وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ (1) (அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக |
وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ (2) பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக |
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ (3) ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக |
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ (4) (மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன |
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ (5) ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து |
وَصَدَّقَ بِالْحُسْنَىٰ (6) (இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ |
فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ (7) அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம் |
وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ (8) எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது |
وَكَذَّبَ بِالْحُسْنَىٰ (9) (இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ |
فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ (10) அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம் |
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ (11) அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (ஒரு) பயனுமளிக்காது |
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ (12) நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பது நம்மீதுதான் கடமையாகும் |
وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ (13) நிச்சயமாக இம்மையும், மறுமையும் நமக்கே சொந்தமானவை |
فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ (14) (மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன் |
لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى (15) மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான் |
الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ (16) அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான் |
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى (17) இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார் |
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ (18) அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார் |
وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ (19) தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது |
إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ (20) இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்) |
وَلَسَوْفَ يَرْضَىٰ (21) (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார் |