وَالْمُرْسَلَاتِ عُرْفًا (1) நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக |
فَالْعَاصِفَاتِ عَصْفًا (2) இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக |
وَالنَّاشِرَاتِ نَشْرًا (3) (மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக |
فَالْفَارِقَاتِ فَرْقًا (4) (உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக |
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا (5) மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக |
عُذْرًا أَوْ نُذْرًا (6) மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக |
إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ (7) நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும் |
فَإِذَا النُّجُومُ طُمِسَتْ (8) அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும் |
وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ (9) அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும் |
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ (10) அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும் |
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ (11) அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள் |
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ (12) (இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா) |
لِيَوْمِ الْفَصْلِ (13) தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான் |
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ (14) (நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா |
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ (15) (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான் |
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ (16) (அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா |
ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ (17) அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம் |
كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ (18) (அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம் |
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ (19) ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான் |
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ (20) ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா |
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ (21) அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம் |
إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ (22) அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம் |
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ (23) பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர் |
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ (24) ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான் |
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا (25) பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா |
أَحْيَاءً وَأَمْوَاتًا (26) பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா |
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا (27) அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம் |
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ (28) (நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான் |
انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ (29) ‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள் |
انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ (30) மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்) |
لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ (31) அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது |
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ (32) (எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும் |
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ (33) அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும் |
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ (34) (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான் |
هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ (35) இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள் |
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ (36) மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது |
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ (37) (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான் |
هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ (38) இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம் |
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ (39) ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்) |
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ (40) (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான் |
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ (41) நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள் |
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ (42) அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு |
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ (43) (அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்) |
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (44) இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம் |
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ (45) (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான் |
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ (46) (இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான் |
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ (47) (இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான் |
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ (48) அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள் |
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ (49) (அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான் |
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ (50) இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ |