×

(நபியே! போர் செய்ய உம்முடன் வராது) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகள் உம்மிடம் வந்து ‘‘நாங்கள் 48:11 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:11) ayat 11 in Tamil

48:11 Surah Al-Fath ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 11 - الفَتح - Page - Juz 26

﴿سَيَقُولُ لَكَ ٱلۡمُخَلَّفُونَ مِنَ ٱلۡأَعۡرَابِ شَغَلَتۡنَآ أَمۡوَٰلُنَا وَأَهۡلُونَا فَٱسۡتَغۡفِرۡ لَنَاۚ يَقُولُونَ بِأَلۡسِنَتِهِم مَّا لَيۡسَ فِي قُلُوبِهِمۡۚ قُلۡ فَمَن يَمۡلِكُ لَكُم مِّنَ ٱللَّهِ شَيۡـًٔا إِنۡ أَرَادَ بِكُمۡ ضَرًّا أَوۡ أَرَادَ بِكُمۡ نَفۡعَۢاۚ بَلۡ كَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرَۢا ﴾
[الفَتح: 11]

(நபியே! போர் செய்ய உம்முடன் வராது) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகள் உம்மிடம் வந்து ‘‘நாங்கள் உம்முடன் வர எங்கள் பொருள்களும் எங்கள் குடும்பங்களும் எங்களுக்கு அவகாசமளிக்கவில்லை'' என்று (பொய்யாகக்) கூறி, ‘‘(இறைவனிடம்) நீர் எங்களுக்கு மன்னிப்புக் கோருவீராக!'' என்று கூறுவார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தங்கள் நாவுகளால் கூறுகின்றனர். ஆகவே, (நபியே!) (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீமை செய்ய நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மை செய்ய நாடினாலும் அதில் எதையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக உங்களுக்குத் தடுத்து விடக்கூடியவன் யார்? மாறாக, நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلونا فاستغفر لنا يقولون بألسنتهم, باللغة التاميلية

﴿سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلونا فاستغفر لنا يقولون بألسنتهم﴾ [الفَتح: 11]

Abdulhameed Baqavi
(napiye! Por ceyya um'mutan varatu) pin tankivitta nattuppurattu arapikal um'mitam vantu ‘‘nankal um'mutan vara enkal porulkalum enkal kutumpankalum enkalukku avakacamalikkavillai'' enru (poyyakak) kuri, ‘‘(iraivanitam) nir enkalukku mannippuk koruviraka!'' Enru kuruvarkal. Avarkal tankal ullankalil illatavarrait tankal navukalal kurukinranar. Akave, (napiye!) (Avarkalai nokkik) kuruviraka: ‘‘Allah unkalukku oru timai ceyya natinalum allatu avan unkalukku oru nanmai ceyya natinalum atil etaiyum allahvukku virotamaka unkalukkut tatuttu vitakkutiyavan yar? Maraka, ninkal ceypavarrai allah nankarintavanaka irukkiran
Abdulhameed Baqavi
(napiyē! Pōr ceyya um'muṭaṉ varātu) piṉ taṅkiviṭṭa nāṭṭuppuṟattu arapikaḷ um'miṭam vantu ‘‘nāṅkaḷ um'muṭaṉ vara eṅkaḷ poruḷkaḷum eṅkaḷ kuṭumpaṅkaḷum eṅkaḷukku avakācamaḷikkavillai'' eṉṟu (poyyākak) kūṟi, ‘‘(iṟaivaṉiṭam) nīr eṅkaḷukku maṉṉippuk kōruvīrāka!'' Eṉṟu kūṟuvārkaḷ. Avarkaḷ taṅkaḷ uḷḷaṅkaḷil illātavaṟṟait taṅkaḷ nāvukaḷāl kūṟukiṉṟaṉar. Ākavē, (napiyē!) (Avarkaḷai nōkkik) kūṟuvīrāka: ‘‘Allāh uṅkaḷukku oru tīmai ceyya nāṭiṉālum allatu avaṉ uṅkaḷukku oru naṉmai ceyya nāṭiṉālum atil etaiyum allāhvukku virōtamāka uṅkaḷukkut taṭuttu viṭakkūṭiyavaṉ yār? Māṟāka, nīṅkaḷ ceypavaṟṟai allāh naṉkaṟintavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
(napiye! Porukku um'mutan cerntu varamal) pintanki vitta nattup purattu arapikal; "enkalutaiya cottukalum, enkal kutumpankalum (unkalutan varatu) enkalai aluvalkal ullavarkalakki vittana enave, ninkal enkalukkaka mannippuk koruvirkalaka!" Enak kuruvar. Avarkal tankal itayankalil illatatait tam navukalinal kurukirarkal; "allah unkalukku oru ketutiyai natinalum allatu avan unkalukku oru nanmaiyai natinalum, atil etaiyum avanukketiraka unkalukku(t tatukkak kutiya) atikaram perravar yar! Appatiyalla! Allah ninkal ceyvatai nankunarntavanaka irukkiran" enak kurum
Jan Turst Foundation
(napiyē! Pōrukku um'muṭaṉ cērntu varāmal) piṉtaṅki viṭṭa nāṭṭup puṟattu arapikaḷ; "eṅkaḷuṭaiya cottukaḷum, eṅkaḷ kuṭumpaṅkaḷum (uṅkaḷuṭaṉ varātu) eṅkaḷai aluvalkaḷ uḷḷavarkaḷākki viṭṭaṉa eṉavē, nīṅkaḷ eṅkaḷukkāka maṉṉippuk kōruvīrkaḷāka!" Eṉak kūṟuvar. Avarkaḷ taṅkaḷ itayaṅkaḷil illātatait tam nāvukaḷiṉāl kūṟukiṟārkaḷ; "allāh uṅkaḷukku oru keṭutiyai nāṭiṉālum allatu avaṉ uṅkaḷukku oru naṉmaiyai nāṭiṉālum, atil etaiyum avaṉukketirāka uṅkaḷukku(t taṭukkak kūṭiya) atikāram peṟṟavar yār! Appaṭiyalla! Allāh nīṅkaḷ ceyvatai naṉkuṇarntavaṉāka irukkiṟāṉ" eṉak kūṟum
Jan Turst Foundation
(நபியே! போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின்தங்கி விட்ட நாட்டுப் புறத்து அரபிகள்; "எங்களுடைய சொத்துகளும், எங்கள் குடும்பங்களும் (உங்களுடன் வராது) எங்களை அலுவல்கள் உள்ளவர்களாக்கி விட்டன எனவே, நீங்கள் எங்களுக்காக மன்னிப்புக் கோருவீர்களாக!" எனக் கூறுவர். அவர்கள் தங்கள் இதயங்களில் இல்லாததைத் தம் நாவுகளினால் கூறுகிறார்கள்; "அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு(த் தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்! அப்படியல்ல! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக இருக்கிறான்" எனக் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek