وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ (1) கோள்கள் நிறைந்த வானத்தின் மீது சத்தியமாக |
وَالْيَوْمِ الْمَوْعُودِ (2) வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக |
وَشَاهِدٍ وَمَشْهُودٍ (3) சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக |
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ (4) அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்) |
النَّارِ ذَاتِ الْوَقُودِ (5) அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்) |
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ (6) அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில் |
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ (7) நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள் |
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ (8) (நம்பிக்கை கொண்ட) அவர்களில் ஒரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர் |
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ (9) வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அந்த பாவிகள் அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்திற்கும் சாட்சி ஆவான் |
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ (10) ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்தி பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. மேலும், (அவர்கள் நம்பிக்கையாளர்களை நெருப்பிட்டவாறு) அவர்களுக்கும் பொசுக்குகின்ற வேதனையுண்டு |
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ (11) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. இதுதான் மாபெரும் வெற்றி |
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ (12) (நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது) |
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ (13) நிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான் |
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ (14) அவன்தான் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், மிக நேசிப்பவனும் ஆவான் |
ذُو الْعَرْشِ الْمَجِيدُ (15) (அவன்தான்) அர்ஷுடையவன், மகா கீர்த்தியுடையவன் |
فَعَّالٌ لِّمَا يُرِيدُ (16) தான் விரும்பியதையெல்லாம் செய்யக் கூடியவன் |
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ (17) (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு எட்டியதா? (யாருடைய படைகள்) |
فِرْعَوْنَ وَثَمُودَ (18) ஃபிர்அவ்ன், ஸமூதுடைய (படைகள்) |
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ (19) எனினும், இந்நிராகரிப்பவர்கள் (குர்ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (முனைந்து) கிடக்கின்றனர் |
وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ (20) அல்லாஹ்வோ, அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறான் |
بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ (21) (இது கவியல்ல.) மாறாக, இது கீர்த்திமிக்க குர்ஆன் |
فِي لَوْحٍ مَّحْفُوظٍ (22) (இது) லவ்ஹுல் மஹ்பூளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன) |