تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (1) (மனிதர்களே! வானம் பூமி உடைய) ஆட்சி எல்லாம் எவன் கையில் இருக்கிறதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவற்றைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன் |
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ (2) உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன் ஆவான் |
الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۖ مَّا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَٰنِ مِن تَفَاوُتٍ ۖ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ (3) அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தவன். (மனிதனே!) அந்த ரஹ்மானுடைய படைப்பில் நீ ஒரு ஒழுங்கீனத்தையும் காணமாட்டாய். மற்றொரு முறை (அதைக் கவனித்துப்)பார். அதில் ஒரு பிளவை நீ காண்கிறாயா |
ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ (4) (பின்னும்) மேலும் இரு முறைப் பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்த போதிலும் ஒரு குறையையும் காண முடியாது.) உன் பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும் |
وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ (5) நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ளவர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். மேலும், அவற்றை ஷைத்தான்களுக்கு ஓர் எறிகல்லாகவும் அமைத்தோம். இன்னும் அவர்களுக்கு நரக வேதனையையும் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம் |
وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ (6) இன்னும் எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு நரக வேதனையுண்டு. அது மகாகெட்ட செல்லுமிடமாகும் |
إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ (7) அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் கொதி சப்தத்தைக் கேட்பார்கள் |
تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ ۖ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ (8) அது கோபத்தால் வெடித்து விடுவதைப்போல் குமுறிக் கொண்டிருக்கும். அதில் ஒரு கூட்டத்தினர் எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலாளர் அவர்களை நோக்கி (‘‘இவ்வேதனையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் உங்களிடம் வரவில்லையா'' என்று கேட்பார்கள் |
قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ (9) அதற்கவர்கள் ‘‘மெய்தான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். எனினும், நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் (உங்கள் மீது) எதையும் இறக்கிவைக்கவே இல்லை. நீங்கள் பெரும் வழிகேட்டிலே தவிர இருக்கவில்லை என்று (அவர்களை நோக்கி) நாங்கள் கூறினோம்'' என்று கூறுவார்கள் |
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ (10) இன்னும் ‘‘(அத்தூதர்களின் வார்த்தைகளுக்கு) நாங்கள் செவிசாய்த்து அவற்றை நாங்கள் சிந்தித்திருந்தால், நாங்கள் நரகவாசிகளில் ஆகியிருக்கவே மாட்டோம்'' என்று கூறுவார்கள் |
فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِّأَصْحَابِ السَّعِيرِ (11) மேலும் தங்கள் பாவத்தை ஒப்புக் கொள்வார்கள். ஆகவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான் |
إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ (12) நிச்சயமாக எவர்கள் மறைவான சமயத்திலும், தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு |
وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ ۖ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ (13) (மனிதர்களே!) நீங்கள் உங்கள் வார்த்தைகளை இரகசியமாகக் கூறுங்கள் அல்லது பகிரங்கமாகவே கூறுங்கள். (எவ்விதம் கூறியபோதிலும், இறைவன் அதை நன்கறிவான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிபவன் ஆவான் |
أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ (14) (அனைவரையும்) படைத்தவன் (அவற்றில் உள்ளவற்றை) அறிய மாட்டானா? அவனோ அருளுடையவனும் (அனைத்தையும்) வெகு நுட்பமாக அறிந்தவனும் ஆவான் |
هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ ۖ وَإِلَيْهِ النُّشُورُ (15) அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவற்றைப் புசித்துக் கொண்டிருங்கள். (மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது |
أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ (16) வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கிறீர்களா? அந்நேரத்தில் பூமி அதிர்ந்து நடு நடுங்(கிக்) கு(முறு)ம் |
أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖ فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ (17) அல்லது வானத்திலிருப்பவன், உங்கள் மீது கல்மழையை பொழிய மாட்டான் என்று நீங்கள் பயமற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின், எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள் |
وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ (18) இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி (நிராகரித்து)க் கொண்டிருந்தனர். ஆகவே (அவர்களுக்கு) எனது கண்டிப்பு எவ்வாறு இருத்தது என்பதை (நபியே! கவனித்தீரா) |
أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَٰنُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ (19) இறக்கைகளை விரித்துக்கொண்டும், மடக்கிக்கொண்டும் இவர்களுக்கு மேல் ஆகாயத்தில் (அணி) அணியாகச் செல்லும் பறவைகளை இவர்கள் கவனிக்கவில்லையா? ரஹ்மானைத் தவிர, (மற்றெவரும்) அவற்றை (ஆகாயத்தில் தூக்கி)ப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை! நிச்சயமாக அவன் அனைத்தையும் உற்று நோக்குபவன் ஆவான் |
أَمَّنْ هَٰذَا الَّذِي هُوَ جُندٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَٰنِ ۚ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ (20) ரஹ்மானையன்றி உங்களுக்கு உதவி செய்யக்கூடிய படைகள் எவை? இந்நிராகரிப்பவர்கள் வெறும் மாயையிலே தவிர வேறில்லை |
أَمَّنْ هَٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ (21) அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன் உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதையும் இவர்கள் கவனிப்பதில்லை.) மாறாக, இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர் |
أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَىٰ وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (22) என்னே! முகங்குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா? அல்லது நேரான பாதையில் ஒழுங்காகச் செல்பவன் அடைவானா |
قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۖ قَلِيلًا مَّا تَشْكُرُونَ (23) (நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், உள்ளங்களையும் கொடுத்தவன். (அவ்வாறிருந்தும்) நீங்கள் வெகு சொற்பமாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகிறீர்கள் |
قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ (24) (நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருக்கிறான். (மறுமையில்) அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் |
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ (25) (இவ்வாறிருந்தும் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (மறுமையைப் பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்?)'' என்று கேட்கிறார்கள் |
قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُّبِينٌ (26) அதற்கு (நபியே!) கூறுவீராக: (‘‘அது எப்போது வரும் என்ற) ஞானம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது. நான் (அதைப் பற்றிப்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான் |
فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تَدَّعُونَ (27) (நீர் அச்சமூட்டிய) வேதனை (இவர்களை) நோக்கி வருவதை அவர்கள் கண்டால், அந்நிராகரிப்பவர்களுடைய முகங்கள் கருகிவிடும். (இன்னும், அவர்களை நோக்கி) ‘‘(எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தது இதுதான்'' என்றும் கூறப்படும் |
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ (28) (நபியே!) கூறுவீராக: என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் விரும்புகிறபடி) அல்லாஹ் அழித்து விட்டாலும் அல்லது அவன் எங்களுக்கு அருள் புரிந்தாலும் (அது எங்கள் விஷயம். ஆயினும்,) துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிக்கும் உங்களை பாதுகாப்பவர் யார் என்பதை(க் கவனித்து)ப் பார்த்தீர்களா |
قُلْ هُوَ الرَّحْمَٰنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا ۖ فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ (29) (நபியே!) கூறுவீராக: ‘‘அவன்தான் ரஹ்மான். அவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அவனையே நாங்கள் நம்பியும் இருக்கிறோம். ஆகவே, பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள் யாரென்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் |
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ (30) (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால், பிறகு தண்ணீரின் (வேறொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா |