×

கணவனுள்ள பெண்களையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்வது விலக்கப் பட்டுள்ளது). (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு 4:24 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:24) ayat 24 in Tamil

4:24 Surah An-Nisa’ ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 24 - النِّسَاء - Page - Juz 5

﴿۞ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۖ كِتَٰبَ ٱللَّهِ عَلَيۡكُمۡۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَآءَ ذَٰلِكُمۡ أَن تَبۡتَغُواْ بِأَمۡوَٰلِكُم مُّحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَۚ فَمَا ٱسۡتَمۡتَعۡتُم بِهِۦ مِنۡهُنَّ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةٗۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا تَرَٰضَيۡتُم بِهِۦ مِنۢ بَعۡدِ ٱلۡفَرِيضَةِۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا ﴾
[النِّسَاء: 24]

கணவனுள்ள பெண்களையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்வது விலக்கப் பட்டுள்ளது). (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர. (இவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம்.) இவை உங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வங்களின் மூலம் (திருமணக் கட்டணமாகிய ‘மஹரைக்' கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பத்தினித்தனம் உள்ளவர்களாக இருக்கவேண்டும், விபசாரர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவர்களோடு வீடு கூடிவிட்டீர்களோ அவர்களுக்கு குறிப்பிட்ட ‘மஹரை' அவர்களிடம் (குறைவின்றி கண்டிப்பாக) நீங்கள் கொடுத்துவிடுங்கள். எனினும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர் (அதைக் குறைக்கவோ கூட்டவோ) நீங்கள் இருவரும் சம்மதப்பட்டால் அதனால் உங்கள் மீது ஒரு குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், (உங்கள் செயலை) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم, باللغة التاميلية

﴿والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم﴾ [النِّسَاء: 24]

Abdulhameed Baqavi
Kanavanulla penkalaiyum (ninkal tirumanam ceytukolvatu vilakkap pattullatu). (Eninum, nirakarippavarkalutan nikalnta poril pitikkappattu unkal atikkattil irukkum) atimaip penkalait tavira. (Ivarkalai ninkal tirumanam ceytukollalam.) Ivai unkal mitu vitikkappatta allahvin kattalaiyakum. Merkurappatta penkalait tavira marra penkalai unkal celvankalin mulam (tirumanak kattanamakiya ‘maharaik' kotuttu cattaritiyaka tirumanam ceyyat) tetikkolvatu unkalukku anumatikkappattullatu. Ninkal pattinittanam ullavarkalaka irukkaventum, vipacararkalaka irukkak kutatu. Ninkal tirumanam ceytukonta penkalil evarkalotu vitu kutivittirkalo avarkalukku kurippitta ‘maharai' avarkalitam (kuraivinri kantippaka) ninkal kotuttuvitunkal. Eninum, maharaik kurippittatan pinnar (ataik kuraikkavo kuttavo) ninkal iruvarum cam'matappattal atanal unkal mitu oru kurramillai. Niccayamaka allah, (unkal ceyalai) nankarintavanaka, nanamutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
Kaṇavaṉuḷḷa peṇkaḷaiyum (nīṅkaḷ tirumaṇam ceytukoḷvatu vilakkap paṭṭuḷḷatu). (Eṉiṉum, nirākarippavarkaḷuṭaṉ nikaḻnta pōril piṭikkappaṭṭu uṅkaḷ ātikkattil irukkum) aṭimaip peṇkaḷait tavira. (Ivarkaḷai nīṅkaḷ tirumaṇam ceytukoḷḷalām.) Ivai uṅkaḷ mītu vitikkappaṭṭa allāhviṉ kaṭṭaḷaiyākum. Mēṟkūṟappaṭṭa peṇkaḷait tavira maṟṟa peṇkaḷai uṅkaḷ celvaṅkaḷiṉ mūlam (tirumaṇak kaṭṭaṇamākiya ‘maharaik' koṭuttu caṭṭarītiyāka tirumaṇam ceyyat) tēṭikkoḷvatu uṅkaḷukku aṉumatikkappaṭṭuḷḷatu. Nīṅkaḷ pattiṉittaṉam uḷḷavarkaḷāka irukkavēṇṭum, vipacārarkaḷāka irukkak kūṭātu. Nīṅkaḷ tirumaṇam ceytukoṇṭa peṇkaḷil evarkaḷōṭu vīṭu kūṭiviṭṭīrkaḷō avarkaḷukku kuṟippiṭṭa ‘maharai' avarkaḷiṭam (kuṟaiviṉṟi kaṇṭippāka) nīṅkaḷ koṭuttuviṭuṅkaḷ. Eṉiṉum, maharaik kuṟippiṭṭataṉ piṉṉar (ataik kuṟaikkavō kūṭṭavō) nīṅkaḷ iruvarum cam'matappaṭṭāl ataṉāl uṅkaḷ mītu oru kuṟṟamillai. Niccayamāka allāh, (uṅkaḷ ceyalai) naṉkaṟintavaṉāka, ñāṉamuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
Innum (poril pitipattu unkal ataravilirukkum) atimaip penkalait tavira, kanavanulla penkalai ninkal manamutippatu vilakkappattullatu. (Ivaiyanaittum) allah unkal mitu vitiyakkiyavaiyakum. Ivarkalait tavira, marrap penkalai, tavarana muraiyil inpam anupavikkamal, avarkalukku unkal celvankaliliruntu (maharaka) kotuttut (tirumanam ceyyat) tetik kolvatu unkalukku anumatikkappattullatu. Enave ivvaru (cattappurvamaka manantu konta) penkalitamiruntu ninkal cukam anupavippatal avarkalukkaka (vitikkappatta mahar)tokaiyaik katamaiyaka kotuttu vitunkal. Eninum maharai peci mutittapin atai(k kuttavo allatu kuraikkavo) iruvarum cam'matittuk kontal unkal mel kurramakatu - niccayamaka allah nankarintonum, nanamutaiyonumaka irukkiran
Jan Turst Foundation
Iṉṉum (pōril piṭipaṭṭu uṅkaḷ ātaravilirukkum) aṭimaip peṇkaḷait tavira, kaṇavaṉuḷḷa peṇkaḷai nīṅkaḷ maṇamuṭippatu vilakkappaṭṭuḷḷatu. (Ivaiyaṉaittum) allāh uṅkaḷ mītu vitiyākkiyavaiyākum. Ivarkaḷait tavira, maṟṟap peṇkaḷai, tavaṟāṉa muṟaiyil iṉpam aṉupavikkāmal, avarkaḷukku uṅkaḷ celvaṅkaḷiliruntu (maharāka) koṭuttut (tirumaṇam ceyyat) tēṭik koḷvatu uṅkaḷukku aṉumatikkappaṭṭuḷḷatu. Eṉavē ivvāṟu (caṭṭappūrvamāka maṇantu koṇṭa) peṇkaḷiṭamiruntu nīṅkaḷ cukam aṉupavippatāl avarkaḷukkāka (vitikkappaṭṭa mahar)tokaiyaik kaṭamaiyāka koṭuttu viṭuṅkaḷ. Eṉiṉum maharai pēci muṭittapiṉ atai(k kūṭṭavō allatu kuṟaikkavō) iruvarum cam'matittuk koṇṭāl uṅkaḷ mēl kuṟṟamākātu - niccayamāka allāh naṉkaṟintōṉum, ñāṉamuṭaiyōṉumāka irukkiṟāṉ
Jan Turst Foundation
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek