi viṭṭāl allāh avaṉai taṇṭippāṉ. Allāh (aṉaivaraiyum) mikaittavaṉ, (kuṟṟavāḷikaḷai) taṇṭippavaṉ āvāṉ
Jan Turst Foundation
Iman kontavarkale! Ninkal ihram utai ututtiyavarkalaka irukkum nilaiyil vettai(yati)p piranikalaik kollatirkal;. Unkalil yaravatu oruvar ventumenre ataik konral, (atu, matu, ottakai ponra) kalnataikaliliruntu avar konratarku camamana onrai(p parikaramaka) itakak kotukka ventiyatu. Atarku unkalil nitamutaiya iruvar tirppalikka ventum. Atu kahpavai ataiya ventiya kurpaniyakum. Allatu parikaramaka elaikalukku unavalikka ventum, allatu (parikaramalikka etum illaiyayin) tanatuvinaiyin palanai anupavippatarkaka atarkuc camamana nonpukal norpatu (atarku itakum;). Munnal natantatai allah mannittu vittan, evar mintum (itaic) ceyvaro allah avarai vetanai ceyvan, allah (yavaraiyum) mikaittavanakavum, (kurram ceyvorukkut takka) tantanai kotukka uriyonakavum irukkinran
Jan Turst Foundation
Īmāṉ koṇṭavarkaḷē! Nīṅkaḷ ihrām uṭai uṭuttiyavarkaḷāka irukkum nilaiyil vēṭṭai(yāṭi)p pirāṇikaḷaik kollātīrkaḷ;. Uṅkaḷil yārāvatu oruvar vēṇṭumeṉṟē ataik koṉṟāl, (āṭu, māṭu, oṭṭakai pōṉṟa) kālnaṭaikaḷiliruntu avar koṉṟataṟku camamāṉa oṉṟai(p parikāramāka) īṭākak koṭukka vēṇṭiyatu. Ataṟku uṅkaḷil nītamuṭaiya iruvar tīrppaḷikka vēṇṭum. Atu kaḥpāvai aṭaiya vēṇṭiya kurpāṉiyākum. Allatu parikāramāka ēḻaikaḷukku uṇavaḷikka vēṇṭum, allatu (parikāramaḷikka ētum illaiyāyiṉ) taṉatuviṉaiyiṉ palaṉai aṉupavippataṟkāka ataṟkuc camamāṉa nōṉpukaḷ nōṟpatu (ataṟku īṭākum;). Muṉṉāl naṭantatai allāh maṉṉittu viṭṭāṉ, evar mīṇṭum (itaic) ceyvārō allāh avarai vētaṉai ceyvāṉ, allāh (yāvaraiyum) mikaittavaṉākavum, (kuṟṟam ceyvōrukkut takka) taṇṭaṉai koṭukka uriyōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்;. உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது. அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும். அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும். அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;). முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek