لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ (1) (நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன் |
وَأَنتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ (2) அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில் |
وَوَالِدٍ وَمَا وَلَدَ (3) (மனிதர்களின்) தந்தை மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகள் மீதும் சத்தியமாக |
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ (4) மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம் |
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ (5) (அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா |
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا (6) ‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான் |
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ (7) அவ்வளவு பொருளை ஒருவருமே பார்த்திருக்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ |
أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ (8) (பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ளவில்லை) |
وَلِسَانًا وَشَفَتَيْنِ (9) (பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா) |
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ (10) (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம் |
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ (11) எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை |
وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ (12) (நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா |
فَكُّ رَقَبَةٍ (13) அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது |
أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ (14) அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும் |
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ (15) அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும் |
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ (16) அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும் |
ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ (17) பிறகு, எவர்கள் நம்பிக்கை கொண்டும் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கடைபிடிக்குமாறு நல்லுபதேசம் செய்துகொண்டும், கருணை காட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்துகொண்டும் இருக்கிறார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார் |
أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ (18) இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள் |
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ (19) எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் இடப்பக்கத்தில் இருப்பவர்கள் |
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ (20) அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும் |